தாய்த் தமிழின் குழவி சமஸ்கிருதம் புதிய கோணத்தில் புதிரின் விடை

தமிழில் ஆங்கிலம் கலந்தால் உடனடியாகத் தெரிகின்றது. ஆனால் தமிழனுக்கே தெரியாமல் தமிழில் பல மொழிகள் கலந்துள்ளன. இதையெல்லாம் யார் தட்டிக் கேட்ப்பார்கள்? இன்று நாம் தமிழ் என்ற கோணத்தில் பாவிக்கும் பாதிக்கு மேற்பட்ட வார்த்தைகள் தமிழே அல்ல, என்று சொன்னால் நம்பமுடிகின்றதா? நம்பா விட்டாலும் நறுக்கென்று குத்தும் உண்மை இது தான்.

பாளி மொழி, சமஸ்கிருதம், லத்தின், அரபு என்று மட்டும் இல்லாது போர்த்துக்கேய, ஒல்லாந்த, டச்சுமொழிகள் கூட கலந்து கிடைக்கும் எம் மொழியின் தற்கால நிலை, கவலைக்குரிய கலிகால நிலையாகும். ஒரு மொழியானது காலத்தின் அடிப்படையில் பல்வேறு இணைப்புக்களிலும் பணிப்புக்களிலும் கலந்து புதிய மொழியாகத் திரிவடையும் ஆபத்து நிலையில், தமிழ் மொழி மட்டுமே 3000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட வார்த்தைகளைக் கூட இன்றும் வாசித்து புரிந்து கொள்ளக் கூடிய அதிசய மொழியாக காணப்படுகின்றது. அதற்கு கண்கூடு உதாரணமே எங்கள் திருக்குறள்.
திருக்குறளின் வார்த்தைகளையும் வசன நடையையும் வாசிக்கும் தூய தமிழனுக்கு கண்டிப்பாக அதன் கருத்துக்கள் மனக்கண்ணில் விழுந்துவிடும். “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” இது மூவாயிரம் ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட வார்த்தைகள் ஆனால் இவ்வார்த்தைகள் இன்றும் பாவனையில் உண்டு. இப்படிப்பட்ட சிறப்பு பல மொழிகளில் இல்லை. இதற்கெல்லாம் ஒரே காரணம் தமிழனின் புத்திசாலித்தனம் என்று சொன்னால் நம்ப முடியுமா? இதோ ஆதாரங்களுடன் அடுத்த எடுத்துக் காட்டலைக் கவனியுங்கள்.
தமிழ் மொழி பலமுறை அழிவு வரை சென்று மீண்டும் உயிர்த்து வந்த மொழியாகக் காணப்படுகின்றது. அதற்கு நாயன்மார்களின் கதை முதல் நாடோடிக் கதைகள் வரை பல ஆதாரங்கள் உண்டு. உலகில் பல இனத்தவர்களால் தமிழ் இனத்தவர்கள் மீது பலமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்டு இறுதியில் இயற்கையே அழித்த ஒரு இனமாக, இன்றும் தெற்கே இந்துசமுத்திரத்துள் உறங்கி கிடைக்கும் தமிழனின் சரித்திரமும் ஒரு சாட்சி. இப்படி தலைசிறந்த மொழியாக இருந்த தமிழ் மொழி ஒரு காலத்திலும் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. ஏன் என்றால் அனைத்து மொழி மக்களும் தமிழ் மொழி கற்க ஆசைப்பட்டனர். தமிழ் கற்று தமிழனானால், தலைசிறந்த வாழ்க்கை கிடைக்கும் என்று அனைவரும் தேடித் தேடி தமிழ் கற்றனர் எப்படி இன்று அனைவரும் ஆங்கிலம் கற்கின்றோமோ அதே போல அன்று அனைவரும் தமிழ் கற்றனர். இதற்கு உதாரணம் வேற்று மொழிக்காரர்கள் தமிழ் கற்று, தமிழ் அரச சபையில் மந்திரியாகவும் அமைச்சராகவும் வீற்றிருந்தனர். என்பதற்கு அன்று முதல் இன்று திரு.கருணாநிதி வரை பல சாட்சிகள் உள்ளனர்.

அப்படிபட்ட எவரையும் எதிர்க்காத தனிக்காட்டு ராஜாவாக இருந்த தமிழர்கள் இன்று பிறமொழிகளை எதிர்க்கும் நிலை ஏற்பட்டு விட்டதா! என்ற ஆச்சரியத்தில் ஆரம்பித்த என் தேடல் ஒரு அற்புதத்தைக் கண்டு பிடித்தது. இதோ அந்த அற்புதம் உங்களுக்காக.
ஆரியரின் படையெடுப்பின் பின் அவர்கள் முதலாவதாகக் கைவைத்த இடம் கோவில்கள். கோவில்களில் உட்செல்ல மறுப்பு விடுத்து சாதி பிரிவு ஆரம்பமானது. அரச சபையைக் கூட ஆக்கிரமிக்காத ஆரியர்கள் ஏன் கோவில்களை ஆட்கொண்டனர் என்ற பெரும் கேள்வி எனக்குள் எழுந்த போது தான் ஒரு பொறி தட்டியது. ஆரிய மொழிகளில் அதிக சமஸ்கிருதக் கலப்புக்கள் உண்டு. அதே நேரம் அவர்களின் பொருளாதாரமும் அறிவாற்றலும் அதிகரித்தும் உள்ளது. ஆனால் சமஸ்கிருதமோ தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழிச் சொல்லப்பட்ட கலைகளின் சிறப்பையும் பறைசாற்றிக்கொண்டுள்ளது. இது எப்படி சாத்தியம் என்று உற்றுப் பார்க்கும் பொது ஒரு பெரும் உண்மை என்னை விழிக்கச் செய்தது.
தமிழனின் பாதுகாப்பு உணர்வு எப்படிப்பட்டது என்ற ஆச்சரியத்தை இப்போது உங்களுக்கு விளக்கவுள்ளேன். பிறமொழிக்காரர்கள் தமிழைக் கற்று, தமக்குள் புகுந்து கொள்வதை உணர்ந்த தமிழர்கள் தமெக்கென ஒரு ரகசிய மொழியை உருவாக்கினார்கள். அந்த மொழியைப் பாதுகாக்க அதன் ஓசை வடிவங்களை செதுக்கினார்கள். அம்மொழியை பேசுவோர் அனைவரும் ஒரே சந்தத்தில் பேசும்வண்ணம் மந்திரக் கட்டுக்களாக செதுக்கினார்கள். அந்த மொழிக்குள் தமிழனின் மருத்துவம் விஞ்ஞானம் பொருளாதாரம் என்று அனைத்து ரகசியங்களையும் ஓசைக்கு கட்டாக மாற்றி மறைத்து வைத்தார்கள்.
அதனால்த் தான் கோவில்களில் பல இடங்களில் ரகசிய அறைகளும் அந்த அறைகளுள் பொன் பொருள் என்பதோடு சேர்த்து ஒரு சில ஓலைச் சுவடிகளும் காணப்பட்டன. ஒற்றர்கள் மூலம் இவற்றை அறிந்த ஆரியர்கள், தமிழை விட்டுவிட்டு சமஸ்கிருதத்தை (சமஸ்கிரதம் ) கோவில்களுக்குள் புகுந்து கற்றுக் கொள்ளத் தொடங்கினர். இவற்றை நம்பக் கஷ்டமாக உள்ளது என்றால் சமஸ்கிரதம் எப்படி எழுதப் படுகின்றது என்று மட்டும் எடுத்துக் பாருங்கள். சமஸ்கிரத எழுத்துக்களையும் தமிழ் அகர வரிசையையும் சேர்த்து வைத்துப் பாருங்கள், அதன் பின் நீங்களே முடிவெடுக்கலாம், சமஸ்கிரதம் எப்படி உருவாகி உள்ளது என்று.

அது மட்டுமின்றி இதோ வந்து சென்றதே பொங்கல் சிறப்புத் தினம் அதற்கு ஒரு நாள் முதல் இந்தியர்கள் அனைவரும் போஹி என்று ஒன்று கொண்டாடுகின்றார்கள், இந்தப் பண்டிகை இலங்கையில் கொண்டாடுவது இல்லை, ஏன்? அது எதற்காகத் தெரியுமா? எங்கள் வீடுகளிலும் ஏதேனும் சமஸ்கிருத புத்தங்களையோ, ஓலைச் சுவடிளையோ வைத்திருந்தால், அதை அழித்துவிட வேண்டும் என்பதற்க்காக ஆரியர்கள் மேற்கொண்ட சூட்சி தான் இந்த போஹி.
இனிமேல் நாம் செய்யவேண்டிய ஒரே ஒரு வேலை எம் முன்னோர்கள் எமக்கென்று சேர்த்து வைத்த அறிவுப் பொக்கிஷத்தை தெடிக் கற்றுக் கொள்வோம். எம் முன்னோர்கள் சொன்னதெல்லாம் மூட நம்பிக்கை செய்ததெல்லாம் முட்டாள்த் தானம் என்று யாரோ ஒருவர் சொல்வதை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளாமல், சற்று நீங்களும் யோசித்துப் பாருங்கள் வான்மீகி ராமாயணத்திற்கும் கம்ப ராமாயணத்திற்கும் என்ன வித்தியாசம் என்று? சிந்தியுங்கள். சமஸ்கிருதம் எழுதிய தமிழனிற்கும் தமிழ் எழுதிய ஆரியருக்கும் என்ன வித்தியாசம் என்பதை அதில் புரிந்துகொள்வீர்கள்.

வா புதிதாய்ச் சிந்திப்போம், ஓர் புதிரைச் சந்திப்போம்.
ஏன் பிறரை நிந்திப்போம்? நாம் உயர விண்விற்போம்.

— சிந்தனை சிவவினோபன்

622 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *