உனக்குத் தெரியுமா – 04

1.ஒருத்தி திரைப்படத்தின் இயக்குனராகமட்டுமல்லாது அந்த படைப்பை உலகளவில் எடுத்து சென்ற அனுபவத்தை சொல்லுங்கள்

அனைவருக்கும் வணக்கம், முதலில் இந்த நேர்காணலை மேற்கொள்ளம் உங்களுக்கம் வெற்றிமணி பத்திரிகைக்கும் எனது நன்றிகள். “ஒருத்தி” திரைப்படம் என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை தந்திருக்கிறது. இதை உருவாக்கும் பொழுது இப்படி ஒரு வெற்றியை எதிர்பார்க்கவில்லை. கனேடிய மண்ணில் மட்டுமே திரையிட நினைத்திருந்தேன்.
ஏனெனில் எனக்கு கனடாவை தாண்டி வேறு நாடுகளில் நன்பர்களில்லை. ஆணால் என் ஊரை சார்ந்தவர்கள் என் படத்தை பார்த்து விட்டு வெளிநாடுகளிலும் திரையிட உதவுவதாக வாக்களித்தனர். அந்த வகையில் francey அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் திரையிடப்பட்டது. அதை தொடர்ந்து பார்வையாளர்களின் விமர்சனங்களால் London, Swiss, Germany, Norway, USA என்று 8 நாடுகளில் திரையிடகூடுயதாக இருந்தது. உலக அளவில் இப்படத்தை கொண்டு செல்ல சமூகவலைதலங்கள் மிகவும் உதவியாக இருந்தது.
நான் ஒருத்தி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இருந்தாலும் இந்த வெற்றி எனதுமட்டுமல்ல, எந்த எதிர்பார்ப்புமில்லாமல் திரைக்குப்பின்னால் உதவிய நல்லெண்ணம் படைத்த அத்தனை நன்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

  1. canadavil நீங்கள் செய்திதுறையில் மக்களுக்காக செய்துவரும் சேவைகளை எப்படி எல்லோரும் பார்க்கலாம்?

canadaவில் 1999ல் இருந்நு பல ஊடகதுறையில் பணிபுரிந்து இப்பொழுது 20 வருட அனுபவத்தின் பின்பு எனது சொந்த ஊடகத்தை உருவாக்கயுள்ளேன். மக்கள் இப்பொழுது நேரமில்லாத காரணத்தினால் தொலைக்காட்சி பார்பதை மற்றும் வானொலி கேட்பதை குறைத்துவரும் இந்த காலகட்டத்தில் அன்றாட செய்திகளை சுருக்கமாக சமூகவலைதளங்களில் oliparappu.com எனும் youtube channel வழி வெளியிடுகிறோம். குறிப்பாக good evening Canada எனும் ஒரு மணி நேர செய்தி சேவை ஊயயெனயவின் நிகழ்வுகளை மட்டுமே தாங்கி வருகிறது. துரடல மாதம் ஆரம்பிக்கபட்ட இந்த நிகழ்ச்சி பல்லாயிரகணக்கான மக்களால் பார்வையிடபடுவதை நினைத்து மிகவும் மகிழ்சியடைகிறேன்.

  1. இயக்குனர், எழத்தாளர், அறிவிப்பாளர், தயாரிப்பாளரென பன்முகம் கொண்ட உங்களின் எதிர்காலத்துக்கான திட்டங்கள் விருப்பங்கள் என்ன?

நான் நடத்திவரும் இந்த சமூகவலை செய்தி சேவைகளை என்னும் பல விடயங்களுடன் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மற்றும் புதிய திரைப்படங்கள் எடுக்க வேண்டும். ஒருத்தி படம் பெரும் வெற்றயை பெற்றதால் அடுத்த படைப்பக்களை மிகவும் கவனமெடுத்து நேரமெடுத்து மக்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்ய வேண்டும். ஒருத்தி படத்தை நானே ஒவ்வொரு நாடுகளுக்கும் எடுத்துக்கொண்டு போய் திரையிட்டேன். அடுத்து வரும் படங்கள் ஒரே நாளில் சகல நாடுகளிலும் வெளிவர வேண்டும். அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்.

  1. ஈழத்து படைப்பாளரின், சினிமாவின் இன்றைய நிலை என்ன? அதை அடுத்த நிநிலைக்கு கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும்?

ஈழத்து திரைப்படங்களை பொறுத்தவரை சந்தைப்படுத்துவதற்கும் வினியோகப்படுத்துவதற்கும் சரியான வழிகள் என்னும் அமைக்கப்படவில்லை. 2 காரணங்களை குறிப்பிட விரும்புகிறேன். 1. தரமான படைப்பகளை உருவாக்க தவறி பார்வையாளர்கள் சலிப்படைந்திருக்கலாம். 2. தரமான படைப்புகளுக்கு சரியான விளம்பரம் இல்லாததால், வியாபார யுக்தி இல்லாமையினால் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படாமலிருக்கலாம். தரமான படைப்பகளை சரியான திட்டமிடலுடன் கையாண்டால் எமது சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லலாம். மிகவும் திறமையான எமது கலைஞர்கள் நம் மத்தியில் உள்ளனர். ஒற்றுமையாக திட்டமிட்டு செயல் பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

  1. ஈழத்து சினிமா பொருளாதாரரீதியல் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்? உங்கள் படம் வெற்றி பெற்றதா?
    எனது “ஒருத்தி” திரைப்படம் வியாபார ரீதியாக பெரும் வெற்றியடைந்ததென பெருமையுடனும், மன நிறைவுடனும், மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கு காரணம் சரியான திட்டமிடல்தான். இந்திய சினிமா எமது முன்னோடிகள். அவர்களை பார்த்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். வினியோக யுக்தியை, ஒற்றுமையுடன் கையாள வேண்டும். இது எமக்கு பெரும் வெற்றியை கொடுக்கும்.
    இவ்வளவு நேரமும் என் அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள என்னை அழைத்த “வெற்றிமணி” பத்திரிகைக்கும் எனது தோழி பிரபாலினிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

-பிரபாலினி.பிரபாகரன் (அமெரிக்கா)

1,527 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *