இங்கிலாந்தில் தற்போது வசிக்கும் 3 மில்லியன் ஐரோப்பியரின் நிலை என்ன?

3 மில்லியன் ஐரோப்பிய நாட்டைச் (EU) சேர்ந்தவர்கள் இங்கிலாந்தில் (UK) வில் வசித்து வருகிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட நேரம் ஆனி மாதம் 2021ம் ஆண்டு வரை, இது வரை மட்டும் தான் இவர்கள் இங்கிலாந்தில் (UK) தங்களை “SETTLED STATUS” என்று பதிய முடியும்.

இங்கிலாந்து (UK) ஐரோப்பிய யூனியனில் (EU) இருந்து நிரந்தரமாக 29 MARCH 2019 விலகிறது.

அரசாங்கம் என்ன சொல்கிறது என்றால், இதுவரை UK யில் இருந்தவர்கள் தாராளமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் exit அல்லது exit இல்லை க்குரிய விதிமுறைகளுக்கு கட்டுப் பட வேண்டும்.

இங்கிலாந்தின் மந்திரிகளின் (ministers) அளிக்கும் வாக்குறுதிப்படி சில தரவுகளை நிரப்பவேண்டி (paper works) இருக்கும், ஆனால் அவை பெரிதளவில் நேரம் எடுக்கமாட்டது! சில வினாடிகளிலேயே கேள்விகளிற்கு பதில் நிரப்பிவிடலாம்.
முதலில் பரீட்சாரத்திகமாக 4000 க்கும் மேற்பட்ட லிவப்பூல் (Liverpool) இருக்கும் பல்கலைக்கழக மாணவர்களும் (university students) 12 NHS Trust சில் வேலை பார்ப்பவர்களும் தான் இந்த கேள்வி பதில் ழடெiநெ நிரப்ப இருக்கிறார்கள். இவர்களுக்கு Home office சில் பணிபுரிபவர்கள் எப்படி நிரப்புவது என்பதினை பக்கத்தில் இருந்து கற்றுக் கொடுப்பர்.

EU Settled status சிற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்குத் தேவையானவை: அடயாளதிற்கு ஆதாரம், குற்றவியல் ஒன்றும் இல்லை என்ற அத்தாட்சி, புகைப்படம் ஆகியவன. Home office சில் பணிபுரிவோர் உங்களுடைய உத்தியோகத்தில் உங்களைப் பற்றி விசாரனைகள் மேற்கொள்வார்கள்.

இவற்றை செய்வதற்குரிய செலவு, £65 பெரியவர்களுக்கும் சிறியோருக்கு (அதாவது 16வயதுக்குட் பட்டோருக்கு) £32.50 ஆகும்.
EU மக்கள் இங்கே சுலபமாக ளநவவடநன ளவயவரள அடைவதற்காகவும் பணிபுரிவதற்காகவுமே இப்படி ஒரு நடவடிக்கையை உருவாக்கியுள்ளோம் என்றார் Emigration Minister Caroline Nokes.

இப்போதில் இருந்தே சிறு சிறு குழுவாக விண்ணப்பிக்க அழைத்து அவர்களது நிலையை (status) தக்கவைத்துக் கொள்ள உதவி செய்கின்றோம். அவர்கள் இப்போது இருப்பது போலவே பின்பும் இருக்கலாம். சிறுதளவில் நாம் மக்களை அழைப்பதற்கு காரணம் என்னவென்றால், இவர்களுடைய பின்னணியை அறிந்து இன்னும் இந்த செயல் முறையை சுலபமாக்குவதற்கே!
இந்த திட்டம் முழுமையாக 30ம் திகதி பங்குனி 2019 ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கு பின்னர் EU வை சேர்ந்தவர்களுக்கு 5 வருடம் UK யில் வசித்தவர்களுக்கு Settled status கொடுக்கபடும்.

31ம் திகதி மார்கழி மாதம் 2020 க்குள் வந்து UK யில் இருப்பவர்களுக்கு, அதாவது இதுவரை UK யில் வசிக்காதவர்களாயிருப்பின் அவர்களுக்கு “pre Settled” என்ற status கொடுக்கபடும். அவர்களும் 5 வருடங்கள் இருந்த பின் “Settled status” கொடுக்கப் படும்.
2020 மார்கழிக்குப் பின்னர் வருவோருக்கு என்ன நிலை என்பது இன்னும் அறிவிக்கப் படவில்லை.

— சிவஜெனனி

2,598 total views, 3 views today

1 thought on “இங்கிலாந்தில் தற்போது வசிக்கும் 3 மில்லியன் ஐரோப்பியரின் நிலை என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *