சம்பவத் துணுக்கு : திக்குவல கமால்

விருந்துக்குச் சென்ற மேதை

விஞ்ஞான மேதை ஐன்ஸ்டீன் விருந்துப சாரமொன்றுக்கு சென்றிருந்தார்.அவரோடு மனைவி செல்லவில்லை.

விருந்து முடிந்து வந்த்தும்,மிக்க ஆவலோடு அதுபற்றி விசாரித்தாள் மனைவி.

வந்திருந்த விஞ்ஞான மேதைகள் பற்றி புகழ்ந்து பேச ஆரம்பித்தார் ஐன்ஸடீன்.

” அது கிடக்கட்டும்.வந்திருந்த பெண்மணிகளின் ஆடையணிகள் எப்படி இருந்த்தென்று முதலில் சொல்லுங்களன்”- என்று குறுக்கிட்டாள் மனைவி.

” பெண்மணிகள் என்னென்ன விதமான ஆடையணிகளோடு வந்திருந்தார்களென்று நான் அவதானிக்கவில்லை.

சாப்பாட்டு மேசைக்கு மேலே தெரிந்த பாகத்தில் அப்படி ஆடை எதுவும் அணிந்திருந்த்தாகத் தெரியவில்லை. மேசைக்கு கீழே பார்ப்பது மரியாதை இல்லை அல்லவா? அதனால் நான் பார்க் கவில்லை”- என்று பதில் சொன்னார் ஐன்ஸ்டீன்.

736 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *