நான் வில்லனாக இருந்த சில கணப்பொழுதுகள்

சொல்லாடா நேரில் வந்தா என்ன பண்ணுவாய், வாவேன் வந்து பாரேன். வந்திடுவேன். என்ன புதுசா எதாச்சும் கேக்குதா?

இல்லை மறக்கமுடியலடி!

கொஞ்சம் பொறு இன்னுமொரு கோல் வருது அது அறுக்கப்போகுது போகாதை நில்லு. அந்த போனைக் கட் பண்ணி வந்த கோலுக்கு கதைக்கிறான்.

சரி சொல்லு!

நான் இப்ப ஓட்டத்தில் நிற்கிறேன.; ஒன்றும் கதைக்க நேரம் இல்லை. வேலையைச் செய்ய விடுவாயா. பிள்ளையைப் பாத்துக்கோ. வைக்கிறேன்.

சரி இப்ப நீ சொல்லம்மா! (இது முதல் கதைத்த ஆளுடன்)

நான் நேரில் வந்தால் என்ன தருவாய். உனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு நீ மாறிடுவாய். ஆடப் பாவி அப்படியா நினைச்சுக்கிட்டு இருக்காய்.

நான் அப்படிப்பட்டவன் இல்லை. எப்படியோ நீ நினைச்சுட்டாய் வா பார்க்கலாம்.
அட பொறடி இவன் ரங்கு எடுக்கிறாhன் அப்புறம் கதைக்கிறேன்.

சொல்லடா ரங்கு. அந்த மாற்றர் என்மாதிரி போகுது.

இஞ்சவைச்சு ஒன்ணும் பண்ணேலாது நாம அவன் ஊருக்கு வரைக்க ஆளை முடிச்சிடுவோம். ஆட கொண்டு கிண்டு போடாதையடா. இல்லை வாழ்க்கையில் நம் ம நினைக்கிற மாதிரி ஏதும் பண்ணினால் போதுமடா!. அப்படி என்றால் கையைக்காலை. இப்ப விளக்கமாச் சொல்ல ஏலாது ஆனால் அதே தான்டா.

இவன் என்ன ஒரு குப்பையனாக இருக்கிறான். படங்களில் வரும் வில்லன் இவன்தானோ. முகத்தில் ஓங்கி ஒரு குத்து குத்தவேண்டும் என்று மனசு பதினெட்டு வயதிற்கு என்னை அழைத்துச்சென்று அவன் மீது வெறி ஏற்றியது. அதற்காக பதினெட்டு வயதில் நான் சண்டியன் என எடைபோட வேண்டாம். கோபம் வரும் என்பதைச் சொன்னேன்.

மனதுக்குள் அவனைத் திட்டித் தீர்த்தபடி காரோடும் போது என்ன கதை மனிதர் நிம்மதியாக பயணிக்க முடியாது ஒரே கதை… உந்தக்கதையை கொஞ்சம் குறைக்கமுடியுமா? ஏன் என்று கேட்க நினைக்கவும். அவன் நீங்கள் எங்கு போகவேண்டும் என்று கேட்கவும் சரியாக இருந்து.

இன்ர நெற்றில் புக் பண்ணி ரக்சியும் வந்து அதில் ஏறியுமாச்சு இப்ப 15 நிடம் கழிந்த பிறகு
இப்பதான் எம்மிடம் உபர் காரன் (ருடிநச ரெக்சிக்காரன்) கேட்கிறான். அட. நீங்க எங்க போக வேண்டும் என்று. நாம் மயிலாப்பூர் என்கிறோம். இது என்ன நீங்கள் ஏறிய கொட்டல் ரி நகருக்கே திரும்பி கிட்ட வந்திட்டோம். உங்கள் ஹொட்டல் காரன் போகவேண்டிய இடம் மயிலாப்பூர் என்று எழுத வேண்டிய இடத்தில் மீண்டும் ஏறின ஹொட்டல் விலாசத்தையே திருப்பவும் போட்டுவிட்டான்.

என்னால் ஒன்றும் செய்ய முடியாது.

இப்ப இன்ரநெற்றில் எழுதினால் அதன் படிதான் நாம் கார் ஓட முடியும் ஒரு இஞ்சியும் வேறு இடத்திற்கு போக முடியாது. வேண்டுமானால் வேறு ஊருக்கு அடித்து செல்லவும் என்றான். இந்த வாகனம் போக முடியாது. சிஸ்ரம் அப்படித்தான் என்று ஒரு குண்டைத் தூக்கி எம்மீது போட்டான் அந்த றைவர் பெடியன். இவ்வளவு நேரமும் யார் யாருக்கோ வில்லனா இருந்தவன் இப்ப எங்களுக்கே வில்லங்கமான வில்லனாய்ப் போட்டான்.

சரி நீங்கள் இந்த நம்பருக்கு ஒருக்கால் அடியுங்கோ. இதுதான் ஹொட்டல் நம்பர். இந்த நம்பருக்குரியவர்தான் எமக்கு புக் பண்ணி விட்டவர் என்று நம்பரைக் கொடுத்தேன்.

அவரும் வாங்கி வைதத்தார். இருவரும் அதே வில்லத்தனதுடன் கதைத்து முடித்தார்.
நீ பிழை! நான் பிழை!! நீதான் புக்செய்தது பிழை என்ற வாதம் அவர்கள் இருவரிடையும் தொடர்ந்தது.
நாம் அப்ப நடு ரோட்டில்தான் என்று எண்ணவும், அவன் போனைக் கட்பண்ணி விட்டு, நடக்கிறது நடக்கட்டும், நம்ம முதலாளி பண்ணுறதைப் பண்ணட்டும். இடம் தெரியாத உங்களை நடுரோட்டில் விட்டுவிட்டு என்னால் போக முடியாது. நான் உங்களை மயிலாப்பூரில் விட்டுவிடுகிறேன் என்று சொல்லி விட்டு. மீண்டும் தன் கள்ளக் காதலிக்குப் போன் போட்டான். மறுபக்கத்தில் அவள் என்ன இன்று சுத்தி சுத்தி ஒரே இடத்தில் நிக்கிறியே! என்னதான்டா இப்பவேணும் என்றாள்.

அவள் தன்னைச் சுத்தி சுத்தி வருவதை நினைக்க, நான் இவ்வளவு நேரமும் சுத்தி சுத்தி ஒரே இடத்தில் நின்றதை நினைத்துக்கொண்டேன்.

அட இவனைக் கெட்டவன், ஒன்றுக்கும் உதவாதவன் என்று நான் நினைத்து அவனைத் திட்டித் தீர்த்தபடியே பயணம் செய்ய, அவனோ நடுத் தெருவில் தெரியாதவர்களை விட்டுவிட்டுப் போக முடியாது முதலாளி என்ன பண்ணினாலும் பரவாய் இல்லை, உங்களை மயிலாப்பூரில் விட்டுவிடுகிறேன் என்று சொல்லி கொண்டு போய் விட்டு விட்டும் போகிறான்.

இவன் வில்லனா! இல்லை அவன் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைத்து திட்டித் தீர்த்த நான் வில்லனா. அந்த மயிலாப்பூர் கபலீஸ்வரனுக்கே வெளிச்சம்.
ஒன்று மட்டும் உண்மை. ஒரு கெட்வனிடமும் சில நல்ல குணங்கள் இருக்கத்தான் செய்யம் என்பதை ஏற்றுக்கொண்டது மனது.

பி.குறிப்பு: அந்தக் கள்ளக்காதலியை நான்தான் தவறுதலாக எண்ணிவிட்டேன். அது அவளது தங்கை என எக்காரணம் கொண்டும் படங்களில் வரும் திருப்பம்போல் சொல்ல மாட்டேன். அந்த இடத்தில் நான் அவனுக்கு இன்னும் வில்லன்தான்.

-மாதவி

1,881 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *