96 – விமர்சனம்

மாற்றங்கள் வினா …
மாற்றங்களே விடை…
படத்தின் கதையை இதைவிட ரத்தின சுருக்கமாக சொல்லிவிட முடியாது… இந்த இரு வரிகளுடன் படம் ஆரம்பிக்கிறது…

தெளிந்த நீரோடைல ஒரு இலை எப்படி பயணிக்குமோ அப்படி பயணிக்கிறது இந்த படம்..

டைட்டில் கார்ட்ல நன்றினு 3 பேர குறிப்பிடுறாங்க…
இளையராஜா
பாடகி ளு. ஜானகி அம்மா
இயற்கைக்கும் நன்றினு போடுறாங்க…

அந்த இயற்கை காட்சிகள் படத்தோட ஆரம்பத்திலேயே
முடிந்துவிடுகின்றன… ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரம் மற்றும் காட்சிப்படுத்தும் விதம் வெகு இயற்கையாக இருந்தது… அதுனாலவோ என்னமோ இயற்கைக்கும் நன்றி ??…

ராஜாவோட இசை இல்லாமல் காதலா ?? அதுவும் 90 காலகட்டம்னா சொல்லணுமா என்ன? அதே போலதான் ள. ஜானகியும் …
இந்த எவர் கிரீன் காம்பினேஷன் ஒன்னே போதுமே எல்லாரையும் காதல்ல கவுந்தடிச்சு விழவைக்க.. அந்த காம்பினேஷன வச்சு மேஜிக் காட்டிருக்கார் நம்ம இயக்குனர்…

பொதுவாக இரண்டு வகையான படங்கள் நமக்கு பிடிக்கும் …

நம்ம வாழ்க்கையில் நடந்த அல்லது நம்மை சுற்றி நடந்த விஷயத்தை கொஞ்சம் கற்பனை கலந்து சரியாக கொடுப்பது…
நம் வாழ்க்கையில் நடத்த முடியாத விஷயத்தை அதீத கற்பனை கலந்து கொடுப்பது…

இதில் இந்த படம் முதல் வகையைச் சேரும்.. வாழ்க்கையில் எதாவது ஒரு தருணத்திலாவது எல்லோரும் காதல் வயப்படுவதுண்டு. அதனால் இயல்பாக எடுக்கும் காதல் கதை பொதுவாக ஆபு எனப்படும் மினிமம் கேரண்டீ வகையிலாவது வெற்றி பெற்று விடும். காதலில் வெற்றி பெறுபவர்களை விட காதலில் தோல்வி அடைபவர்களே அதிகம் என்ற காரணத்தால் இந்த படத்தை பெரும்பாலனவர்கள் கொண்டாடுகிறார்களோ என்ற சந்தேகம் வந்தது… ஆனால் என்னை பொறுத்தவரை அது மட்டுமே காரணம் இல்லை.

சுது வா இருக்கும் என் தம்பி பரத் அவன் ஷோவோட வெற்றிக்கு காரணமா ஒன்னை சொல்லுவான்… ரேடியோல பேசும் போது கேட்பவர்கள் என்ன கேட்க நினைப்பார்களோ அத பத்தி பேசணும்னு…

அண்ணே .. பக்கத்துல ஆட்டோ சர்ர்ருனு கார இடிக்கிற மாதிரி வருதேன்னு கோபப்படாம ஓட்டுங்க… இந்தா வருது உங்களுக்கு புடிச்ச பாட்டு.
ஐவு குசநைனௌஇ இன்னைக்கு மேனேஜர் எதுக்கு திட்ட போறானோனு குழம்பாம இந்த பாட்ட கேளுங்க…
இப்பிடி நேரடியா கனெக்ட் பண்ற எல்லா விஷயமும் ஈஸியா சக்சஸ் ஆகிடும்னு சொல்லுவான்.

அது மாதிரி நம்மை நேரடியா கனெக்ட் பண்ற பல விஷயங்களின் தொகுப்பே இந்த படம்…

எல்லோரும் ஒரு தடவையாவது நாம் படித்த ஸ்கூலுக்கோ காலேஜுக்கோ திரும்ப போகணும்ங்கிற நினைப்பு வரும். அப்பிடி போகும் போது என்ன என்ன பண்ணுவோமோ அத அப்பிடியே காட்டி இருப்பதே படத்தின் முதல் வெற்றி.

கிளாஸ் போர்டு பிரேம் கீழே உதிர்ந்து இருக்கும் சாக்பீஸ் தூல விரல்ல எடுப்பதாகட்டும் இ பெல்லை கையால தட்டி பார்ப்பதாகட்டும் இ கொடி கம்பத்தை ஒத்த கையால புடிச்சு சுத்தறதாகட்டும் இ காரிடார் ல நடந்து பார்க்கிறதாகட்டும்இ கிளாஸ் பெஞ்சல உட்காந்து பாக்குறதாகட்டும்இ நமக்கு புடிச்ச ஆள் உட்காந்த எடத்துல உட்காந்து பாக்குறதாகட்டும்..
குடுயுஆநுளு போட்டு பாக்குறதாகட்டும்இ லவ்வுன்னு வந்துட்டா பொம்பள பிள்ளைகள் கேஸூவலா கயஉந பண்றதையும் பசங்க நெர்வஸா இருப்பதையும் காட்ற விதமாகட்டும்.. வாட்சாப் குரூப் மெசேஜ்ல “இத பண்ணாதவன் ரத்தம் கக்கி சாவான்”இ னு மீம்ஸ் ஆகட்டும் “னுயi பநவ-வழபநவாநச ய றநநமநனெ எயiபெயனயய” ங்கிற மெசேஜ் ஆகட்டும்-னு பாக்குற ஆடியன்ஸ நேரடியா கனெக்ட் பண்ற பல விசயம்.

நாட்கள் நகர்கின்றனனு சொல்றதுக்கு தமிழ் சினிமா பல காட்சிகளை காட்டிருக்கு… இந்த படத்தில்இ ஹீரோயின் ஒவ்வொரு நாளும் வித விதமான ஹேர்ஸ்டைல் ரூ பூ வைத்து வரும் அழகை அழகாக காட்டிருப்பர் இயக்குனர்…

ப்ளூட் மற்றும் கிட்டார் .. பின்னணி இசைல ஒரு சாம்ராஜ்யம் நடத்தி இருக்கு இந்த ரெண்டு இசைக்கருவி… ராஜாவுக்கு நன்றினு சொன்னது அவர் பாட்டுக்கு மட்டும் அல்ல அவர் பாணி பிஜிஎம்கும் சேர்த்துதான் நினைக்கிறேன்…

சென்சிட்டிவ் சீன்களில் இதயத்துடிப்பு பிஜிஎம் … இதயத்தை திருடாதேஇ காதலுக்கு மரியாதைஇ இதயம்இ இந்த படத்தில் வரும் ராஜாவோட பின்னணி இசை பாணியையே இந்த படத்துல பயன்படுத்திருக்கார் இசை அமைப்பாளர்.

ராஜ மாதிரியே வேற வேற கடரவந பயன்படுத்திஇ எங்கெல்லாம் பிரிவு வருதோ அங்கெல்லாம் நம்ம மனசு கனமாக்குகிறது இந்த கடரவந இசை .
இது இன்னொரு முக்கிய காரணம் நாம படத்தோட ஒன்றி பாக்குறதுக்கு…

கேரக்டர் செலக்ஷன் ஒவ்வொன்னும் செம…
சின்ன வயசு சின்ன வயசு திரிஷா செம க்யூட் ..பாடி லாங்வேஜ்+நஒpசநளளழைளெ எல்லாமே செமையா வருது… அதே போல சின்ன வயசு விஜய் சேதுபதிஇ தேவதர்ஷினி செம யிவ…

20 வருஷம் கழிச்சு திரிஷா விஜய் சேதுபதிய பாக்குறதுக்கு முன்னாடி ஸ்கூல் யூனிபார்ம்லையே இருக்கிற மாதிரி கற்பனை பண்ற விதம்…

காதலி சொன்ன ஒத்த வார்த்த பத்து யானைக்கு சமம்…

நீ எங்க இருக்க?
உன்னை எங்க விட்டேனோ அங்கே தான் இருக்கேன் .

இப்ப கூட எனக்கு ஏதாவது கஷ்டம் வந்தா எனக்கு ஞாபகத்துக்கு வர்றது வநவொ ளவயனெயசன ராமச்சந்திரன் தான்…

எச்சில் பண்ண ஸ்பூன்ல சாப்பிட சொல்றது….
சட்டைல காதலன் வாசனையை ஸ்மெல் பண்றது …
காதலனை அணு அணுவா ரசிப்பது…
இத்தன வருஷமா விர்ஜினா இருப்பது தெரிஞ்சதுக்கு அப்புறம் ரியாக்ட் பண்றதுனு த்ரிஷாவும்…

காதலியின் குடும்ப போட்டோவ பாக்க துடிக்குறதும்…
காதலியை கட்டில படுக்க வச்சுட்டு கீழ படுத்து ரசிப்பதும்…
சரி நீ எப்பிடி இருக்க இப்போ? சந்தோசமா இருக்கியா? னு ஆதங்கமா கேக்குறதுனு விஜய் சேதுபதியும்…

மேல சொன்ன இந்த சில சீன்களே போதும் ரெண்டு பேரோட மனநிலை என்னானு சொல்ல …

ஹீரோக்கு எப்போதும் ஒரு தேடல் இருந்ததுனு படம் ஆரம்பத்துல இருந்தே காட்டி இருப்பது… அதனாலேயே அந்த வேலையையே தன்னோட pசழகநளளழைnஆ ஆக்கிருக்குறமாதிரி காட்டிருப்பதும் செம..

பொதுவா எல்லா விமர்சனத்துலயும் படத்துல இருக்குற ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டா அலசுவோம். இந்த படத்துல அத பத்தியெல்லாம் ரொம்ப பேசாம படத்தை பத்தி மட்டும் பேசுறது ஏன்னாஇ ஒவ்வொரு டெபார்ட்மெண்ட்டும் அவங்க வேலைய ரொம்ப சரியாக செஞ்சுருக்காங்க அதெயெல்லாம் சொன்னோம்னா இத விட இன்னும் மூணு பக்கம் அதிகமா எழுதணும்.. ளுழ ழகக ளஉசநநnஅ ஒதுக்கி வச்சுட்டு ழளெஉசநநnஅ மட்டும் இவ்ளோ சொல்லிருக்கேன். அந்த அளவுக்கு ழளெஉசநநn pசநளநவெயவழைn செம சூப்பர்…
ஒரு லவ் சப்ஜெக்ட இவ்ளோ டீசெண்டா கொடுத்ததுக்கு இயக்குனரை பாராட்டியே ஆகணும் .. பாசில் மாதிரி இன்னொரு இயக்குனர் கிடைத்தது தமிழ் சினிமாக்கு ஒரு பிளஸ்..
மொத்தத்தில்…
காதலிக்காதவர்கள் தங்கள் வாழ்நாளில் இப்பிடி ஒரு உணர்வை மிஸ் பண்ணிட்டோமேனு நினைக்கவும்….
காதலில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் இளமை காலங்களை அசை போட வைக்கவும்…
காதலில் தோல்வியுற்றவர்கள் முன்னாள் காதலியிடம் தனியா பேச நமக்கு இப்பிடி ஒரு வாய்ப்பு கிடைக்காதானு ஏங்கவும்….
வைக்கிறது இந்த 96…

— சீனிவாசன் திருநாவுக்கரசு

850 total views, 2 views today

1 thought on “96 – விமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *