வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்
திருமதி கௌசி அவர்களின் சிறுகதைத் தொகுப்பான 08.12.2018 அன்று யேர்மனி தமிழ் கல்விச்சேவையானது திருமதி கௌசி அவர்களின் சிறுகதைத் தொகுப்பான வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் என்னும் நூலை Helmholtz Gymnasium, Münster str 122, Dortmund என்னும் இடத்தில் அறிமுகம் செய்து வைத்தது.
இந்நிகழ்ச்சி அறிவிப்பாளர் முல்லைமோகன் அவர்கள் தொகுத்து வழங்க, யேர்மனி தமிழ் கல்விச்சேவை தலைவர் பொ. ஸ்ரீஜீவகன் தலைமையில் நடைபெற்றது.
பிரதமவிருந்தினரான சிரேஷ்ட விஞ்ஞானி திருமதி Dr. Geethanjali Pickert (Maiz University, Germany) , சிறப்புவிருந்தினர்களாகிய இசைக்கலைமணி திருமதி.தர்மினி தில்லைநாதன், கலாநிதி.மு.க.சு. சிவகுமாரன் வெற்றிமணி, சிவத்தமிழ் -ஆசிரியர்), ஈழத்து மெல்லிசை மன்னன் M.P.பரமேஸ் ஆகியோரின் சிறப்பான உரைகளுடனும் டென்மார்க் இலிருந்து வருகைதந்த எழுத்தாளர் ஜீவகுமாரன் அவர்களின் நூல்நயவுரையுடனும் இளையோர்களின் தமிழ்மொழி வாழ்த்து, நடனம், இசைக்கச்சேரி, என அற்புதமான கலைப் படைப்புக்களுடனும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
எழுத்தாளர்களின் வாழ்த்துரைகளுடன் குறிப்பாக இளையோர்களான ராம் பரமானந்தன், சிவவிநோபன் இருவரின் உரைகளும் கவரத்தக்கதாக இருந்தன. அமைதியாக செவிக்கு நல்ல இலக்கிய படையலும் வயிற்றுக்கு நிறைவான உணவுப் படையலும் என நிகழ்வு நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்திருந்தது.
— திருமதி கௌசி
640 total views, 1 views today
உளமார்ந்த வாழ்த்துகள். சிறப்பு விருந்தினராக வெற்றிமணி ஆசிரியர் கலந்து சிறப்பித்தமை மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது