வலி தரும் மகாவலி

தண்ணீர் என்றாலே தமிழர்களிற்கு கண்ணீர் தான் போலிருக்கிறது. சங்க காலத்தில் பூம்புகாரை அழித்த கடற்கோளாகட்டும், 2004ல் கடற் புலிகளின் பலத்தை அழித்த ஆழிப்பேரலையாகட்டும், காவேரியை வாட வைக்கும் கன்னடர்களாகட்டும், இப்போது தமிழர் தாயகப் பகுதிகளை கவர முயலும் மகாவலி அபிவிருத்தித் திட்டமாகட்டும், எல்லாமே தண்ணீர் தந்த கண்ணீர் கதைகள் தான். 1961ல் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களான ருNனுP மற்றும் குயுழுவின் அனுசரணையில், இலங்கைத் தீவில் விவசாயத்தைப் பெருக்கவும், நீர் மின்சார திட்டத்தை அறிமுகப்படுத்தி விரிவாக்கவும் என 30 வருட திட்டமாக, மகாவலி அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

1977ல் ஆட்சியைப் பிடித்த ஜெயவர்தனவின் அரசு, ஆறே ஆறு ஆண்டுகளில் மகாவலி திட்டத்தை முழுமையாக முடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு, துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை அமுலாக்கத் தொடங்கியது. காமினி திஸநாயக்காவின் அமைச்சின் கீழ் செயற்படத் தொடங்கிய இந்தத் திட்டத்திற்கு, ஜேர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா, சுவீடன் உட்பட பல முதலாளித்துவ நாடுகள், பாரியளவில் நிதியுதவி வழங்க முன்வந்தன. 1977ல் திறந்த சந்தை பொருளாதார கொள்கையை பின்பற்ற தொடங்கிய இலங்கைக்கு மேற்கத்தைய நாடுகள் வழங்கிய ஊக்கசக்கதியாக துரித மகாவலி திட்டம் அமைந்தது.

1984 ஒக்டோபர் மாதமளவில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பகுதியில் குடியிருந்த தமிழ் விவசாயக் குடும்பங்களை இலங்கையின் பாதுகாப்புப் படையினர் பலவந்தமாக வெளியேற்றினர். செழிப்பான விவசாய பூமியான இந்தப் பகுதிகளில், சிறு சிறு தமிழ்க் கிராமங்களும், நீண்ட கால குத்தகையடிப்படையில் 16 தமிழர்களிற்கு சொந்தமான நிறுவனங்கள் இயக்கிய விவசாய பண்ணைகளும் இருந்தன.

தமிழ் நிறுவனங்கள் நடாத்திய விவசாயப் பண்ணைகளில், நாவலர் பண்ணை, முநவெ குயசஅ, சிலோன் தியேட்டர்ஸ், னுழடடயச குயசஅ என்பன பெரிய நிலப்பரப்புகளில் இயங்கி வந்தன. முநவெ மற்றும் னுழடடயச பண்ணை களில், 1977ல் இடம்பெற்ற இனக்கலவரத்தினால் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் குடியமர்த்தப் பட்டிருந்தனர். 1984ல், னுழடடயச மற்றும் முநவெ பண்ணைகளில் குடியேறிய மலையகத் தமிழர்களை இலங்கை இராணுவம் பஸ்களில் ஏற்றிக் கொண்டு போய், மலையகத்தில் இறக்கிவிட்டது.
வடக்கு கிழக்கு தமிழர்களின் இதயபூமியான மணலாற்றில் தமிழர்களை கொன்றும் அடித்தும் விரட்டி விட்டு, பண்ணைகளை திறந்த சிறைச்சாலைகளாக அறிவித்து விட்டு, தென்னிலங்கை சிறைகளில் இருந்தசிங்களக் கைதிகளைஅவர்களது குடும்பங்களோடு அந்தக்

பண்ணைகளில் இலங்கை அரசு குடியேற்றியது. 1988ல் வெளியான வர்த்தகமானி மூலமாக, மணலாறு என்ற தமிழ்ப்பெயரை தாங்கிய பிரதேசத்தின் பெயர் அதிகாரபூர்வமாக வெலிஓயா என்ற சிங்களப் பெயராகிய தோடு, தனியான பிரதேச செயலகப் பிரிவுமானது (DS Division).

வடக்கு கிழக்கில் தோன்றியிருக்கும் பிரிவினைவாதிகளின் தமிழீழக் குறிக்கோளை முறியடிக்க, வடக்கில் 2 லட்சம் சிங்களவர்களை குடியேற்றுவோம் என்று இலங்கையின் தேசிய பந்தோபஸ்து அமைச்சர் அத்துலத்முதலி இதே காலப்பகுதியில் தான் முழங்கியருந்தார்.

2009ல் யுத்தம் முடிவடைந்த பின்னர், சுமார் 6,000 சிங்களக் குடும்பங்கள் மீண்டும் மணலாற்றில் அரசாங்கத்தால் குடியேற்றப்பட்டார்கள்.

மணலாற்றைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் குடிதண்ணீரில் கலந்திருந்த ஒருவித நச்சுதன்மையால் சிறுநீரகத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படுவதால், குடியேறிய குடும்பங்களிற்கு தூய்மையான குடிநீர் வழங்க 50 மில்லியன் ரூபாய்கள் செலவில் றயவநச pரசகைiஉயவழைn இயந்திரங்கள் மணலாற்றில் நிறுவப்பட்டுள்ளன.

— ஜூட் பிரகாஷ் (Melbourne)

3,674 total views, 3 views today

1 thought on “வலி தரும் மகாவலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *