அன்று அண்ணாந்து பார்க்க வைத்தவர்களை இன்று அண்ணாந்து பார்க்க வைத்த திருவிழா

 

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து 1980 களில் யேர்மனி வந்த வேளை, கோடைகாலத்தில் தெருக்களை அடைத்து பல கடைகள் போட்டு அவர்களது பாரம்பரிய உணவுகள், உடைகள், சிறுகடைகள், என பலவற்றுடன் தெருவிழாக்கள் நடைபெறும். தெருவில் அமக்களமாக பெரும் Nமைடையில் இசை நிகழ்ச்சி நாடகம் என பல நடக்கும்.

தாய் நாட்டை விட்டு பிரிந்த துயரத்திலும், மனதை திசைதிருப்பி ஆறுதல் பெற இப்படியான நிகழ்வுகள் அன்று எமக்கு கைகொடுத்தன என்பதும் உண்மையே.
அன்று அப்படி தெருக்களில் விழா நடக்கும்போது அண்ணாந்து பாரத்தவர்கள் நாம். புரியாத மொழி, பழகாத உணவு, அறியாத கலைகள், இப்படிப் பல இருப்பினும், புதியனவற்றை அறியவேண்டும் என்ற ஆவல் எம்மினத்துடன் கூடப்பிறந்தது. அதனால் நிகழ்வுகளை அணு அணுவாக இரசிப்போம்.
அன்று அண்ணாந்து பார்க்க வைத்தவர்களை, இன்று ஆண்ணாந்து பாரக்க வதை;த நிகழ்வாக தமிழ்கள் நடத்திய தெருவிழாவினைக் காண்கின்றோம்.
யேர்மனியில், கடந்த 08.09.2018 சனிக்கிழமை டோட்மூண்ட் நகரில் தெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா டோட்முண்ட் தமிழர் அரங்கம் ஏற்பாட்டில், யேர்ர்மன் தமிழ் வர்த்தகர் சங்கம், தமிழர் கலையகம், உழஅனர.வை, எஅனழ போன்ற பல்வேறுபட்ட அமைப்புக்களின் ஆதரவுடன் விழா நடைபெற்றது

வு வடிவில் தெருவை மறித்து மேடை போட்டு விழா நடத்தப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் ஒரு புறம். தாயக உணவுகள் மறுபுறம். தெருப்புறம் எங்கும் வேட்டியும் சேலையும் சறமுமாக மனதுக்குள் மொட்டுவிட்டு இருந்த ஆசைகள் எல்லாம் மொத்தமாக விரிந்து மணம்பரப்பியது ஒரு பூரிப்பாக இருந்தது. பொய்க்கால் குதிரையாட்டம் அது எம் மெய்கால்களைத் துள்ளவைத்தது. கடைகள் எங்கும் ஊர்வாசம். தெருக்களில் பாடல்களை உரத்துக்கேட்டு எத்தனை வருடம். -பாடும்போது நான் தென்னங்காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று- பாடல் இன்று யேர்மனியிலே வீட்டில் கூட அவ்வளவு சத்தமாக கேட்க முடியாது. ஆனால் அன்று தெருவிழாவில் அமக்களமாகக் கேட்டோம்.

தாயத்தை மறக்காத நாம,; புலம்பெயர் நாட்டில் சில மணித்தியாலங்கள் என்றாலும் தாயகமாக நம்மிடத்தை மாற்றி மகிழ்ந்தது மனதுக்கு இனிமையான ரம்மியமான பொழுது அது. தாயத்திற்கு போக வசதி அற்றவர்களுக்கும்,மனச்சாந்தி தரும் நிகழ்வாக அமைந்தது.

பல்லாயிரக்காணக்கான மக்கள் ஒன்று கூட யேர்மனியில் உள்ள அனைத்து தமிழ் ஊடகங்களும்,யேர்மன் ஊடகங்களும், கைகொடுத்தன என்பது மகிழ்வான செய்தியாகும்.
இவ்விழா ளுவசநநவ குநளவ சிறப்புற உழைத்த அனவருக்கும் பாராட்டுக்கள். புலம்பெயர் வாழ் தமிழர்கள் கலைகளில் மட்டும் அல்ல கல்வியிலும் பிற இனத்தவர்கள் அண்ணாந்து பார்க்கும் அளவு உயர் நிலையடைந்திருப்பது இரட்டிப்பு மகிழ்வான செய்தியாகும். படங்கள்: வெற்றிமணி

3,674 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *