பெரியவர்களிடம் பிடித்ததும் பிடிக்காததும்

பயத்தின் காரணத்தினால் அவர்கள் கண்டிக்கின்றனர்!

பெரியவர்கள் என்றாலே மனதில் தோன்றுபவர்கள் யார்? அம்மாவும் அப்பாவும். இவர்களிடம் என்ன பிடிக்காமல் இருக்கும். ஒன்று மில்லையல்லவா?! நல்லதையே நினைப்பவர்களிடம் வேறு என்ன இருக்க முடியும். பிடித்தது மட்டுமே இருக்கும்.
ஆம் வாழ்க்கையை நீண்ட காலம் அனுபவித்தவர்கள் அவர்கள். அவர்கள் கூறும் அறிவுரைகள் கேட்பது பிடிக்கும். வாழ்ந்தவர்களிடம் வாழும் முறையினைக் கேட்டு அறிந்துகொள்வது பிடிக்கும்.

சரி பிழைகளைக் கூறும் முறை பிடிக்கும். பாதை தவறும் போது சரியான பாதைக்குக் கொண்டு செல்வதும் பிடிக்கும்.
சிறியவர்களிடம் அன்போடு காட்டும் அக்கறை பிடிக்கும். ஆறுதலாகப் பேசும் வார்த்தைகள் பிடிக்கும்.
கடினமாகக் கூறும் இடத்தில் கடுஞ்சொல்லும் பிடிக்கும்.
பிள்ளைகளைப் பற்றி கவலைப்படுவதும் அவர்கள் நினைவாக இருப்பதும் பிடிக்கும்.
பிடிக்காததும் சிலவற்றைக் கூறலாம்.

பிள்ளைகளின் மீது அளவு கடந்த பாசம் இருப்பதனால் சந்தேகிக்கின்றனர். கவலைக்குரிய விடயம். பிழைகள் செய்யவில்லையென்றாலும் தவறாக நினைத்துத் தண்டனை கொடுத்து விடுகிறார்கள்.
கண்டிப்பாக இருப்பது மனதுக்கு வேதனை தருகிறது. கண்டிக்க வேண்டும் ஆனால் அளவோடு இருப்பது நன்று.
சில நேரங்களில் அவர்கள் வாழ்ந்த முறையினை பிள்ளைகளிடம் திணிக்க முயலுவார்கள். எல்லோருக்கும் அக் காலத்து முறைகள் பிடிக்காதல்லவா. அந்நேரங்களில் பெரியவர்களைப் பிடிக்காது. அவர்கள் கூறுவது பிழையாகவே இருக்கும். நாம் பெரியவர்களின் இடத்தில் இருக்கும்போது தான் நாமும் உணருவோம்.

பெரியவர்களையும் பிழை சொல்ல முடியாது. பயத்தின் காரணத்தினால் அவர்கள் கண்டிக்கின்றனர்.
பெரியவர்களும் சரி சிறியவர்களும் சரி புரிந்து நடந்தால் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பில்லை.
வேலை இடங்களில் பெரியவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்கள் எல்லாம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் புதிதாக சில முறை கைளைக் கொண்டு வரும் பொழுது ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பழைய முறைகளையே செய்வார்கள்.

ஆசிரியப் பணியைப் பற்றி பார்ப்போம். முதிய ஆசிரியர்கள் எவ்வளவு மாணவர்களை உருவாக்கியிருப்பார்கள். அவர்களிடம் இருந்து கற்கவேண்டியவை நிறைய உள்ளன. ஆனால் புதிய முறையில் கல்வியைக் கற்பிப்பது கடினம் என்பார்கள். அதாவது நவீன முறையில் கற்பிப்பது. இளைய ஆசிரியர்கள் அம்முறையினை மேற்கொள்கின்றனர்.
மாணவர்களுக்கும் பிடிக்கின்றது. முதியவர்களின் முறை பிழை என்று கூறவில்லை. ஆனால் காலத்துக்கு ஏற்ப நாமும் மாறிக்கொள்ள வேண்டும்.

பெரியவர்களை சிறியவர்களும் சிறியவர்களை பெரியவர்களும் புரிந்து நடந்தால் எப்பொழுதும் நன்று. இருவரும் அவர்களின் அனுபவங்களையும் சிந்தனைகளையும் பகிர்ந்து கொண்டால் யாவுமே நலமாக இருக்கும்.
பெரியவர்களை மதித்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அதேசமயம் பெரியவர்கள் இளையவர்களின் திறமைகளுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் தடையாக நிற்காது வழிவிடுதல் வேண்டும். அவர்களை அவர்களாக நிமிர்ந்து நிற்கும் தன்னம்பிக்கையை விதைக்கவேண்டும்.

வாழ்க்கை என்பது ஒரு மருதனோட்டம். அதில் ஓடிவந்து எம்மிடம் சேர்த்தபொருள் பெறுமதிமிக்கது, என்பதனை இளையவர் உணர்ந்து, அடுத்த கட்டப் பாச்சலுக்கு தம்மைத் தயார்செய்து கொள்வேண்டும்.

–றஜினா தருமராஜா

626 total views, 1 views today

1 thought on “பெரியவர்களிடம் பிடித்ததும் பிடிக்காததும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *