காவியா
இளவேனிற்காலம் தொடங்கிவிட்டது. பனிக்காலத்தில் பூட்டப்பட்ட ஜன்னல்களுக்கு இனிப்பூரண விடுமுறை. வீட்டின் ஜன்னல்களைத் திறந்துவிட்டு, சிலுசிலுவென்று வீசும் காற்றை முகம்முழுக்கப் பரவவிட்டு, மூச்சை இழுத்துவிட்டால்……… அப்பப்பா..சொந்தநாட்டில் சுவாசிப்பதுபோன்ற எண்ணம் நெஞ்சில் வந்து ஒட்டிக்கொண்டது காவியாவுக்கு.
இரண்டாவது மாடியில் குடியிருக்கும் அவள், ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி, வீதியையே நோக்கினாள்… குளிர்காலத்தில் பூட்டிய வீட்டிற்குள், குட்டிபோட்ட பூனையாய்ச் சுற்றிவந்த அவளுக்கு சற்று நிம்மதியாய் இருந்தது.
வீதியில் வரிசையாகச் செல்லும் வாகனங்களை உற்றுப்பார்த்தாள். சில கார்களின் முன் இருக்கைகளில் ஆணும் பெண்ணுமாய்ச் சிரித்துப்பேசியபடிஇ அவர்கள் செல்கையில் இவளுக்குச் சிறிதாக வேதனை எட்டிப்பார்த்தது. நடைபாதையோரமாய் இளங்காதல் ஜோடி ஒன்று கையோடு கைகோர்த்தபடிஇ உரசி உரசி நடந்து செல்வதைப்பார்த்த அவள் மனமும் காதலுக்காய் ஏங்கியது. கொண்டவன் சரியில்லாததால் வந்த ஏக்கமல்லவா இது?
சட்டென்று ஜன்னலைச் சாத்திவிட்டு, அதன்மேல் சாய்ந்துகொண்டாள் காவியா. அவளது எண்ணமும்,செயலும் அவளுக்கே விசித்திரமாக இருந்தது.
“நானா இது? இப்படியெல்லாம் எண்ணுவது நானா? என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டவளின் கண்கள் பொலபொலவென கண்ணீரைச் சொரிந்தது.
“கடவுளே எனக்குமட்டும் ஏனிந்தச்
சோதனை? நான் என்ன பாவம் செய்தேன்? என்று எண்ணியவளைக் கழிவிரக்கம் பற்றிக்கொள்ள..கண்களைத் துடைத்தவாறு சோபாவில் அமர்ந்துகொண்டாள். ஆனால் அவள் எண்ணங்களோ வெளிநாடு வந்த விதத்தை எண்ணிப்பார்த்தது.
ஈழத்தில் காவியாவின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. நான்கு பிள்ளைகளில் மூத்தவள் காவியா. மிகஅழகானவளுங்கூட. கூலிவேலை செய்யும் தந்தையின் வருமானம் குடும்பத்தில் அறுவருக்கும்போதவில்லை. வறுமையில் இவர்கள் வாடினாலும்இ பிள்ளைகள் கல்விகற்பதைக் கைவிடவில்லை. காவியா உயர்தரம்வரை கல்வி கற்றுவிட்டுஇ வேலை தேடியபோது வேலை எதுவுமே கிடைக்கவில்லை. ஆனால்….வெளிநாட்டு வரன் ஒன்று வீடுதேடி வந்தது.
அனைவருக்கும் தலைகால் புரியாத சந்தோசம்…. காவியாவைத்தவிர. தங்களின் வறுமை போக்கக் கடவுளே வரமளித்ததாய் எண்ணிவிட்டனர் பெற்றோர்கள்.
“அக்கா… எனக்கு ஐப்பேட் அனுப்பு. அக்கா றிமோட்கார் வேணும் எனக்கு…
“ம்…எனக்கு கனக்க விளையாட்டுச்சாமான் அனுப்பு..சரியா?.. என்று இளையவர்களின் பல கோரிக்கைகளோடு வெளிநாடு வந்தவள்… விக்கித்துப்போனாள்.
தம்பி தங்கைகளின் சிறுசிறு ஆசைகளைக்கூட நிறைவேற்றமுடியாத பாவியாகிப்போனதை எண்ணி எண்ணியே வேதனைகொண்டாள்.
கண்மூடித் திறக்கும்முன்பே வருடமொன்று உருண்டோடிவிட்டது. ஆனால்.. காவியாவிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.. மனமாற்றத்தைத்தவிர
கணவன் சுகுமார் நல்லவன்தான்..ஆனால் குடிகாரன்.. குடிக்காத நேரங்களில் மட்டும் கொஞ்சிக்குலாவுவான்.. வெறியேறிவிட்டால போதும்;…அன்றைக்குக் கறியே காவியாதான். நக்கல் நையாண்டி பேசியே நாறடித்துஇ அவளையும் நோகடித்திடுவான்.
அயலவருடனோ..அங்கிருக்கும் நமது நாட்டினரிடமோ புழங்கக்கூடாதென்றான். தனியாக வெளியே எங்காவது சென்றுவிட்டால்..
“யாரைத்தேடிப்போனாய்? என்று அடுத்த நிகழ்வுவரை குத்திக்காட்டியே இரத்தம்வடிய வைப்பான்.
அவனும் அடிக்கடி வெளியே கூட்டிச் செல்லமாட்டான். ஊருக்கு.. பிறந்த வீட்டுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று பலதடவைகள் ஜாடைமாடையாகச் சொல்லிப்பார்த்தாள். அவன் அவள் கதையைக் கணக்கெடுப்பதேயில்லை. அவன்மனதில் ஏதோ இருப்பதாக எண்ணியே தினமும் வேதனைப்படுவதே இவள் வேலையாகிப்போனது.
அன்று ஞாயிற்றுக்கிழமை.. அதிகாலையிலேயே எழுந்து காலையுணவைச் செய்துவிட்டுக் காத்திருந்தாள் காவியா. இன்று எப்படியாவது அவரிடம் தன் மனதிலுள்ளதைப்பேசி முடிவெடுத்துவிட எண்ணினாள்.
பத்துமணிக்குப் படுநிதானமாக எழுந்துவந்துஇ கைப்பேசியுடன் பாத்ரூமுக்குள் போனவன்.. பதினொருமணிக்குத்தான் வெளியே வந்தான்.
“ஏனம்மா காவியா..கண்ணெல்லாம் வீங்கியிருக்கு?… இரவு சரியாத் தூங்கலியா? பரிவோடுதான் கேட்டான்.
“ம்…ஆமா.. தூங்க லேட்டாயிடிச்சி..
“என்ன சமையல்?
காலைச்சாப்பாட்டைக் கேட்கிறானா? மதியச்சாப்பாட்டைக் கேட்கிறானா? என்ற குழப்பத்திலேயே இட்லி ஊத்தி வச்சிருக்கேன் என்றாள்.. இட்லி என்றால் அவனுக்கு உயிர்.
இட்லியைப் பிய்த்துஇ சாம்பாருக்குள் தோய்த்துஇ சட்னியில் தொட்டுஇ ருசித்து ருசித்துச் சாப்பிட்டு முடித்துவிட்டுஇ ஏப்பம் விட்டபடி எழுந்தவனஇ; தொலைக்காட்சிக்குமுன் சென்று அமர்ந்தான்.
நீ சாப்பிட்டியா? என்று ஒருவார்த்தை கேட்கவில்லை அவளை. இரண்டு இட்லிகளை வேதனையோடு குழைத்து விழுங்கிவிட்டு வந்தவளிடமஇ;
“மதியத்துக்குச் சமைக்காத.. வெளியே போவம என்றான்.
“ம்.. என்றவளஇ; நான் உங்களிட்ட ஒன்று கேட்கணும் என்றாள்.
“என்ன? என்றான் தொலைக்காட்சியைப் பார்த்தபடியே.
“நான் வேலைக்குப் போகவேணும.;
“எதுக்கு வேலைக்குப்போகணும்? நான்தான் நன்றாக உழைக்கிறன்.. உனக்குத் தேவையான எல்லாவற்றையும்தான் வாங்கித்தருகிறேனே.. பிறகெதுக்கு வேலை? என்றான்.
புரியுமா அவனுக்கு? வீட்டுக்குத் தேவையானதை மட்டும் வாங்கிப் போட்டுவிட்டால்இ கடமை முடிந்தது என நினைக்கும் அவனிடம்இ எதைச்சொல்லிப் புரியவைப்பது? ஓரு பெண்ணுக்குத்தேவையான எத்தனையோ பொருட்கள் உள்ளதே? அத்தனையையும் அவனிடமே அடிக்கடி கேட்பது அவளுக்கு ஒருமாதிரியாக இருந்தது. குற்றம் கண்டுபிடிக்கும் கணவனல்லவா அவன்? அதுமட்டுமா? அவளின் தாய் வீட்டுக்குத் துளி உதவிதானும் இதுவரை செய்யமுடியவில்லை அவளால்.
“அதுக்கில்ல.. தம்பி தங்கச்சிங்களுக்கு ஏதாவது செய்யலாமெண்டு… மெதுவாகச் சொன்னாள்.
“ஓ.. ஊருக்குப் பணம் அனுப்ப வேலைக்குப்போகப்போறீங்க,… ? என்றான் நக்கலாய். அவமானத்தால் முகம்சிவந்தாள் காவியா.
“ச்சே.. இவனைப்போல மனுசங்க இந்த உலகத்துல இருப்பாங்களா என்ன? மனைவி மட்டும் வந்துவிட்டால் போதும்.. அவளின் குடும்பம் எக்கேடுகெட்டால் தனக்கென்ன என்று எண்ணும் ஜென்மங்கள்.. அவள் மனம் அலைகடலாகக் கொந்தளித்தது.
“வெளிக்கிடு வெளியே போவம்.. என்றான் எதுவும் நடவாததுபோல்.. வேதனை கொந்தளிக்கும் கண்களால் வெறித்துப் பார்த்தாள் அவனை. அவனோஇ இயல்பாகவே இருந்தான். ஆனால்.. வெளியே சென்று திரும்புகையில்.. வெறியோடுதான் வருவான் என்பதும் வேதனையளித்தது அவளுக்கு.
“வெளிக்கிடவில்லையா..? மீண்டும் அதட்டினான்.
வேண்டாவெறுப்போடு எழுந்துசென்றாள் காவியா.. ஆனால் அவள் மனமோ…. நாணிலிருந்து விடுபடத்துடிக்கும் அம்புபோல்… விடுதலை பெறத் தவிப்பது அவளுக்குமட்டுமே தெரியும்!.முற்றும்..
916 total views, 1 views today
1 thought on “காவியா”