கனடா உதயன் பத்திரிகையின் பல்சுவைக் கலைவிழா ஸ்காவுறோவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கனடா ஒன்ராறியோ மாநில முதியோர் நலன் பேணல் விவகார அமைச்சர் றேமண்ட் சோ,கனடா பாராளுமன்ற உறுப்பினர் சல்மா ஷாகித் ,ரொறொன்ரோ நகர பிரதி மேயர் ஜெனிபர்,ரொறோன்ரோ நகர கவுன்ஸ்லர் ஜமால் மேயர்,ஊடகவியலாளர்கள்,எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,பத்திரிகையாளர்கள்,தமிழகப் பாடகர் வி.எம்.மகாலிங்கம் மற்றும் சுமார் நாநூறுக்கும் மேற்பட்ட நேசத் தமிழ் நெஞ்சங்கள் கலந்து கொண்ட கனடா உதயன் விழாவுக்கு சுவிஸ் தொழிலதிபரும்,சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கத்தின் தலைவரும்,எழுத்தாளரும்,கலாநிதி கல்லாறு சதீஷ்; நாகேஸ்வரன் அருள்ராசா அவர்கள் பிரதம விருந்தினராக அழைக்கபட்டிருந்தார்.

பிரதம விருந்தினர் கல்லாறு சதீஷ் அவர்களுக்கு கனடிய நலவாழ்வு அமைச்சர் றேமண்ட் சோ பொன்னாடை போர்த்திக் கௌரவித்ததுடன்,ஒன்ராறியோ மாநில பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி,ரொறோன்ரோ மாநகர கவுன்ஸிலர் ஜமால் மேஜர்ஸ் ஆகியோர் கனடா வருகையை வரவேற்று அவர்தம் தமிழ்ப் பணியை வாழ்த்தி உரை நிகழ்த்தியதுடன் சிறப்புச் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவித்தார்கள்.கனடிய அரசு சார் உறுப்பினர்கள் கல்லாறு சதீஷ் கனடா வந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் அவரை வாழ்த்தி வரவேற்பது தமிழுக்குக் கனடா வழங்கும் முக்கியத்துவத்தின் ஒரு பகுதியாகவே நோக்கப்படுகிறது.

பிரதம விருந்தினர் கல்லாறு சதீஷ் தனது உரையில்;”கிறிஸ்துவுக்கு முன்னர் 161 ஆம் ஆண்டு சோழமன்னர் எல்லாளனுடைய ஆட்சி மௌனித்தது,கிறிஸ்துவுக்குப் பின்னர் 1077 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழ மன்னனின் ஆட்சி மௌனித்தது,2009 ஆண்டு மீண்டுமொரு முறை தமிழர்களின் ஆயுதங்கள் மௌனித்தன,இப்படி ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறைதான் மண் மீட்பும்,வெற்றியும்,தோல்வியும் மாறி மாறி நிகழ்ந்தன! உயிர்கள் விதைக்கப்பட்டன.
எனவே தங்களின் உரிமைகளுக்காகத் தமிழர்கள் எதிர்காலத்தில் “அன்பு “என்கிற வழியை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும்,அதற்காகக் கல்வியிலும்,பொருளாதாரத்திலும் தங்களை மேலும் வளர்த்துக்கொண்டு பேச்சு வார்த்தைகளின் மூலம் மட்டுமே தமிழர்கள் தாங்கள் இழந்த உரிமைகளை மீட்டுக்கொள்ள வேண்டும், என்று பேசினார்.

மற்றும் அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,மேயர்,கவுன்சிலர்,என்று பலரும் உரை நிழ்த்த நடனம்,நாட்டிய நாடகம் என இயல்,இசை,விழாவாக உதயன் பல்சுவைக் கலாச்சாரவிழா இனிதே நடைபெற்றது.

புலம்பெயர் தமிழர்களின் உச்ச நட்சத்திரப் பத்திரிகையாக கனடா உதயன் விளங்குகிறது. கடந்த 27 ஆண்டுகளாக உதயன் என்றும் அதற்கு முன்னர் 3 ஆண்டுகள் சூரியன் என்றும் முப்பதாண்டுகள் வரலாறைக் கொண்டது கனடா உதயன் பத்திரிகை. கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு.லோகன் லோகேந்திரலிங்கம் அவர்களின் சிந்தனையிலும்,தேனீயைவிடச் சிறந்த சுறு சுறுப்பிலும்,அவர்தம் பாரியார் திருமதி லோகேந்திரலிங்கம் பாப்பா அவர்களின் ஆலோசனையிலும் கனடா உதயன் புலம்பெயர் தமிழர்களின் தனித்த அடையாளத்தைப் பெற்ற பத்திரிகையாகத் திகழ்வதை அவதானிக்க முடிகிறது. கனடா உதயன் பத்திரிகை கடந்த ஞாயிறு(15.10.2023) அன்று மாலை ஸ்காவுறோ தமிழிசைக் கலாமன்றத்தில் நடாத்திய பல்சுவைக் கலைவிழா பத்திரிகையின் வெற்றியின் ஒரு அடையாளம் என்று கூறலாம். இந்த நிகழ்வுக்கு மட்டுமே சுமார் முப்பதற்கும் மேற்பட்ட வர்த்தகப் பிரமுகர்கள் நிதி அனுசரணை வழங்கியதுடன் அல்லாமல் விழாவுக்கு வந்தும் சிறப்பித்தனர்.

459 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *