எதையாவது பார்க்கும்போது ‘எங்கேயோ பார்த்த ஞாபகம்” என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? அப்ப… படியுங்கள்
இப்படி எல்லோரும் அனுபவிக்கும் டெஜா வு என்றால் என்ன?
நீங்கள் எப்போதாவது ஒரு இடத்திற்குச் சென்று ஏதாவது ஒரு செயல் ஒன்றைச் செய்து கொண்டிருக்கும் போது, திடீரென்று பார்த்தால், அட இந்தச் செயலை ஏற்கனவே செய்தது போல் இருக்கிறதே, என்று எப்போதாவது உங்களுக்குத் தோன்றி இருக்கின்றதா? இவ்வாறான உணர்வைப் பொதுவாக டேஜா வு (Deja vu) என்று அழைப்பார்கள். சரி, டேஜா வு என்றால் என்ன என்று பார்ப்போம்? இந்த french மொழி வார்த்தையின் பொருள் ‘ஏற்கனவே பார்த்தது’ என்பதைக் குறிக்கும். னுநதய ஏர அனுபவித்தவர்களைக் கேட்டால், ஏதோ ஏற்கனவே அனுபவித்த அல்லது செய்த ஒரு விஷயத்தை மறுபடியும் செய்வது போல் இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் இதில் உள்ள ஆச்சரியம் என்ன தெரியுமா? அவர்கள் ஏற்கனவே அனுபவித்த அல்லது செய்த என்று கூறும் அந்த விஷயத்தை அவர்கள் சில சமயங்களில் செய்தே இருக்க மாட்டார்கள். இருந்தும், செய்தது போலவே அவர்களுக்குத் தோன்றும்.
உதாரணத்திற்கு, நீங்கள் வாழ்க்கையில் முதல் முதலாக அமெரிக்காவுக்குப் பயணிக்கின்றீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். அங்கே ஒரு பிரபலமான கட்டடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, உங்களுக்கு அதை முன்பும் நேரில் எப்போதாவது பார்த்தது போன்ற ஒரு நினைவு தோன்றுகிறது, ஆனால் நீங்கள் இதைப் பார்த்திருக்க வாய்ப்பே இருக்காது. இன்னுமொரு உதாரணம் தருகிறேன், நீங்கள் உங்களது நண்பர்களுடன் அமர்ந்து ஒரு அரசியல் சம்பவத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். அப்படிப் பேசும் போது திடீரென்று பார்த்தால் உங்களுக்கு ஏதோ இதே விஷயத்தை, இதே நண்பர்களுடன், அதே இடத்தில் இருந்து பேசியது போல ஒரு நினைவு வரும். இப்படி இந்த உதாரணங்களில் கூறப்பட்டது போல் நீங்களும் அனுபவித்திருந்தால், நீங்கள் டேஜா வுவை உணர்ந்திருக்கின்றீர்கள் என்று தான் அர்த்தம்.
இந்த டேஜா வு என்கிற உணர்வு ஒரு மிகவும் சிக்கலான சம்பவம் ஆகும். மேலும், இந்த டேஜா வு ஏன் ஏற்படுகிறது என்பதற்குப் பல கோட்பாடுகள் உள்ளன. சுவிட்சர்லாண்டில் வாழும் Arthur Funkhouser, இந்த செயல்பாடுகளை நுணுக்கமாக அறிய, அதிலிருக்கும் சிறு சிறு செயல்களையும் விரிவாகத் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார். அதாவது முதல் நான் கூறிய இரு உதாரணங்களிலும், முதல் உதாரணம் ‘டேஜா விசிட்’ (னுநதய ஏளைவை) அதாவது, முன்பு பயணித்தது போல் இருக்கும் ஒரு உணர்வு என்றும், இரண்டாவது உதாரணத்தை, ‘டேஜா வேகு (Deja vucu) அதாவது முன்பே அனுபவித்த அல்லது வாழ்ந்த ஒரு உணர்வு என்கிறார். எனவே டெஜா வு வை இன்னும் நுணுக்கமாக வகுக்கலாம் என்று அவர் கூறுகின்றார்.
உளவியல் நிபுணர்கள் டேஜா வு வை கற்பனை அல்லது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு நொடி என்கிறார்கள். வேறு சிலர், இது மூளை தவறாகச் சம்பவங்களை நினைவில் வைப்பதால் ஏற்படுகிறது என்கிறார்கள். இதுவே அறிவியலை விட்டு சற்று விலகிப் போனால், சிலர், இதை முன் வாழ்க்கையில் அனுபவித்த சம்பவங்கள் தான் எங்களுக்கு டெஜா வு ஆகத் தோன்றுகிறது என்கிறார்கள். நண்பர்களே, நான் இவ்வாறான டேஜா வு வை எத்தனையோ தடவைகள் அனுபவித்து இருக்கின்றேன். நீங்களும் இது போல் டெஜா வு வை அனுபவித்திருக்கின்றீர்களா?
நண்பர்களே, நீங்கள் எல்லோருமே
நிச்சயமாக முதல்வன் படத்தில் நடிக்கும்
வடிவேலு, யாராவது ஒருவர் அவரது
இடுப்பில் குத்தும் போது
„போடா பண்ணி“ என்று கத்துவதைப்
பார்த்து ரசித்துச் சிரித்திருப்பீர்கள்.
அது அவருக்கு மட்டும் இல்லை, எங்களில் பலருக்கு வேறு யாராவது ஒருவர் நமது உடலில் உள்ள சில இடங்களைத் தொடும் பொழுது கூச்ச உணர்வு ஏற்படும். அதன் விளைவாகச் சிரித்து, அவர்களைத் தள்ளி விட்டு ஆரவாரம் பண்ணுவோம், சரி தானே? ஆனால் அது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் விளக்கம் இருக்கிறது என்று சொன்னால், நம்புவீர்களா? இல்லை என்றால் கண்டிப்பாகத் தொடர்ந்து படியுங்கள்.
பிறர் ஒருவர் நமது உடலில் ஒரு சில இடங்களில் தொடும் போது ஏன் கூச்சம் அல்லது பதட்டம் ஏற்படுகின்றது? உண்மை சொல்லப் போனால், அது ஒரு இயற்கையான எதிர்வினை ஆகும். குறிப்பாக அப்படிச் செய்வது நமது உடலின் ஒரு விதமான தற்பாதுகாப்புப் பொறிமுறை, அதாவது ஒரு Defense mechanism ஆகும். நமக்கு ஏன் இப்படி ஒரு தற்பாதுகாப்புப் பொறிமுறை தேவை என்று கேட்கிறீர்களா? இது சிலந்திகள் போன்ற பூச்சிகளிடமிருந்து நம்மைக் காப்பாற்ற இயற்கையிலேயே நம் உடலில் அமைந்திருக்கும் ஒரு தற்பாதுகாப்புப் பொறிமுறை ஆகும். ஆனால் பிறர் ஒருவர் உங்களைத் தொடும் பொழுது இந்த உணர்வு, நம்மை ஒரு பயம் கலந்த பதட்ட நிலைக்குக் கொண்டு சென்று, நமது பயத்தைக் கட்டுப்படுத்த முடியாத நேரத்தில், சிரிப்பாக வெளிப்படுகிறது. அந்த நபர் உங்களுக்குக் கூச்ச உணர்வு ஏற்படுத்தப் போகிறார் என்று நீங்கள் அறிந்திருந்தாலும் கூட, அவரது தொடுகை, அமைதியின்மை மற்றும் நம்மை இவர் காயப்படுத்தப் போகிறாரோ என்கிற பயத்தை உங்களிடம் ஏற்படுத்துகிறது.
சரி, இதெல்லாம் இருக்கட்டும், ஆனால் உங்களை நீங்களே கூச்சம் காட்ட முடியுமா? இல்லை தானே? அது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? உண்மை சொல்லப்போனால், அதன் காரணத்தை இன்று வரை
ஆராய்ச்சியாளர்கள் முழுமையாகக் கண்டு பிடிக்கவில்லை. ஆனால் இது மூளையுடன் தொடர்புடைய ஒரு செயல்பாடு என்று எண்ணப்படுகிறது.
மூளை நமது உடலைப் பிறருடைய தொடுதல் மற்றும் நகர்தல் ஆகிய செயல்களுக்கு எப்படி எதிர்வினை
செய்வது என்பதைக் கற்று வைத்திருக்கிறது. நமது இடுப்பை நாமே தொடும் பொழுது, நமது மூளை உடனடியாகஉடலுக்கு நமது கைகளைப் பற்றிய செய்திகளை அனுப்பிவிடுகிறது. இதன் மூலம் உங்களது
உடல் அந்தத் தொடுகைக்குத் தயாராகி, பயத்தைப் போக்கிவிடுவதால் நீங்கள் சிரிக்க மாட்டீர்கள். அவ்வளவு தான்!சரி நண்பர்களே, எனது சிறு கட்டுரைபற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக
எனதுமுகநூல் பக்கத்தில்(www.facebook.com/scinirosh)
அறியத் தாருங்கள்!
— Dr. நிரோஷனின் அதிசய உலகம்
878 total views, 3 views today