யேர்மனியில் பூவரசு சஞ்சிகை ஆசிரியர் ‘இந்து மகேஷ ;படைப்புலகம்” நூல் வெளியீட்டு விழா
கடந்த 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் சால்புறுக்கனில் ளுவ.ஐபெடிநசவ நகரில் இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களின் (பூவரசு சஞ்சிகை ஆசிரியர்) இந்துமகேஷ் அவர்களது படைப்புலகம் என்னும் நூல்வெளியிடு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நூலை அவரது பிறந்தநாள் பரிசாக அவர்களது பிள்ளைகள் வெளியிட்டு இலக்கிய உலகத்திற்கு ஓர் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
அவரது வாசகர்கள் நிறைந்த அவையில் ஓர் நிறைவான விழாவாக அமைந்தது. முதல்பிரதியை திரு.செ.செல்வகுமார் அவர்கள் (புங்குடுதீவு மறுமலர்ச்சி ஒன்றியத்த தலைவர் யேர்மனி – ராட்டிங்கன்) பெற்றுக் கொண்டார்.
சிறப்புரையாற்றிய வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் இந்துமகேஷ் அவர்களது படைப்புக்களை எவ்வாறு உள்வாங்கிக்கொண்டார் என்பதனையும், அவரது எழுத்தில் உள்ள யதார்த்தையும் எடுத்துரைத்து வெற்றிமணி மற்றும்; சிவத்தமிழில் வந்த பல கட்டுரைகள் இந்த நூலை அலங்கரிப்பது கண்டு பெரிமிதமடைவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் செல்வகுமார் அவர்கள் இந்துமகேஷ் அவர்களது துடிப்பான எழுத்துக்களை அவரது துடிப்பான இளமைக்காலத்தில் இருந்து ஒவ்வொன்றாகச் சொல்லி அவரது இலக்கிய வாழ்வை மனக்கண்முன் நிறுத்தினார். விழாவில் இந்துமகேஷ் அவர்களின் தீவிரவாசகர்கள் பலர் அவரது உயர்பண்புகளை சிறப்பாக எடுத்துரைத்தனர்.
பிள்ளைகள் பெற்றோர் வாழும்போதே அவர்களது சேவையை பதிவுகளாக வெளியிட்டு ஆவணப்படுத்தும் பண்பு எல்லோரும் பின்பற்றவேண்டிய ஒன்றாகும். அவரது பிள்ளைகளுக்கு வெற்றிமணியின் வாழ்த்துக்கள்.
957 total views, 1 views today
2 thoughts on “யேர்மனியில் பூவரசு சஞ்சிகை ஆசிரியர் ‘இந்து மகேஷ ;படைப்புலகம்” நூல் வெளியீட்டு விழா”