|
மணிரத்னத்தின் அடுத்தப்படம் தமிழ். இந்தியில் ஒரே நேரத்தில் தயாராவது தெரிந்த விஷயம்
ராமாயாணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்குகிறார் மணிரத்னம். இந்தியில் இந்தப் படத்துக்கு 'ராவணன்' என பெயர் சூட்டியிருக்கிறார். தமிழில் படத்தின் பெயர் 'அசோகவனம்'. ராவணன் சீதையை கடத்தி அசோகவனத்தில் சிறை வைத்தான் என்பது புராணம். இந்தியில் ராவணனை உருவகிக்கும் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கிறார். தமிழில் அந்த வேடத்தை ஏற்க இருப்பவர் ப்ருதிவிராஜ். இந்தி பதிப்பில் அனுமன் வேடத்தில் கோவிந்தா நடிக்கிறார். ராமனாக அபிஷேக் பச்சனும், சீதையாக ஐஸ்வர்யா ராயும் நடிக்கின்றனர். தமிழில் ராமன் வேடத்தை செய்பவர் விக்ரம்.
|