நயன்தாராவின் வெற்றிகள்! வியப்பில் ஜோதிகா!

கதாநாயகர்கள் அளவுக்கு தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார் நயன்தாரா. காதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த படங்கள் அவருக்காகவே ஓடி வசூலை அள்ளிக் குவிக்கின்றன. இதனால் தயாரிப்பாளர்கள் அவரை நம்பி படம் எடுக்கிறார்கள். அவர் கேட்கும் சம்பளத்தை யும் கொடுக்கிறார்கள்.
நயன்தாராவை பார்த்துவிட்டு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்த அனைவரும் வெற்றி பெற்றுவிடவில்லை. ஆனால் நயன்தாராவுக்கு மட்டும் இந்த யுக்தி பலிக்கிறது. அதனால் அவர் தனது சம்பளத்தை ரூ. 5 கோடியாக உயர்த்திவிட்டார். கதாநாயகரை வணங்கும் ரசிகர்களை தன்னையும் கொண்டாட வைத்துள்ளார் நயன்தாரா.
நயன்தாராவின் இந்த பாணி ஜோதிகாவை வியக்க வைத்துள்ளது. நயன்தாரா தனக்கென்று செல்வாக்கை வைத்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார்.

வாழ்வில் முன்னேற கூடுதலாக முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தி லேயே அவர் இருப்பது எளிது அல்ல. தன்னை சுற்றி நகரும் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார் என்கிறார் ஜோதிகா.
ஒரே நாளில் அவர் பல காட்சிகளில் நடிக்கிறார். குறித்த காலத்திற்குள் நடித்து முடித்துவிடுகிறார். இப்படி நடிப்பது கஷ்டம். குறித்த காலத்திற்குள், நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுக்கும் நயன்தாராவை பார்த்தால் வியப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் ஜோதிகா. ஒரு இடைவேளை எடுத்துவிட்டு மீண்டும் நடிக்க வந்துள்ள ஜோதிகா வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகியாகிய நாங்கள் பிரியாணி காட்சிகள், ஒயின் ஷாப் காட்சிகளில் நடிக்க முடியாது. குழந்தை பிறந்த பிறகும் ஹீரோயின்கள் குண்டாக இருக்கக் கூடாது. இளம் ஹீரோக்களுடன் காதல் செய்ய முடியாது. இப்படி பல விஷயங்கள் உள்ளது. அதனால் நல்ல கதை, நடிப்பில் தான் எங்களால் கவனம் செலுத்த முடியும் என்று ஜோதிகா கூறியுள்ளார். இரண்டாம் சுற்றைத் தொடங்கிய ஜோதிகாவுக்கு கணவர் சூர்யா பேராதரவாக உள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் கடந்த 27ம் தேதி வெளியாகி பலதரப்பட்ட விமர்சனத்துடன் கலக்குகிறது. அவரின் அடுத்த படத்தை புதுமுக இயக்குனர் ராஜ் இயக்குகிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

760 total views, 2 views today

2 thoughts on “நயன்தாராவின் வெற்றிகள்! வியப்பில் ஜோதிகா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *