‘எல்லா வேலையும் கொஞ்சம் தெரிந்தவன் ஆனால் ஒன்றிலும் நிபுணன் இல்லை’

கனகசபேசன் அகிலன் -இங்கிலாந்து.

~JACK or MASTER ? கனக்க எழுதினால் வாசிப்பதற்கு யாருமில்லை, குறைத்து குறளாக்குவதற்கு நான் வள்ளுவனில்லை, சிலவற்றை எழுதாமல் இருக்கவும் முடியவில்லை, நேரமிருந்தால் வாருங்கள்… ‘Jack of all trades, master of none’என்ற வாசகத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள், இதை என் அறிவுக்கு எட்டியவரை தமிழில் மாற்றினால் ‘எல்லா வேலையும் கொஞ்சம் தெரிந்தவன் ஆனால் ஒன்றிலும் நிபுணன் இல்லை’ என்று அர்த்தப்படும்.

இக்காலங்களில் இது ஒருவரை அவமதிப்பதற்காக கூறப்படுவது போல் எமக்கு தெரிந்தாலும், ஆரம்ப காலங்களில் இது ஒருவரை பாராட்டுவதற்காகவே கூறப்பட்டது. இங்கு துயஉம என்று வர்ணிக்கப்பட்டவர் வில்லியம் ஷேக்ஸ்பியர் (William Shakespeare) என்று கூறுகின்றார்கள் – நாடக அரங்கங்களில், ஒரு இயக்குனராக, பிறர் மறந்துபோன வசனங்களை அவர்களுக்கு ஞாபகப்படுத்த கூடியவராக, மற்றும் வேறு பல வேலைகளை (அந்த துறையில் உள்ளவர்களைவிட திறமையாக) செய்யக் கூடியவராக அவர் இருந்திருக்கிறார். இனி விடயத்திற்கு வருவோம்,
நண்பனொருவன் அன்று என்னை தொலைபேசியில் அழைத்து ‘Boiler(கொதிகலன் – குளிர் நாடுகளில் தண்ணீரை சூடாக்குவது) இல்லோ பழுதாய் போச்சுது, உனக்கு பழுது பார்க்கும் யாரையாவது தெரியுமே?’ என்று கேட்டான், நான் இல்லையென்று கூற, அவன் ‘சரி, எனக்கு தொட்டாட்டு வேலை செய்யிற பெடியன் ஒருவன் இருக்கிறான், அவனுக்கு எல்லா வேலையும் ஓரளவுக்கு தெரியும், அவனை கேட்டு பார்ப்போம்…’ என்று கூறி தொலைபேசியை வைத்து விட்டான்.

இரண்டு நாள் கழித்து திரும்பவும் என்னை அழைத்து ‘டீழடைநச க்கு என்ன நடந்ததென்று தெரியுமே? நான் சொன்ன பெடியன் வந்து, ஐந்து மணித்தியாலம் செலவழிச்சு, எல்லாத்தையும் கழட்டி பார்த்தும், ஒன்றுமே சரிவரவில்லை, பெடியன் பாவமென்று எண்பது பவுணை (£80) கொடுத்து அனுப்பி விட்டனான், பிறகு Heating Engineer (வெப்ப பொறியியலாளன்) ஒருவன் வந்து அதை அரை மணித்தியாலத்திலை செய்து போட்டான் ஆனால்’……’என்ன ஆனால்?

டீழடைநச வேலை செய்யுது தானே?’ என்று நான் கேட்க. அதற்கு அவன் ‘ஓமடா…ஆனால் தொண்ணூறு பவுண் (£90) எடுத்திட்டான், அதுவும் அரை மணித்தியாலத்திற்கு!’ இதுதான் பல இடங்களில் நடக்கும் பிரச்சனை, ‘நான் தான் சகலகலா வல்லவன்’ என்று திரிபவர்களிற்கு, அவர்கள் ஒழுங்காக செய்யாத வேலைக்கு, மணித்தியால கணக்கு பார்த்து சந்தோசமாக காசு கொடுக்க நாங்கள் தயார், ஆனால் எமது நேரத்தையும், தமது நேரத்தையும் விரயம் செய்யாது, எமது பிரச்சனையை இலகுவாக தீர்க்கும் நிபுணர்களுக்கு உரிய பணம் கொடுக்க தயங்குகின்றோம்! இதயத்தில் ஏதாவது கோளாறு வந்து அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தால், பணம் குறைவாக எடுப்பார் என்று பக்கத்து றோட்டிலுள்ள பரியாரியிடம் துணிந்து நெஞ்சை காட்ட எத்தனை பேர் தயார்?

‘எல்லா வேலையும் தெரிந்திருந்தால் வாழ்க்கையில் கஷ்டப்பட தேவையில்லை’ என்று சிறு வயதில் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன், உண்மையும் கூட, எல்லா வேலைகளும் ஓரளவு தெரிந்திருப்பதால் பல நன்மைகள் உண்டு, இப்படியானவர்களுக்கு எப்போதும் ஏதாவது வேலையும் பண வருவாயும் இருந்து கொண்டேயிருக்கும், ஆனால் அவர்கள் செலவழிக்கும் நேரத்திற்கு ஏற்ப ஊதியம் கிடைக்கின்றதா என்பது கேள்விக்குறி!

இப்படியானவர்கள் ஒருவராவது எல்லா வேலைத்தலங்களிலும் இருப்பார்கள், இவர்களை வேலையில் இருந்து நிறுத்துவது கஷ்டம், நிறுத்தினால் முதலாளிக்கு நஷ்டம்! ஆனால் இவர்களில் பலருக்கு பதவி உயர்வும் கிடைப்பதில்லை. ஓரிரு வேலைகளில் நிபுணர்களாக இருப்பவர்கள் குறைந்த நேரத்தில் மிகுந்த பணத்தை சம்பாதிக்கின்றார்கள், தமக்கான நேரத்தையும் உருவாக்கிக்கொள்கிறார்கள். பண வருவாய் போதாதென்று ஒவ்வொரு வேலையாக மாறி மாறி நேரத்தையும், சக்தியையும் வீணடிக்காது, எந்த துறையாக இருந்தாலும் பிடித்தமான ஒரு துறையை தேர்வு செய்து, முழு முயற்சியுடன், அந்த துறையிலுள்ள நுணுக்கங்களை அறிந்து, எல்லோரும் உங்களை தேடி வரும் வகையில் ஒரு நிபுணராக வருவீர்களாயின், பல துறைகளை ஓரளவு தெரிந்தவர்களை விட நீங்கள் மிகவும் உயரத்துக்கு செல்லலாம் என்பது எனது அபிப்பிராயம். Jack of all trades, master of (N)ONE….

762 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *