ஆளுயரக் கட்டவுட்டும் ரத்தம் சிந்தி மடிந்த ஆடும்


விமல் சொக்கநாதன் -இங்கிலாந்து

இலங்கையின் மையப் பகுதியில் இருக்கும் மலைகளாலும் நதிகளாலும் சூழப்பட்ட வனப்புமிகு கண்டி என்ற மாநகரில், பிறந்த ஒரு தமிழ் குழந்தை பிற்காலத்தில் தென்னிந்திய தமிழ் திரையுலகின் மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து பிரகாசித்து தமிழ்நாட்டு அரசியலிலும் முதலமைச்சராகி தன் முத்திரையை பதித்துவிட்டு மீண்டும் விண்ணுலகம் திரும்பி அங்கிருந்து எங்களைப் பார்த்து கண்சிமிட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நட்சத்திரம் செய்த சாதனைகளை பொறுத்தமட்டில் நாம் அனுபவித்த வேதனைகளில் பெரிய வேதனை எது? கோடம்பாக்கத்தில் ஹஹசிவனேஹஹ என்று தாமுண்டு தம் நடிப்புண்டு என்று வாழ்ந்த சினிமா நடிகர்கள் பலர் தாமும் ஊஆ ஆக வேண்டுமென்று ஆசையை வளர்த்து ரசிகர் மன்றங்களை உருவாக்கி எமக்கு பிராணவதை தந்து கொண்டிருக்கிறார்கள். அரசியலில் ““Political leaders are born; not made’’ என்று ஹாலிவுட்டில் ஒரு சினிமா பெரியவர் சொல்லியிருக்கிறார்.

நடிப்பில் விருதுகள் பலபெற்ற செவாலியர் சிவாஜி கணேசனே தமிழக அரசியலில் புறக்கணிக்கப்பட்டார். இத்தனை விஷயங்கள் தெரிந்திருந்தும் கூட கோடம்பாக்கத்தில் இன்று சுமார் 10-15 நடிகர்கள் தமக்கு பிரச்சாரம் செய்யும் சில அடிப்பொடிகள், அடியாட்கள் ஆகியோரை ஒன்று திரட்டி முழு மூச்சுடன் அரசியல் என்ற ஆழ்கடலில் குதித்து சி எம் முத்தை பொறுக்க நினைக்கிறார்கள். ஆழ்கடலில் கண்மூடித்தனமாக குதித்தால் மூச்சுத்திணறி மூழ்க வேண்டும் என்று மூன்றாம் வகுப்பு மாணவனுக்கும் தெரியும். ஆனால் இந்த ஹஆல் இன் ஆல் அழகு ராஜாக்களுக்குஹ தெரியாதா? இந்த அழகு ராஜாக்களின் சிஷ்ய பிள்ளைகள் பொது மக்களுக்கு கொடுக்கும் இம்சை இருக்கிறதே அப்பப்பா! பட்டி தொட்டியெங்கும் போஸ்டர், தெருவெங்கும் கட்டவுட், கட்டவுட்டின் ஒரு மூலையில் உபயதாரரின் பெயர், முடிந்தால் படம்! இந்த கட்டவுட்டுகள் படம் வெளியீடாகும் தினத்தன்று மட்டுமே அதுவும் திரையரங்கின் வாசலில் மட்டுமே ஒரு காலத்தில் நிறுவப்பட்டு வந்தன.

வழக்கமான கட்டவுட் கலாச்சாரத்தில் தொண்டர் அடிப்பொடிகள் ஏணியில் ஏறி கட்டவுட்டுகள் மீது பால் பஞ்சாமிர்தம் கொட்டி, கற்பூரம் காட்டி வணங்குகின்றார்கள். இதனால் போக்குவரத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து பொலிஸ் கமிஷனரே கவலைப்படாத போது நாம் ஏன் எழுத வேண்டும்? சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த ஒரு யுவதி கட்டவுட்டில் மோதி நிலத்தில் விழுந்து உயிரிழந்தது தமிழ் மக்களை ஆழ்ந்த வருத்தத்தில் தள்ளிய செய்தி. இந்த தமிழ் மக்கள் என்று சொல்லும் போது இலங்கை தமிழ் மக்களும் இதில் அடக்கம். அவர்கள் இலங்கை திருநாட்டில் அரசியல்வாதிகளின் கட்டவுட்களோடு அனுபவிக்கும் இம்சை இருக்கிறதே….மிக மிகக் கொடுமை…..அந்த வாயில்லா தமிழ் உறவுகள் யாரிடமும் இதுபற்றி முறையிடுவதும் இல்லை.

தமிழ்நாட்டிலிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்தாலும் இலங்கைத் தமிழர்கள் யதார்த்த வாழ்வுக்கு ஒவ்வாத சினிமாவையும், கதை என்ற அம்சமே இல்லாமல் முடிவு எப்போதும் முடியும் என்று தயாரிப்பவர், நடிப்பவர், இயக்குபவர் என்று யாருக்குமே தெரியாத தொ(ல்)லைக்காட்சி தொடர்களை இலங்கை தமிழர்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளதைப் பார்க்கும் போது, அந்த தொற்று நோய் பாக்கு நீரணையக் கடந்து கொழும்பு வரை வியாபித்து ஒட்டுண்ணியைப் போல் எமது சமூகத்திலும் நீக்கமற நிறைந்திருப்பதை கண்டு வருந்துவதைத் தவிர நாம் என்ன செய்ய முடியும். இப்போது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற ஈழத் தமிழ் நகரங்களிலும் இந்த கட்டவுட் கலாச்சாரம் பரவி பாலாபிஷேகம் என்கிற கோமாளித்தனம் நடைபெறுவதை காணும் போது கண்களை மூடிக் கொள்வதை தவிர வேறு வழியில்லை

கடந்த மாதம்; விநாயக சதுர்த்தியன்றி தமிழ் நாட்டின் தஞ்சாவூரில் பொது இடங்களில் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. ஹஹபொது இடங்களில் விழா நடத்தக் கூடாது. சிலைகள் வைக்கக் கூடாது. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லக் கூடாது என்று கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டனஹஹ. இந்த நிலையில் தஞ்சை விநாயகபுரத்தில் நாலடி உயர விநாயகர் சிலை வைத்து வழிபட்ட மக்களை காவல்துறையினர் கண்டித்தார்கள். இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஆரம்பமாகியது. கிராம நிர்வாக சேவையாளர் வரவழைக்கப்பட்டார், அவர் பேசி முடித்த பின் அந்த விநாயகர் சிலையைக் கைப்பற்றி அங்கிருந்த காசி விஸ்வநாதர் ஆலையத்திற்கு அனுப்பி வைத்தார்.

இதற்கிடையே அதேவாரம் திரைப்பட ரசிகர்கள் பலர் சுமார் 60 உயரத்தில் தமது சூப்பர் ஸ்டாருக்கு கட்டவுட் அமைத்து அவர் நடித்து வெளிவரவிருக்கும் படத்தின் வெளியீட்டு விழா அல்ல, படத்தின் முதல் பார்வையை கொண்டாடும் முகமாக நடுத்தெருவில் மக்களைக் கூட்டி ஒரு அப்பாவி ஆட்டைக் கொண்டு நடுவில் நிறுத்தி அதற்கு வலிந்து சொர்க்கப் பதவி கொடுத்து, அதன் உடல் நிலத்தில் விழுந்து துடித்துக் கொண்டிருக்க அதனை தலையை துண்டாக எடுத்து நடிகருக்கு பாதபூசை செய்தார்கள். இந்த நிகழச்சி நல்ல மனிதர்கள் பலரின் மனதில் ஒரு வேதனையை ஏற்படுத்தியிருந்தாலும், இதனை தடுக்க தமிழக அரசோ, பொலிசாரோ முன்வரவில்லை என்பது மிகவும் வேதனையான விடயம். இதைப் பின்பற்றி மற்றொரு நடிகரின் அடுத்த படத்தின் போது ஒரு மாடு பலி கொடுக்கபடாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

சினிமா கூத்தாடிகளும் அவர்களின் சிஷ்ய பிள்ளைகளும் செய்யும் இந்த அலப்பறைகளைக் கொண்டு தமிழக மக்களை நாங்கள் எடை போட முடியாது. தமிழக மக்களில் கணிசமானோர் படித்தவர்கள், பொறுப்பான பதவிகளை வகிப்பவர்கள், இதயத்தில் இரக்கமுள்ளவர்கள் மற்றவர்களின் வேதனைகளை பங்குபோட விரும்புவர்கள். இதனை நிரூபிக்கும் வகையில் ஒரு சிறிய தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கடந்த மாதம்; ஒரு சனிக்கிழமை வழக்கமாக காலை நேர உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த நால்வர் ஒரு தாயார் தன் புதல்வியுடன் தனித்து நின்று தடுமாறிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர்களை விசாரித்த போது, அவர்கள் திருச்சி முசிறியிலிருந்து பல்கலைக்கழக அனுமதிக்காக அந்த யுவதி அழைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். அந்த அழைப்புக் கடிதத்தை வாங்கி படித்த போது அந்த யுவதி செல்ல வேண்டிய இடம், கோயமுத்தூர் விவசாயக் கல்லூரியின் அண்னா அரங்கம் என்று தெரிய வந்தது. ஏதோ தடுமாற்றத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு காலை 08:30க்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். இரக்கமனம் படைத்த அந்த நான்கு ஆண்களும் உடனடியாகச் செயலில் இறங்கினார்கள். ஒருவர் தனது கைத்தொலைபேசி மூலம் இரண்டு விமான டிக்கெட்டுகளை பதிவு செய்து பணம் செலுத்தினார், மற்றவர் கோயமுத்தூர் முக்கிய அதிகாரிகளிடம் பேசி அவர்களின் அமர்வை காலை 08:30லிருந்து 11:30க்கு மாற்றிக் கொடுத்தார், மூன்றாமவர் ஓடிப் போய் காலை உணவு பார்சல் வாங்கி வந்தார். மொத்தத்தில் அவர்கள் இணைந்து 10,000 ரூபாய் பணத்தை செலவிட்டு தாயாரையும் சுவாதியையும் சென்னை விமான நிலையத்தில் இறக்கிவிட்டார்கள். கோயமுத்தூர் விவசாயப் பல்கலைக்கழகத்தில் போய்ச் சேர்ந்த தாயாரும் மகளும், சுவாதியின் B.Tech (biotech) பல்கலைக்கழக அனுமதியை பூர்த்திசெய்தனர். படிப்பை சுவாதி தொடங்குவதற்கு காரணமான தேவதைகளே நீங்கள் தான் என்று தாயார் தொலைபேசியில் நெஞ்சம் உருகி நன்றி தெரிவித்தாராம்.

தேவதைகள் இறகுகளோடு வருவதில்லை, முருகப் பெருமான் பச்சைமயில் வாகனத்தில் வள்ளி சமேதரராகக் காட்சி தருவதில்லை. சாமானிய மனித வடிவத்தில் அவர் வருகிறார். தன்னை நம்பிய பக்தர்களுக்கு குருவாய் வந்து அருள்கிறார் என்பதில் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது.

1,017 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *