ஹோம்லி நயன்தாராவுக்கு டூ பீஸ் உடையணிந்து அழகு பார்த்தவர் விஷ்ணுவர்தன். இப்போது 'சர்வம்' படத்தை இயக்கி வருகிறார். த்ரிஷா, ஆர்யா இதில் நடிக்கின்றனர். சில நாட்கள் முன்பு 'சர்வம்' படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தனுடன் த்ரிஷா மோதல் என்று யாரோ இன்டஸ்ட்ரியில் கொளுத்தி போட்டனர். இது பற்றி எந்த கவலையும் இல்லாமல் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.படத்தின் க்ளைமாக்ஸில் த்ரிஷா இறப்பதுபோல் காட்சி வருகிறது. இதை த்ரிஷா விரும்பவில்லை. அதனால்தான் இருவருக்கும் சண்டை என்பது வதந்தியின் சாரம். இது ஒருபுறம் இருக்க கோவாவில் நடந்த பாடல் காட்சியில் நீச்சல் உடையில் நடித்துள்ளார் த்ரிஷா. ஹோம்லி நயன்தாராவுக்கு டூ பீஸ் உடையணிந்து அழகு பார்த்தவர் விஷ்ணுவர்தன். சர்வத்தில் அதேபோல் டூ பீஸ் உடையில் த்ரிஷாவை உலவவிட்டுள்ளார். நயனைபோல் டூ பீஸில் த்ரிஷாவை பார்க்கலாம் என அதிகம் எதிர்பார்க்காதீர்கள். காரணம் செமி நீச்சல் உடையில்தான் நடித்திருக்கிறார், த்ரிஷா. எப்படியோ ரசிகர்களை குளி்ர்வித்தால் சரிதான்.
|