அகம் புறம் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பொக்கிஷங்கள்!

8.10.2022 லிருந்து 7.5.2023 வரை ஆறுமாதம் வரை
நடைபெற உள்ள அகமும் புறமும் கண்காட்சிக்கு வாய்ப்புள்ள அனைவரும் வந்து பாருங்கள்!

ஜெர்மனியில் இருந்து தமிழ்நாட்டின் தரங்கம்பாடிக்கு 1706 ஆம் ஆண்டு கப்பல் வழி பயணம் செய்து வந்த பாதிரியார் சீகன்பால் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு தமிழ் மொழியைக் கற்று அவர் மிகவும் வியந்து கற்ற மூன்று பழந்தமிழ் அற நூல்களை ஜெர்மனிய மொழியில் மொழி பெயர்த்தார், அவ்வையார் எழுதிய நீதி வெண்பா, கொன்றைவேந்தன், உலக நீதி ஆகிய மூன்று நூல்களையும் அவர் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து 1708 ஆம் ஆண்டு அதனை கையெழுத்துப் பிரதியாக உருவாக்கினார். இந்த மாபெரும் பொக்கிஷம் ஜெர்மனி ஹாலே நகரில் உள்ள பிராங்க கல்வி நிறுவனத்தில் பாதுகாக்கப்படுகிறது. தற்போது ஜெர்மனி ஸ்டுட்கார்டு நகரில் லிண்டன் அருங்காட்சியகத்தில் நடைபெறும் அகம் புறம் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அரும்பொருட்களில் இதுவும் ஒன்று. அத்துடன் 1710 ஆம் ஆண்டு பாதிரியார் சீகன்பால்க். அவர்களால்; உருவாக்கப்பட்ட முதல் தமிழ் பைபிள் பொதுமக்கள் பார்வைக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளது. பல ஐரோப்பிய தமிழறிஞர்கள் சில ஆண்டுகளிலேயே தமிழ் மொழியைக் கற்றிருக்கின்றார்கள்.. அதன் பெருமையை மொழிபெயர்த்து தங்கள் நாடுகளில் பரவலாக்கியிருக்கின்றனர் என்பதை அறிந்தாவது ஊக்கம் பெறுங்கள்.

ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியகத்தில் நடைபெறுகின்ற 6 மாதகால தமிழ் கண்காட்சியைக் காண உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ், வரலாற்று ஆர்வலர்களை இருகரம் கூப்பி அன்புடன் அழைக்கின்றோம். -அரிக்கமேடு அகழாய்வுச் சின்னம் -ஆதிச்சநல்லூர் முதல் அகழாய்வின் கண்டுபிடிப்புகள் -நாகப்பட்டினம் புத்தர் சிலைகள் -சமண மத சின்னங்கள் -தரங்கம்பாடியுடன் ஜெர்மனியின் 400 ஆண்டுகால தொடர்புகளை விவரிக்கும் செய்திகள் -ஈழப்போர் தொடர்பான இலங்கை தமிழ் மக்களின் வலி நிறைந்த புலம்பெயர்வும் அதன் பின்னருமான நிகழ்வுகள் -தமிழ் இஸ்லாம் -தமிழ் கிருத்துவம் -வைணவ தமிழ் மரபு -சைவம், சிவ வழிபாடு -கலைகள், கூத்து -திராவிடர் கழகம், பெரியார், மறுமலர்ச்சி காலம் -தமிழ் சமையலறை, காய்கறிகள் -தமிழ்ச்சினிமா, அது ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றோடு… திருவள்ளுவருக்கு வைக்கப்பட்ட முதல் ஐம்பொன் சிலையையும் காண வாருங்கள். கண்காட்சி 8.10.2022 லிருந்து 7.5.2023 வரை நடைபெறும். முகவரி:

Linden Museum, Hegelplatz 1,

70174 Stuttgart Germany

உங்களை வரவேற்பதில் மகிழ்கின்றோம். தமிழ் மரபு அறக்கட்டளை, லிண்டன் அருங்காட்சியகம் மற்றும் ஜெர்மனி வாழ் தமிழ் அமைப்புக்கள். செய்தி; முனைவர்.க.சுபாஷிணி (தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு)

771 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *