கூன் விழுவதால் ஏற்படும் பிரச்சனைகள்

அரிது அரிது மானிடராதல் அரிதுமானிடராயினும் கூன் குருடுசெவிடு பேடு நீங்கிப்பிறத்தல் அரிது…’ என்று கூன்விழுந்த பாட்டி ஒளவையார் பாடினார். கூன்விழுதல் பொதுவாக முதுமையிரவருவது. ஆனால் ஒளவையார் கூன் குருடுசெவிடு பேடு நீங்கிப்பிறத்தல் அரிது என்றுபாடினார். அதாவது பிறக்கும் போதே கூன்விழுவதைப் பற்றிப் பாடியுள்ளார்.

பிறப்பிலேயேவரும் நோய் என்று பாடியுள்ளதாக பொருள்கொள்ளலாம். உண்மைதான். பிறப்பிலும் இளவயதிலும்கூட முதுகு வளையலாம். ஆனால் அவ்வாறு வருவது குறைவு. முதுமையிரவருவதே அதிகம். முள்ளந்தண்டில் வளைவானது முன்பின்னாகவும் வரலாம். பக்கவாட்டிலும் வரலாம்.
முன்பின்னாக வருவதை kyphosisvdமருத்துவத்தில் சொல்வார்கள். அதிலும் முதுவயதில் மேல் முதகில் வரும்வளைவான கூனை வயது காரணமான Agerelated Hyperkyphosis என்பார்கள். இவர்களின் மேல் முதுகு முள்ளந் தண்டு எலும்புகள் வழமைக்கு மாறாக அதீதமாக முன்பக்கமாக வளைந்திருப்பதே கூனுக்குகாரணமாகும்.

மணிக்கணக்காக கணினியின்முன் உட்கார்ந்திருப்பவர்களுக்கும் இத்தகைய கூன் ( Hyperkyphosis) வர வாய்ப்புண்டு. பக்கவாட்டு வளைவானது சாதாரணகண்களுக்கு கூன் தெரிவதுபோல வெளிப்படையாகத் தெரிவது குறைவு.
பக்கவாட்டு வளைவை மருத்துவத்தில் ( Scoliosis) என்பார்கள், நாளாந்தம் பல கூன்விழுந்த முதியவர்களைக் காண்கிறோம். அவர்களில் பெரும்பாலான வர்கள் பெண்கள். மிகுந்த சிரமத்துடன் கைத்தடிஊன்றி அடியெடுத்து நடந்து வருவார்கள். உண்மையில் முதியவர்களில் 20 முதல் 40 சதவிகிதமான வர்கள் கூன்விழுதலால் பாதிப்படைகிறார்கள் என ஆய்வுகள்கூறுகின்றன.

அதிலும் முக்கியமாக பெண்களே பாதிப்படைவது அதிகம். இந்த வளைவிற்கு பாதிப்புற்றவர்களது வழமையான இருக்கும் மற்றும் நிற்கும் நிலைப் போக்குகள் ( Posture) காரணமாக இருக்கக் கூடும். பெண்கள் அதிகமாகப் பாதிப்படைவதற்குக்காரணம் மகப்பேறு, பாலூட்டுதல், மற்றும்போதிய கல்சியம் உட்கொள்ளாமை காரணமாக இருக்கிறது.

இருந்தபோதும் முக்கிய காரணம் வயதாவதன்காரணமாக அவர்களது முள்ளெலும்பில் ஏற்படும் பாதிப்புகளும் தாக்கங்களும்தான். முக்கியமாக அவர்களது முள்ளெலும்புகளில் ஏற்படும் உடைவுகளும் சேதங்களும்தான். கூனரவிழுந்தவர்களில் மூன்றில் ஒருவருக்குமுள்ளந்தண்டு உடைவு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. வயதாகும்போது முள்ளெலும்பில் ஏற்படும் உடைவுகள்விழுந்து அடிபடுவதால் ஏற்படுவதல்ல. வயதாகும்போது அவர்களின் எலும்புகளில் உள்ள கல்சியம் சத்தின் அடர்த்திகுறைகிறது.

இதனால் முள்ளெலும்புகள் நலிவடைகின்றன. உடலின் பாரத்தை சுமக்கமுடியாமல் அவை நசிந்து உடைகின்றன. இவாறு எலும்பு நலிவடைவதற்கு வயதுமட்டும் காரணமல்ல. ஸ்டிரொயிட் வகை மருந்துகளை நீண்ட காலம் தொடர்ந்து உபயோகிப்பதும் காரணமாகிறது. உதாரணத்துக்கு சொல்வதானால் ஆஸ்த்மாவுக்கு உபயோகிக்கும்சில வகை இன்ஹேலர்களில் ஸ்டிரொயிட் மருந்துகள் இருக்கின்றன. ஆனால் இவை மிகமிகக்குறைந்த அளவில் இருப்பதால் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் பலருக்கு இன்ஹேலர்கள் உபயோகிக்க விரும்பமில்லாததால் மாத்திரைகளை உபயோகிக்கிறார்கள். இம் மாத்திரைகளில் உள்ள ஸ்டிரொயிட் மருந்து களின் அளவு மிக அதிகம்.அதனால் எலும்பு சிதைவு மட்டுமின்றிநீரிழிவு உட்பட பல நோய்கள் வரலாம்.முள்ளந் தண்டுகளை இணைப்பது வட்டமான மென்மை யான இடைத்தட்டங்கள் ( Inter vertebral disc) ஆகும்.

வயதாகும் இவை ஈரலிப்பை இழந்து சுருங்கஆரம்பிக்கும். இவையும் கூன் முழுவதை மோசமடையச் செய்யும். இடைத்தட்டம்சுருங்குவதால் உடலைத் திருப்புவது குனிவது, வளைவது போன்ற பல்வேறு செயற்பாடுகளும் சிரமமாக இருக்கும். அவற்றை முழுமையாகச் செய்வது இயலாதிருக்கும்.

பொதுவாக வலிகள் படுத்து ஆறுதல் எடுக்கும்போது தணிந்து விடும். ஆனால் முள்ளந்தண்டு வளைந்திருப்பதால் படுக்கும்போது அவை அழுத்தப்படுவதால் வலிஏற்படுவது அதிகம். மிக அரிதாக ஆனால்; முள்ளெலும்புகளில் என்புப் புற்றுநோய் ஏற்படுவதற்கானவாய்ப்பும் இருக்கிறது.

இதுவும் முள்ளெலும்பை வளையச் செய்யலாம்.சிறிய கூனல் உடல்ரீதியாக பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்துவதில்லை. இருந்தபோதும் கடுமையான கூனலானது பல்வேறு பாதிப்புகளைக் கொண்டுவரும். கூனலானது உடல் தோற்றத்தை முற்று முழுதாகப் பாதிப்பதால் உளரீதியாகவும் மனத்தாக்கம் ஏற்படலாம்.

தனது தோற்றம் பற்றிய தாழ்வுணர்ச்சி, விழுந்துவிடுவோமோ என்ற பாதுகாப்பற்ற உணர்வு, மற்றவர்களில் தங்கியிருக்க வேண்டிஇருக்கிறதே என்ற கவலை போன்றவை ஏற்படக்கூடும். உள வலியுடன் உடல்வலியும் இணைந்து கொள்ளும். அத்துடன் கடுமையான கூனலானது சுவாசப்பையை அழுத்தக் கூடும். அவ்வாறுசுவாசப்பையில் கடும் அழுத்தம் ஏற்படுமாயின் சுவாசித்தலில் சிரமங்களும் ஏற்படக்கூடும்.

அவ்வாறே கடுமையான கூனலானது குடல் மற்றும் உணவுத் தொகுதி களையும் அழுத்தக் கூடும். அவ்வாறு அழுத்தினால் உணவை விழுங்குவதில் சிரமங்கள்தோன்றக் கூடும். அத்துடன் வயிற்று ஊதல் பொருமல் ஏப்பம், நெஞ்செரிப்புபோன்ற அறிகுறிகளும் தோன்றுவதற்கான சாத்தியங்கள் உண்டு. கூன்விழுவது முள்ளம்தண்டு எலும்புகளைப் பாதிப்பதுடன் அவற்றை இயங்கவைக்கும் தசைத் தொகுதிகளையும் நலிவடையச் செய்யும்.
இதனால் நாற்காலியிலிருந்து எழும்புவது சிரமமாக இருக்கும். கைபிடி உள்ள கதிரையாயின் அவற்றை கைகளால் பற்றிக் கொண்டே எழ நேரும். அத்துடன் இயல்பாக நடப்பதிலும் சிரமங்கள் ஏற்படும். நடப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாக விழுவதற்கான சாத்தியங்கள் அதிகம். இத்தகைய விழுகைகளால் வேறு எலும்பு முறிவுகளையும் ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள்மிக மிக அதிகமாகும். இவ்வாறான பல்வேறு பாதிப்புகளால் மரணத்திற்கான சாத்தியம் முன்நோக்கிநகர்கிறது. வயது மூப்பினால் ஏற்படும் கூன் பிரச்சனையைத் தீர்க்க சிகிச்சைகள் ஏதும் பயன்படுமா. அல்லது ‘வயசு போனவர்தானே. இனி வைத்தியம் செய்து என்னபிரயோசனம். ஏதோ இதோடை சமாளிக்க வேண்டியதுதான்… ‘ என்று சொல்லிகைகழுவி விட வேண்டியதுதானா?

கவலைப்பட வேண்டியதில்லை. பல வழிகளில் முயலலாம். பலன் கிடைக்கும்.சத்திரசிகிச்சைகள் உள்ளன. ஆனால் முதியவர்களில் அதற்கான சத்திரசிகிச்சைகள் சாத்தியமில்லை அத்தகைய சத்திர சிக்சிசைகளைத் தாங்குவதற்கான உடல் வலிமை இருக்காது என்ப துடன் மயக்க மருந்துகொடுப்பதிலும் சிக்கல்கள் இருக்கலாம். முள்ளந் தண்டு வளைவுகளை நிமிர்த்துவதற்கானபட்டிகள் ( back braces) கிடைக்கின்றன. இவற்றை அணிவதால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.

மிக முக்கியமானது முள்ளந்தண்டுகள் அவற்றைசூழவுள்ள தசை நார்கள் ஆகியவற்றைப்பலப்படுத்துவதற்கான பல பயிற்சிகள் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து செய்வதன் நல்ல பலன்கிடைக்கும் என்பதை ஆய்வுகளும் உறுதி செய்கின்றன.
இத்தகைய பயிற்சிகளை உடற் பயிற்சி மருத்துவம்செய்பவர்களின் அறிவுறுத்தலுடன் செய்வது நல்லது. சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் சுவாசப்பையின் ஆற்றலை அதிகரிப்பதற்கான சுவாசப் பயிற்சிகள் தேவைப்படும்.
இவ்வாறான பயிற்சிகள் மூலம் கூன்உள்ளவர்கள் தங்கள் பாதிப்பு களை ஈடு செய்துமகிழ்வோடு வாழ முடியும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

4,275 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *