எம் முற்றத்தில் உள்ள கல் நிலா முற்றத்தில் கிடைத்தது எப்படி?
Apollo 14 விண்வெளிக்கலம் கற்களை சந்திரனில் இருந்து பூமிக்கு கொண்டுவரும் போது அந்தகற்களின் இடையே பூமியில் உள்ள கல் ஒன்றும் இருந்தது.
இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூமியில் கிடைக்கப்பெறும் கிறனைட் கல் அதில் ஒரு சிறு கிறனைட்; கற் துண்டு ஒன்று சந்திரனில் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.
சந்திரனில் வேற்றுகிரகங்களில் இருந்து விழும் சிறு துண்டங்கள் போல் பூமியில் இருந்தும் சிறு கற்கள் சந்திரனில் வீழ்ந்திருக்கலாம்.
அதாவது பூமியில் வேற்றுகிரகங்களில் இருந்து கற்கள் விழுவது எப்படிச் சாத்தியமோ அது போல் சந்திரனுக்கு வேற்று கிரகமான பூமியில் இருந்து சந்திரனில் விழுவதும் சாத்தியமே.
சந்திரனில் கண்டு எடுக்கப்பட்ட இந்த பூமியின் சிறு கிரணைட் கல், இன்று பூமியில் இருக்கும் கற்களில் மிக மிக பழமைவாய்ந்த கல்லாகும்.
சுவீடன் அருங்காட்சியகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் Jearemy dellucci நாசா வழங்கிய இக்கல்லை இரசாயண முறையிலும்,பௌதீக முறையிலும் பரிசோதித்தனர். இப்பரிசோதனை இக்கல் உருவக்கம்பற்றி அமைந்தது.
கல்லில் உள்ள படிகங்கள் சந்திரனில் உள்ள ஒக்சியினை விட மிக அதிகமாக ஒக்சியின் உள்ள இடத்தில்தான் இக்கல் உருவாகியிருக்கும். உயர் அழுத்தமும் தாழ்ந்த வெப்ப நிலையும் இருக்கும் இடத்தில் இக்கல் உருவாகி இருக்கவேண்டும் என்கிறது அவர்களது ஆய்வு.
4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் உருவான இக்கல் சந்திரனில் வீழ்ந்துள்ளது.
சந்திரன் காலத்தால் பெருமாற்றம் அடையாத ஒரு கிரகம். பூமி பலமாற்றங்களை அடைந்து விட்ட கிரகம்
எனவே பூமியின் ஆரம்ப கால அல்லது மிக மிக பழைய காலத்தை சந்திரனில் கண்டு எடுக்கப் பட்ட இக்கல் மூலமாக அறிய முடியும் என்கிறது இவர்களது ஆய்வு.
சந்திரனை ஆய்வு செய்யப் போனவர்களுக்கு முதலில் நீ வாழும் பூமியை கவனி என்கிறதோ சந்திரன். பூமி தன்வடிவத்தை இழந்துகொண்டு செல்கிறது. பழமையின் சுவடுகளைக்கூட வேற்றுக் கிரகங்களில் தேட வேண்டியுள்ளது?
எத்தனை கோடான கோடி மக்கள் வாழ்ந்துவிட்டுப்போன பூமியிது. யார் செய்த தவறோ இந்த பூமிக்கான மாற்றம்.
— சிவஜெனனி
797 total views, 2 views today
1 thought on “எம் முற்றத்தில் உள்ள கல் நிலா முற்றத்தில் கிடைத்தது எப்படி?”