தெறிக்கவிடும் தளபதி

விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் டீசர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. டீசரை பார்த்த ரசிகர்களையும் தாண்டி சாதாரண மக்களும் வெகுவாக பாராட்டினார்கள். இந்த டீசர் உலக அளவிலேயே வெளியான 24 மணிநேரமாக லைக்ஸில் முதலிடத்தில் இருந்த விஷயத்தை எல்லாம் ஏற்கனவே நம் தளத்தில் பதிவிட்டிருந்தோம். இப்போது இந்த டீசர் பயங்கர பொருட் செலவில் இயக்குனர் ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து எடுத்துவரும் 2.0 டீசரின் வியுஸை முறியடித்துள்ளது. 18.4M வியுஸ்களை பெற்றிருக்கும் 2.0 டீசரை வந்த 2 நாட்களிலேயே முந்தியுள்ளது, சர்கார் பட டீசர். இதிலிருந்து விஜய் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை மிக நெருங்கி வந்துவிட்டார் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.
2,655 total views, 2 views today