ஓவியங்களுக்கு(ஓவியம்) அதிக விலை கொடுப்பதில் சீனா முன்னணியில்!
ஓட்டுக்கு அதிக விலைகொடுப்பதிலும், அரசியலில் பேரம் பேசி அதிக பணம் கொடுப்பதிலும் இந்தியாவையும் இலங்கையையும் எவரும் வெல்ல முடியாது.
ஓவியம், சித்திரம், படம் கீறுதல் அல்லது வரைதல் என்பதெல்லாம் இலகுவான வேலை எனப்பலர் எண்ணுவார்கள். உண்மையிலேயே இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள் எவ்வளவு நேரத்தை, பணத்தை விரயமாக்கி மற்றவர்களைச் சந்தோசப்படுத்துகிறார்கள். அவர்களின் கர்ப்பனைத்திறன், கலை ஆர்வம், முயற்சி, கடும் உழைப்பு கைகொடுக்க விலைமதிப்புள்ள ஓவியங்களை கீறுவார்கள். அப்படிப்பட்ட ஓவியங்கள் பெரும் காவியமாகவும் மிளிர்ந்துவிடுவதும் உண்டல்லவா.
வரையப்பட்ட ஓவியங்கள் உலகரீதியில் புகழ்பெற்றவை பல உண்டு. சென்ற ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 9009 ஓவியங்கள் புகழ்பெற்றவையாகக் காணப்பட்டதுடன் Onlineல் 4.22 பில்லியன் டொலருக்கும் காட்சியகங்களில் 63.7 பில்லியன் டொலருக்கும்; விற்பனையும் கண்டுள்ளது. இந்த ஓவியங்களைக் கொள்வனவு செய்வதில் சீனா 1வது இடத்தையும் (38மூ) அமெரிக்கா 2வது இடத்தையும் (28மூ) பிரித்தானியா 3வது இடத்தையும்
(17மூ) பிடித்துக் கொண்டுள்ளன.
அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்ட உலகப்புகழ்பெற்ற ஓவியங்களைப் பார்த்தால் முதல் 5 இடங்களைப் பெறுபவை…
1வது Leonardo da Vinci – 450.3 பில்லின் டொலர்
2வது Pablo Picasso – 179.4 “ “
3வது Modigliani – 170.4 “ “
4வது Francis Bacon – 142.4 “ “
5வது Jackson Pollock – 140.0 “ ”
–வ.சிவராஜா
684 total views, 1 views today
1 thought on “ஓவியங்களுக்கு(ஓவியம்) அதிக விலை கொடுப்பதில் சீனா முன்னணியில்!”