மெல்ல மெல்ல மெலிகிறார்

கமல் கமல் ஹாஸன் தனது அலுவலக படியில் இருந்து தவறி விழுந்ததில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த சிகிச்சைக்கு பிறகு கமல் ஹாஸன் வெயிட் போட்டுவிட்டார். இந்நிலையில் Indian 2 படத்திற்காக வெயிட்டை குறைக்க வேண்டும் என்று ஷங்கர் கமலிடம் தெரிவித்துள்ளார். ஷங்கர் கூறியதை அடுத்து அமெரிக்காவில் இருந்து டிரெய்னரை வரவழைத்து உடல் எடையை குறைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் கமல் ஹாஸன். Indian 2 படத்தில் கமலை மெல்லியவராக காட்ட விரும்புகிறார் ஷங்கர். படத்தில் கமலை முன்பு போன்று மெல்லியவராகப் பார்க்கலாம். கமல் தினமும் உடற்பயிற்சியும், யோகாவும் செய்யும் பழக்கம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கும் என்று ஷங்கர் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அதற்குள் கமல் ஹாஸன் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். கமல் ஓராண்டு காலம் படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம். இந்தியன் 2 படத்தை 2020ம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். ஒளிப்பதிவு பொறுப்பை ரவி வர்மன் ஏற்றுக் கொண்டுள்ளார். கமல் ஹாஸன் அரசியலுக்கு வந்த பிறகு Indian 2 படத்தில் நடிப்பதால் இதில் ஏகப்பட்ட அரசியல் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.படத்தில் நயந்தரா நடிக்கின்றார்?
1 thought on “மெல்ல மெல்ல மெலிகிறார்”