96, காமத்திற்கும் அப்பால் ஒரு காதல்
96 படம் பார்த்தேன். காதல் ………………
அதுஇ காதலன் காதலி ஒருவரையொருவர் காதலிக்கும் முறை வேறானது.ஒவ்வொன்றும் தனித்துவமானது .ஆழ வேரூன்றி அறுகம்புல்போல் படர்ந்து பிடுங்கி எடுக்க முடியாத காதல் மௌனத்திலும் காதலாகி நிற்கின்றது.96 படம் அதைத்தான் சொல்லியது.
பள்ளிக்கூட வாழ்க்கையில் ஏற்படும் காதல் நிலையற்றது என்ற வாதம் பொய்யானது.உண்மையில் இந்தப் படத்தில் இராமச்சந்திரன் என்ற ராமுக்கு ஜானகிதேவி என்ற ஜானுக்கு ஏற்படும் ஈர்ப்பு காதலாக மாறுகிறது.ஆனால் அந்தக் காதல் வெளிப்படையாக பலருக்கு தெரியாவிட்டாலும் சிலருக்கு தெரிந்திருக்கிறது.உள்ளுக்குள்ளே அது அசைக்கமுடியாது இறுகிப் பரந்து நிற்கிறது.
எத்தனையோ மாணவிகள் மத்தியிலும் எத்தனையோ மாணவர்கள் மத்தியிலும் யாரோ ஒரு மாணவனுக்கு யாரோ ஒரு மாணவி மீதுதான் காதல் வரும்.காதல் அழகு சார்ந்தது மட்டுமல்ல.அதில் அழகும் உண்டு.ஜானகியைக் காணாவிட்டால் ராமு துடிக்கும் துடிப்பை மாணவப் பருவத்து இளைஞன் அழகாகவே பதிவு செய்திருக்கிறான்.
ஊரைவிட்டுப் போன ராமு தன்னைப் பார்க்க ஒருமுறையாவது வரமாட்டானாஇ தனது திருமணத்தின் போதாவது வந்து கூட்டிக் கொண்டு போகமாட்டானா என ஏங்கி நிற்கும் போதுஇ நான் உன்னைப்பற்றி எல்லாவற்றையும் அறிந்து கொண்டுதானிருந்தேன்இதிருமணத்தின் போது மண்டபத்தில்தான் இருந்தேன் என்ற போது ஐhனகி மட்டுமல்ல படம் பார்த்தவர்களும் அட கடவுளே என்று சொல்லாமல் விடமாட்டார்கள்.
காதல் வலிமையானது.காதலிக்கும் போது காதலனும் காதலியும் முழுமையாக கணவன் மனைவியாகவே கற்பனையில் வாழ்ந்து கொண்டுதான் காதலிக்கிறார்கள்.இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியும் மனதில் ஆழமாக பதியும்வரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.விஜய்சேதுபதியாகட்டும்இ த்ரிசாவாகட்டும் மாணவன் மாணவியாக நடித்தவர்களாகட்டும் கதாபாத்திரக்குள் சரியாகவே பொருந்திப் போயிருந்தார்கள்.
தனது காதல் ஈடேறவேண்டுமே என்று நினைப்பதும் அதற்காக வெளிப்படையாக போராடத் தயங்குகிற நிலையும் இப்படத்தின் மூலம் காதலிக்கும் அனைவருக்கும் நீங்கள் இப்படியிருக்காதீர்கள் என ஒரு செய்தியையும் சொல்லியிருக்கின்றது.இப்படிப் பல காதலர்கள் இருக்கிறார்கள்.ஏப்ரல் முதலாந்திகதி மாணவ மாணவிகள் மை தெளிப்பது வழமையானது.
இந்தப் படத்தில் ராம் மீது ஜானகி மை தெளிப்பது அவன் மீது உள்ள உரிமையில்.மையைத் தெளித்துவிட்டு ஒரு சிரிப்புச் சிரிப்பாளே அற்புதம்.96ஆம் ஆண்டு ஒரே வகுப்பில் படித்த மாணவர்கள் ஒன்றுகூடும் போது ராமுவைச் சந்திக்கும் ஜானகி அவனுடன் ஒன்றிணைவதற்கு தடுப்பது அவளின் திருமண வாழ்க்கைதான்.
ஒரு இரவு முழுக்க ஒன்றாக இருக்கும் இருவரின் மனங்களும் தடுமாறித் தடுமாறி தெளிவு பெறுகிறது.தெளிவு தடுமாறுகிறது.சரியா தப்பா எனப் போராட்டமும் தப்பு எதுவுமே நடந்துவிடக்கூடாதே என்ற சஞ்சலமும் அந்த இரவு முழுக்க இளையோடிக் கொண்டிருந்தது.ராமின் சகோதரி முறையான பெண்ணிடம்இ ராமின் நண்பன் அவளை முதலில் இறக்கிவிட்டிட்டுப் போ என்று சொல்லுவதுஇ அவர்களின் காதல் இன்னமும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது என்பதாலேயே.
கோப்பிக்கடையில் ராமின் மாணவிகள்இ தங்களுடைய ஆசிரியரின் மனைவி என்று நினைத்துக் கொண்டு ஜானுவுடன் அறிமுகமாகும் போது நான் அவரின் மனைவிதான்இ நாங்கள் காதலித்துத்தான் கல்யாணம் செய்தோம் என்று ஜானு மாணவிகளுக்குச் சொல்வது நிலைமையைச் சமாளிப்பதற்கல்லஇ இப்பவும் நாங்கள் காதலர்கள் என்பதற்கே.கல்யாணம் செய்யாத கணவன் மனைவியே என்பதே.
விமான நிலையத்தில் ஜானுவை அனுப்பி வைக்கும் போது அருகருகே நிற்கும் போது ஜானு பரிதவிக்கிறாள்.’ஏன்டா இப்படி’ என்று அழுகிறாள்.கட்டித்தழுவுக்கூட அவள் மனம் துடிக்கிறது அவனின் முகத்தை வருடியபடியே அழுகிறாள்.
அதே மனநிலைதான் ராமுவுக்கும்.தனக்காக தன்னையே நினைத்துக் கொண்டு கல்யாணம் செய்யாமல் இருக்கும் ராமுவுக்கு கல்யாணம் செய்து வைத்து அவனுக்கு பிறக்கும் குழந்தையை தூக்கிக் கொஞ்ச வேணும் என்று ஜானு சொல்லும் உள்ளுணர்வுஇ உன் மனைவியை நானாக கற்பனை செய்கிறேன் என்ற காதல்தான்.
இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ராமு பாவித்த சவர்க்காரத்தை அவள் விரும்பி பாவித்த உரிமையும்.அவனின் உடம்பை தொட்ட சவர்க்காரம் எனது உடம்பையும் தொடட்டும் என்ற உணர்வும். ஜானகி விட்டுச் சென்ற உடைகளை ஞாபகங்களாக ராமு சேகரித்து வைப்பதும் மனதைப் பிசைகின்ற காட்சிகள்.இவர்களைத்தான் கல்யாணம் செய்வேன் என காதலிக்கும் போது திடமாக நம்பும் காதலனும் காதலியும்இ நிர்பந்தத்தால் காதல் கைகூடாமல் போக வேறொருவரை கல்யாணம் செய்து அந்தக் காதலுடனும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இது அடையாளம்.
காதல் மிக வலிமையானது.மூளையில் ஞாபகக் கலன்கள் இருக்கும் வரை அந்தக் காதலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.ஜானுவின் வாழ்நாள் முழுக்க ராம் அவளின் காதலனாகவே இருப்பான்.அவனைக் கல்யாணம் செய்திருக்கலாமே என துடிக்கத்தான் போறாள்.ராமுவும் அவளைத் தன் காதலியாக அவளின் நினைவுப் பரிசுகளோடு வாழத்தான் போகிறான்.இப்படிப் பலர் நமது சமூகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
காதலர்கள் பிரியக்கூடாது – தயவு செய்து காதலர்களைப் பிரிக்காதீர்கள்.காதல் வாழட்டும்.
–ஏலையா க.முருகதாசன்
724 total views, 2 views today
1 thought on “96, காமத்திற்கும் அப்பால் ஒரு காதல்”