உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” போட்டியில்தான் பங்குபற்றினேன் இப்போ … சாய்.பல்லவி
‘
தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தின் ‘ரவுடி பேபி’ பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவரவேற்பை பெற்றது.
இதையடுத்து இதன் வீடியோ பாடலும் யூடியூப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்தது. இந்நிலையில் ‘ரவுடி பேபி’ பாடலை இதுவரை 20 கோடி (200 மில்லியன்) பார்வையாளர்களுக்கு மேல் கண்டு ரசித்து வருகின்றனர். இதன்மூலம் தென்னிந்திய திரையுலகில் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட யூடியூப் வீடியோ பட்டியலில் ‘ரவுடி பேபி’ பாடல் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தது.
யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஒரு பாடலை இசையமைப்பாளர் இளையராஜா பாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய நடிகை சாய் பல்லவி, ”தனுஷ் எப்பொழுதும் தனிக்காட்டு ராஜா அவருக்கு யாரும் போட்டி இல்லை. விஜய் டிவியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போட்டியில்தான் பங்கு பெற்றேன். ஆனால் மாரி படத்தில் பிரபு தேவா தான் ரவுடி பேபி பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர்” என்று கூறியுள்ளார்.
781 total views, 2 views today