ஒரு மீனால் குரலை உயர்த்தி ஆரவாரம் செய்ய முடியுமா?
மனிதர்களால் தான் ஒருவருடன் உரையாடும் பொழுது குரலை உயர்த்தி, சத்தம் போட்டு, ஆரவாரம் செய்ய முடியும் என்று நீங்கள் இவ்வளவு காலமும் நினைத்திருந்தால், அது முற்றிலும் தவறான எண்ணம் ஆகும். விலங்குகளும் கூட, அதிலும் குறிப்பாக மீன்களாலும் கத்தி ஆரவாரம் செய்ய முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? அட, இது என்னடா ரீலு விடுறேன் என்று யோசிக்கின்றீர்கள் என்றால் கண்டிப்பாகத் தொடர்ந்து படியுங்கள்! (மீன்)
ஒரு பிரச்சனை அல்லது சண்டை வந்தாலே போதும், நாங்கள் எல்லொருமே நமது குரலை உயர்த்தி சத்தமாகப் பேச ஆரம்பித்து விடுவோம். இது நான் மட்டும் இல்லை, இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் செய்யும் ஒரு விஷயம் ஆகும். ஆனால், சில விஞ்ஞானிகள் செய்த ஆய்வுகளின்படி சில வகை மீன்களாலும் கூட இவ்வாறு குரலை உயர்த்தி ஆரவாரம் செய்ய முடியுமாம். குறிப்பாக டீடயஉமவயடை ளூiநெசள என்று அழைக்கப்படும் மீன்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்த வியப்பூட்டும் விஷயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மீன்களைப் பிடித்து ஒரு தொட்டிக்குள் அடைத்த பின்னர் இந்த மீன்கள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை மீன்பிடி உயிரியல் ஆய்வாளர்கள் அறிய முயன்றனர்.
ஒரு சில நாட்களாகச் செய்யப்பட்ட இந்த ஆய்வில் பெண் இன மீன் எவ்வித ஒலியையும் எழுப்பவில்லை என்றாலும், ஆண் இன மீன் இரண்டு வகையான ஒலிகளை எழுப்பியது. முதல் வகை ஒலி ஒரு வித பூனையின் மெல்லிய கத்தலின் ஒலி போன்று இருந்தது. ஆனால் இரண்டாவது வகை ஒலி சற்று பலமாக, ஒரு கதவில் தட்டும் போது ஏற்படும் ஒலி போன்று இருந்ததாக இவர்கள் கூறினர். சரி, இந்த இரு ஒலிகளையும் இந்த மீன்கள் ஏற்படுத்துகின்றன. அது இருக்கட்டும், ஆனால் அது ஏன் என்று தெரியுமா? முதல் வகை ஒலி பொதுவாக, ஆண் மீன் பெண் மீனைக் கவர்வதற்காக ஏற்பட்த்துகின்றது, இதுவே அந்த இரண்டாவது வகை ஒலியை மற்றொரு ஆண் மீனுடன் தன் இருப்பிடத்திற்காகவோ அல்லது துணைக்காகவோ சண்டையிடும் பொழுது எழுப்புவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஆச்சரியமாக இல்லையா?
மனிதர்களால் மட்டும் தான் எல்லாமே பண்ண முடியும் என்கிற கருத்து தப்பானது என்பதற்கு இந்த வகை மீனும் ஒரு உதாரணம் ஆகிவிட்டது, அல்லவா?
748 total views, 1 views today
3 thoughts on “ஒரு மீனால் குரலை உயர்த்தி ஆரவாரம் செய்ய முடியுமா?”