வெற்றிமணி ஸ்தாபகர் அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் நூற்றாண்டு விழாச் சிறப்புக் கட்டுரை!

நூறு வயது காணும் பொழுதிலும்
வெற்றிமணியாய் அவர் பணிகள்

வெற்றிமணி மாணவர் சஞ்சிகையை உருவாக்கிய, அமரர் மு.க.சு.ப்பிர மணியம் என்கின்ற ஒரு உன்னதமான மனிதரின் நூற்றாண்டுவிழா இது.
மு.க.சுப்பிரமணியம் அவர்கள் 1980 இல் மறைந்துவிட்டாலும், இன்றும் பேசப்படும் மனிதராக இருப்பதற்கு அன்று அவர் தீர்க்கதரிசனத்துடன் மேற்கொண்ட பணிகளே காரணமாகின்றன.

யேர்மனி இங்கிலாந்து சுவிஸ் நாடுகளில் வாழ்பவர்களில் பலரும் அவரை நேரில் கண்டு இருக்க வாய்ப்பில்லை என்பதனை அறிவோம்.. இருந்தாலும் அவர் மறைந்தபின்னரும் வாழும் மனிதராக இருப்பதனால் அவரை உங்களால் எடைபோடமுடியும் என்று கருதுகின்றோம்.
அவர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார் என்பதற்கு அவர் நூற்றாண்டு தினத்திலும் வெற்றிமணி பத்திரிகையாக வெளிவந்துகொண்டு இருப்பது சான்றாகிறது. இதன் மூலம் அவரை அறிந்தவர்கள் இங்கு பாதி என்றால், மீதி அவர் ஆரம்பித்த பத்திரிகைமூலம் அறிந்தவர் ஆகின்றீர்கள். எனவே முழுமையாக அவரை புரிந்தவர்களாகவே மக்கள் இருப்பார்கள்.

அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் மே மாதம் 14 ஆம் திகதி 1919 ஆண்டு குரும்பசிட்டியில் ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர். இவர் திரு திருமதி கந்தவனம் தம்பதியனருக்கு எட்டுபபிள்ளைகளில் இவர் ஏழாவதாகப் பிறந்தார்.
கல்வியிலும் சமூகத்தொண்டிலும் நேரத்தை அர்ப்பணித்தார்.
.இவரது மூத்த அண்ணன் அமரர் க.நாகலிங்கம் அவர்கள் மகாஜனாக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகவும், கனிட்ட பாடசாலை அதிபராகவும் கடைமையாற்றியவர்.
சிறுவயதில் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் மிகுந்த துடிதுடிப்புடன் நடந்துகொள்வார். தான் நினைத்ததை முடிப்பதில் விடாப்பிடியாக இருப்பார். ஆனால் அண்ணர் என்றால் மட்டும் ஒரு பயபக்தியுடன் நிற்பார்.. அண்ணன் மீது உள்ள பாசமும் பக்தியும் அவரது வாழ்வை உயர்த்தியது.
அமரர்.முக.சுப்பிரமணியம் அவர்களை படிப்பித்து ஒரு ஆசிரியரா உயர்த்திய பெருமை அவரது அண்ணருக்கே சாரும்.
1941 ஆண்டு கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு போட்டிப்பரீட்சைமூலம் தெரிவுசெய்பட்டு, அங்கு மூன்று வருடப்பயிற்சி பெற்றார்.
பரீட்iசியல் சிறப்புச்சித்தியும்
பெற்றார்.
அங்கு அன்று கலாசாலை அதிபராக இருந்த ஏ.ஆர்.சண்முகரத்தினம் அவர்கள் இவரது ஆழுமையக் கண்டு கலாசாலை விடுதி மாணவர் தலை வராகவும், கரபந்தாட்த்தில் சிறந்து விளங்கியமையால் விiயாட்டுத் துறைத் தலைவாகவும் நியமித்தார்.

அங்கு பல பேர் சுப்பிரமணியம் என்ற பெயருடன் மாணவர்களாக இருந்தமை யால், இவரை அவர்களிடம் இருந்து வேறுபடுத்தியறிய மு.க.சுப்பிரமணியம் என்று அழைத்தார். ஆதுவே பின்னர் ஆசிரியர் உலகில் எம்.கே.எஸ் என்று பிரபலமானார்.
ஆசிரியர் உலகில் அன்று மறக்கமுடியாதவராக எம்.கே.எஸ் திகழ்ந்தார் என்பதனை அக்காலத்தில் இருந்த கல்வியதிகாரிகள் வழிமொழிந்துள்ளனர்.

காங்கேசந்துறை வட்டாரக் கல்வி,விளையாட்டு, இவற்றின் அமைப் பாளராகவும் பரீட்சைக் காரியதரிசியாகவும் இருந்து அளப்பெரும் தொண்டுகள் ஆற்றி கல்விப்பணிப்பானரதும், உதவி அரசாங்க அதிபரதும் பாராட்டுதலைப் பெற்றவர்.அகில இலங்கை ஆசிரியர் பாடசாலை தமிழாசிரியர் சங்க உபதலைவராகவும். நுவரெலியா முல்லைத்தீவு கிளை களின் தலைவராகவும் காரியதரிசியாகவும் இருந்து பெரும் தொண் டாற்றியவர்.
காங்கேகன்துறை ஆசிரியர் சங்க கிளையை ஆரம்பத்தவர்களில், இவர் முக்கியமானவர்.
கல்விப்பணி மட்டுமன்றி இலங்கை கயரோக தடைச் சபையின் வலிவடக்கு கிளையின் உபதலைவராகவும் இருந்து தொண்டாற்றியவர்..
1964 ஆண்டு ஒட்டுசுட்டான் காதலியார் சம்மளம் குளத்தில் அரசினர் தமிழ் பாடசாலை தலைமை ஆசிரியராக இருந்த வேளை அங்கு பயின்ற மாணவர்களை இடையில் படிப்பை நிறுத்தி கமத்திற்கு பெற்றோர் அழைத்துச்சென்றனர்.
அறுவடைகாலத்தில் பெற்றோருக்கு பிள்ளகளின் உதவி தேவை என்பதனை அறிந்து அந்த நாட்களில் அரச அனுமதியுடன் விடுமுறை பெற்று பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் உதவினார்.
இதனால் பிள்ளைகளின் படிப்பை இடைநிறுத்தி கமத்திற்கு அழைத்துச் சென்று படிப்பை இடைநிறுத்தாது பாதுகாத்த பெருமை அமரர் சுப்பிரமணியம் அவர்களையே சாரும்.. பல ஆர்வம் மிகுந்த மாணவர்களை யாழ்ப்பாணம் அழைத்து வந்து மேற்படிப்பிற்கு வழிசமைத்துக் கொடுத்தார்.

1968 முதல் 1977 வரை குரும்பசிட்டி பொன்.பரமானந்தர் வித்தியாலத்தின் அதிபராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற வேளை பொன். பரமானந்தரின் இலட்சியப் புதல்வர் என்றும் மகாஜனக்கல்லூரிக்கு ஒரு ஜெயரத்தினம். தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு ஒரு ஐ.பி. துரைரத் தினம். பொன்.பரமானந்தருக்கு ஒரு மு.க.சுப்பிரமணியம் அவர்கள் என்று வருங்கால சந்தியினர் விதந்து கூறுவார்கள் என்பது வெள்ளிடமலை.

இவ்வாறு 1977 ஆண்டு பொன்.பரமனந்தர் பெற்றோர் ஆசிரியர் சங்கம். வெளியிட்ட சேவை நல மலரில் கே.கே.சோமசுந்தரம் வடமாகாணக் கல்வியதிகாரி குறிப்பிட்டு இருந்தார். (25.05.1977)
இவரது ஆசிரியப்பணி:
சகாராக்கல்லூரி மாத்தளை 01.06.48 – 31.01.1949 -ளுவ.யுனெசநறள ஊழடடநபந நாவலப்பிட்டி 01.02.49-31.12.1949- கதிரேசன் தமிழ் பாடசாலை நாவலப்பிட்டி 01.01.1950- 02.01.1955- வெலம்பொட அரசினர் தமிழ் கலவன் பாடசாலை (புவுஆளு) பாடசாலை 03.01.1955 – 31.07.1957- பூண்டுலோயா அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 01.08.1957-1961
ஓமந்தை மருதோடை தமிழ் மகாவித்தியாலம். 1961. – 28.02.1964 ஓட்டுசுட்டான் காதலியார் சம்மளங்குளம் 01.03.1964 – 02.02.1968- குரும்பசிட்டி பொன். பரமானந்தர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை 03.02.1968-18.03.1978
என இலங்கையின் பல பாகங்களிலும் ஆசிரியத்தொழில் புரிந்து இறுதியில் அதிபராக தனது சொந்த ஊரான குரும்பசிட்டி பொன் பரமானந்தர் வித்தியாலத்தில் அதிபராக இருந்து 1977 ஆண்டு ஓய்வு பெற்றார்.
இதில் ஒரு சிறப்பு என்ன வென்றால் அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்களது மனைவியும் ஓர் ஆசிரியை ஆவார். அவரும் தன் கணவன் சென்ற நகரம் எல்லாம் பின் தொடர்ந்து இறுதியில் 1978 ஆண்டு ஓய்வு பெற்றார்.
மாணவர்களுக்குச் செய்த பணி!

நாவலப்பிட்டியில் ஆசிரியராக இருந்த வேளை தினகரன் சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளில் வந்த குறுக்கெழுத்துப் போட்டிகளின் சிறந்த விடை விமர்சனி 1950 ஆண்டு வெற்றி மணியை வெளியிட்டார். போட்டிகளில் வெற்றி என்பதனைக்குறிக்க ‘வெற்றி” என்பதனையும் சுப்பிரமணியம் என்பதில் உள்ள ‘மணி”யினையும் இணைத்து வெற்றிமணி எனப் பெயர் இட்டார்.

வெற்றிமணியின் ஸ்தாபகராக அவர் இருந்தபோதும். அக்கால சட்டதிட்டங் களுக்கு அமையவும் 2 வருடங்களுக்கு ஒருமுறை, 5 வருடங்களுக்கு ஒரு முறை, ஆசிரிய இடமாற்றங்கள் என்பதனைக் கருத்தில் கொண்டும். ஆசிரியராக வேறு பல பெரியவர்களின் பெயர்களை இட்டு நடத்தி வந்தார்.
08 பக்கங்கள் பின் 16,32 59 என பக்கங்கள் தேவைக் கேற்ப அதிகரித்த வண்ணம் இருந்தன. 1954 ஆண்டு முழுக்க முழுக்க மாணவர் பத்தரிகையாக உருவெடுத்து இலங்கையில் வெளிவந்த முதல் மாணவர் சஞ்சிகை அதாவது சிறுவர் மாத இதழ் வெற்றிமணியே என்ற மகுடத்தை தனதாக்கியது.

வெற்றிமணி டாண் டாண் எனவே விண்முட்ட ஒலித்திடுவாய்
நற்றமிழாம் எங்கள் மொழி நலமுற ஒலித்திடுவாய் –
என்ற வாழ்த்து ஒலியுடன் வெளிவந்தது வெற்றிமணி.
மலையக மக்களின் கல்வி திட்டமிட்டு நசுக்கப்பட்ட வேளை அவர்களது கல்விக்கும் ஆற்றலுக்கும் முதற்களம் அமைத்துகொடுத்தது வெற்றிமணி.

தான் ஆசிரியராக கடமை புரிந்த பாடசாலைகளில் எல்ல எழுத்தாற்றமிக்க ஆசிரியர்களையும் மாணவர்களையும் வெற்றிமணியில் எழுதவைத்தார்.
வெற்றிமணியில் ஆசிரியர் மாணவர்கள் என பலரது கட்டுரைகளையும் பிரசுரித்தார். ஆரம்பத்தில் மாணவர்கள் தரும் சிறு சிறு கட்டுரைகளையும் அதன் தகுதிபாராது மாணவர்களை ஊக்குவிப்பதற்காக பிரசுரித்தார். ஆடு மாடு கோழி என வீட்டு பிராணிகளது கட்டுரைகள் என பல சிறுவர்களால் எழுதப்பட்டு வந்தன.
பழைய வெற்றிமணியைப் பார்த்தபோது ஆசிரியரிடமே ஒரு முறை கேட்டுவிட்டேன். ‘இது என்ன கட்டுரை இதனைவிட நல்லது கிடைக்க வில்லையா? எழுத்து வல்லமைமிக்க மாணவர்கள் இல்லையா? ஏன் இப்படி தரமில்லாத கட்டுரையை ஏன் பிரசுரித்தீர்கள்” என்று ஆசிரியரைக் கேட்ட போது அவர் சொன்னபதில்:
இந்த கட்டுரை வந்தபின்புதான் வெற்றிமணியில் பல சிறப்பான கட்டுரைகள் வரத்தொடங்கின. வாசகர்கள் படைப்பாளிகள் எல்லோரும். அட இதனைவிட

எம்மால் நன்றாக எழுத முடியும் என்று அவர்களுக்கு எண்ணத் தோன்றியது.
எனவே எப்போதும் சிறப்பான ஆக்கங்கள்தான் வெளியிடவேண்டும் என்பது அல்ல.எழுத்தாளரை கிளர்ந்து எழும்வண்ணம் இப்படி சிலவற்றைச் செய்யத்தான் வேண்டும். என்றார். அது மட்டுமன்றி ஆடு,மாடு,கோழி பற்றி எழுதிய மாணவர்கள் பிற்காலத்தில் பெரும் எழுத்தாளர்களாக ;உருவெடுத் தார்கள்; என்பது இன்னொரு செய்தியாகும்..

வெற்றிமணியில் எழுதும் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கு முகமாக சிலசமயம் அவர்கள் கற்கும் பாடசாலைக்கு நேரில் சென்று புத்தகங்கள் அன்பளிப்புச் செய்து மகிழ்விப்பதுண்டு. அப்படி ஒரு நிகழ்ச்சி நீர்கொழும்பில் கல்விகற்றுக்கொண்டிருந்த (1957 களில்) ஒரு மாணவனுக்கும் நிகழ்ந்தது. பிற்காலத்தில் அவர் யார் என அறியவந்தபோது அவர் யேர்மனியில் சிறந்த எழுத்தாளனாக தமிழ் அறிஞராக போற்றப்படும் திரு.பத்மகுணசீலன் எனத்தெரியவந்தது. 1950 ஆண்டு தாயகத்தில் தொடங்கிய வெற்றிமணி யேர்மனியில் அதன் மணிவிழாவை கொண்டாடிய போது அவருக்கு சிறப்புக் கௌரவம் வழங்கப்பட்டது. படத்தில் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பித்த பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களுடன் பத்மகுணசீலன், வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களையும் அவர்களது புதல்வி சிவஜெனனி அரவிந்தன் அவர்களையும் காணலாம்.

அன்று ஆசிரியர் தொழிலில் கிடைத்த வருமானம் மிகக்குறைவு. அவரது மனைவியாரின் ஊதியத்திலும் அடிக்கடி பணம் பெற்றே வெற்றிமணியை நடத்தி வந்தார். பிற்காலத்தில் முல்லைத்தீவில் தண்ணீர்ரூற்றில் சக்தி அச்சகத்தை நிறுவி அதன் மூலம் வெற்றிமணி சஞ்சிகையும், பலரது ஆக்கங்களையும், நூல்வடிவாகவும் வெளியிட்டு அரும்பெரும் சேவை செய்தார்.
1980 ஆண்டு அன்னாரது மறைவின் பின் வெற்றிமணி தாயகத்தில் வராது போயிற்று. 1980 ஆண்டு அமரர். மு.க.சுப்பிரமணியம் அவர்களின் புதல்வன் மு.க.சு.சிவகுமாரன் இன்றைய வெற்றிமணி ஆசிரியர் யேர்மனிக்கு வந்து, தனது இருப்பை ஓர் அளவு உறிதிப்படுத்திக்கொண்டு தந்தையின் பணியை மீண்டும் வெற்றிமணி பத்திரிகையாக ஆரம்பித்தார்.

1994 ஆண்டு ஆரம்பித்த வெற்றிமணி ஐரோப்பாவிலே வெள்ளிவிழாக்காணும் முதல் பத்திரிகை என்ற பெருமைக்குரியது. பல பத்திரிகைகள் புலம் பெயர்நாடுகளில் தோன்றியிருந்தாலும், இலவசமாக வர்ணத்தில் தொடர்ந்து வந்து வெள்ளி விழாக் காண்பது வெற்றிமணி மட்டுமே.

ஸ்தாபகரது நூற்றாண்டு காலத்திலும் அவர் ஆரம்பித்த வெற்றிமணி இன்றும் பவனிவருகிறது என்றால், இதற்கு காரணம் அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்களது ஆசியும், படைப்பாளிகளின் எழுத்தும், வாசகர்களின் இரசனையும், வர்த்தகர்களது தன்னலமற்ற அளப்பெரிய ஆதரவும் என்றால் மிகையாகாது.

தாயகத்திலும், இங்கும் வரலாறு படைத்து தொடரும் வெற்றிமணி மக்களின் ஓர் அங்கமாகிவிட்டது என்றால் அது உண்மையே.

2,211 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *