தெரிவும் தெளிவும்
உங்களை சிரிக்க வைப்பதற்கு தான்
யாருமே இருக்க மாட்டார்கள்
ஆனால் நீங்கள் அழும் போது…
அதைப் பார்த்து சிரிப்பதற்கு நிறைய
பேர் இருக்கிறார்கள்.
hற்றினால் மேலே பறக்கும்
குப்பையையும்
முயற்சியால் சிறகை விரிக்கும்
பறவையையும் தயவு செய்து
ஒன்றாக ஒப்பிடாதீர்கள்.
விலகி போனவர்களின்
விளக்கத்தை கேட்காதீர்கள்!
உங்களோடிருந்தது
உண்மையான அன்பு எனில்…
பிரிவதற்கு காரணமே
இருக்க முடியாது.
மனம் விட்டு பேசினால் நிம்மதி
கிடைத்து விடுமாம்.
சிலரிடம் எதுவுமே பேசாமலே
இருந்தால் தான்
அதற்கே முயற்சிக்கலாம்.
போலியான அன்புக்காக
சகித்து கொண்டு
வாழ்வதை விட…
தனிமையில்
சிரித்து கொண்டே வாழலாம்.
அன்பு வேண்டும் என்று எவரிடமும் கெஞ்சாதீர்கள்
அது உண்மையாக இருந்தால்
நீங்கள் கையேந்த வேண்டிய அவசியமில்லை…
எவரையும் நினைத்து அழுது கொண்டே இருக்காதீர்கள்
கொஞ்சம் புன்னகைக்க தொடங்குங்கள்
தேவையில்லாத ஞாபகங்கள் தானாகவே அழிந்துவிடும்.
சாய்ந்து கொள்வதற்கு
தோள்கள் இல்லையே என்று
கவலைப்படாதீர்கள்
தலையணைகள்
உங்கள் நிம்மதியை
ஒருபோதும் பறிக்காது.
தனிமையோடு வாழ்ந்து கொண்டிருப்பதால் மனசு உடைந்து போகாதீர்கள்
உங்களைப் பற்றி அது எவருக்கும் எதையும் சொல்லி சிரிக்கவே சிரிக்காது
வலிகளை தாங்க முடியவில்லையே என்று வருத்தப்படாதீர்கள்
தன்னம்பிக்கை உங்களை தளரவும் விடாது
அது உங்கள் விழிகளை நனைத்தும் விடாது
சின்ன சின்ன சந்தோஷங்களுக்காக எந்தத் தவறையும்
செய்து விடாதீர்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தை விட
நிம்மதியே அவசியமானது.
-நெடுந்தீவு முகிலன்
716 total views, 1 views today
1 thought on “தெரிவும் தெளிவும்”