கனவு – அது ஒருவர் பார்த்து அனுபவிக்கும் நாடகம்

” I have a dream” இக்கூற்றினைப் பற்றி அறியாதவர்கள் பலர் இருக்கமுடியாது. நீக்கிரோக்களின நல் வாழ்விற் காகக் குரல் கொடுத்து மடிந்த மார்ட்டின் லூதர் கிங் என்ற பெருமகன் 1963ஆம் ஆண்டு அமெரிக்காவில் வாசிங்ரன் நகரில் உள்ள லிங்கன் ஞாபகார்த்த சதுக ;கத்தில்; ஆற்றிய பிரபலமான உரையின் ஆரம்ப வசனம்தான் இது. இங்கு அவர் கண்ட கனவு என்பது நனவாக வேண்டும் என்ற உள்ளத்தில் எழும் கற்பனை.
இதற்கு உறங்க வேண்டிய தேவை இல்லை.
“கனவு – நினைவு” இப்படி அற்புதப் பொருத்தமான இரு பதங்கள் வேறு எந்த மொழியிலாவது உள்ளதோ எனக்குத் தெரியவில்லை.

நான் சொல்ல வரும்; கனவு தான் என்ன? உறங்கும் போது நடைபெறும் நிகழ்வு. அதற்கு ஒன்றோ டொன்று தொடர்புடைய நான்கு அர்த்தங்கள் உள்ளன.

1.கனவின் போது மிகச் சிறிய அளவிலே மூளை இயங்கச் செய்கிறது. வெளியே இருந்து ஏதாயினும் தூண்டல்கள் மூளையை வந்தடைவது தடுக்கப் படுகிறது.”நான,; எனது” என்ற “சுய தொகுதி” கனவின் போது; இல்லாமல் போய்விடுகிறது.

2. கனவு என்பது நாம் அனுபவிப்பது. நிகழ்ச்சி நடக்கின்ற போது எமது புலன்களைச் சம்பந்தப் படுத்துவாகவும் அமைகிறது. நாமே கனவின் பிரதான நடிகராக அமைவதால் சில சமயங்களிலே அது மிக உணர்வு பூர்வமானதாகவும் அமைந்து விடுகிறது .

3. அதிகாலையில் நாம் எழுந்திருக்கும் போது இந்தக் கனவு எமக்கு நன்றாக நினைவில் உள்ளமையால் கனவு அனுபவத்தை நினை வாற்றலில் பதித்துள்ளோம்.

4. எமது கனவு அனுபவத்தை நாம் எழுத்து மூலமாகவோ அல்லது வாய் மொழியாகவோ இன்னொருவருக்குச் சொல்கின்றோம்;. ஆகவே கனவு எனும் நாடகத்தை நாம் ஒருவர் மாத்திரமே அனுபவிக்கிறோம். இன்னொருவர் காண்பதற்கோ கேட்பதற்கோ சந்தர்பம் கிடைப்பதில்லை இல்லை.

நாம சொல்லித் தான் இன்னொருவருக்குத் தெரிய வருகிறது. ஆகவே கனவு என்பதை உறக்க நிலையில் நாம் அனுபவிக்கும் உணர்வினை நினைவுக்குக் கொண்டு வருதல் எனலாம் அல்லது எமது சுய தொகுதி வெளி உலகத்துடன் தொடர்பற்ற நிலையில் இருக்கும் சமயத்திலே எமது மனத்தில் நடைபெறும் சிறுசிறு நாடகங்கள் எனலாம்.

சாதாரணமாக சராசரியாக ஒருவருக்குத் தினசரி மூன்றோ நான்கோ கனவுகள் வரலாமாம். குழந்தைகள் கூடிய நேரம் உறங்குகின்றமையால் அவர்களுக்குத் தினசரி இன்னும் அதிக கனவுகள் தோன்றலாம். நாம் உறங்குகின்ற சமயங்களிலே REM என அழைக்கப் படும் Rapid eye movement நடைபெறுகிறது. அச் சமயத்தில் மூடப்பட்ட கண் இமைகளின் பின்னே நமது கண்கள் முன்னும் பின்னுமாக அசைகின்றன என 1950ம் ஆண்டிலே ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அப்போது தான் கனவுகள் ஏற்படுகின்றதாக உளவி யலாளர்கள் சொல்கிறார்கள். நமது உறக்கத்தின் ஆரம்பத்தில் தோன்றும் கனவுகள் சிறியயை யாகவும் நேரம் போக நீண்டு கொண்டும் போகுமாம். சிறப்பாக பிந்தி வரும் கனவுகள் நெடியவையாக இருப்பதுடன் மிகத் தெளிவானவையாகவும் அதிகம் போலித்தன மானவையாகவும் அமைய லாம். நம்மவர்கள் இதனா லேயே காலையில் கண்ட கனவு பலிக்கும் எனப் பயந்தடித்தபடி இருப்பதைக்காணலாம்.

கனவு பற்றி வெவ்வேறு கொள்கைகள் விஞ்ஞானிகளால் சொல்லப் பட்டுள்ளன. சிக்மண்ட் புறோயிட் (sigmund freud) எமது மனத்திலே நம்மால் அடக்கப் பட்ட ஆசைகள் வேறோரு அடையாளத்தில் புலப்பட்டு எமது மனத்திற்கு அந்த ஆசையை நிறைவேற்றிய மனச் சாந்தியைத் தருவதுடன் அந்த எண்ணம் மீண்டும் எமது வாழ்வில் குறுக்கிடாமல் செய்கிறது என்கிறார். காதல் வயப் பட்டவர்கள், சிறப்பாக ஒரு தலைக் காதல் வயமானோர், இக் கொள்கையினை ஏற்பார்கள் என நம்பலாம்;.
அமெரிக் பூர்வ குடிமக்களின் கனவு பற்றிய கொள்கை நம்மவர்களுக்குப் பெரும் அளவிலே ஒத்து வரும் போலத் தெரிகிறது. கனவுகள் உண்மை நிகழ்வுகள் என்பார்கள் அவர்கள். எமது கனவுகள் எம்மைப் பற்றிய உண்மை களையும் எமது வாழ்வு பற்றிய செய்தி களையுமே சொல்வதாக அவர்கள் கருதுகிறார்கள்.

இன்னொரு கொள்கை மிகவும் ஜதார்த்தமானது. அதன் படிக்கு எமது நாளாந்;த அனுபவங்கள் எமது ஆழ் மனத்திலே (Sub conscious mind) தங்கியுள்ளன. நாம் உறங்குகின்ற போது இவற்றில் சிலவற்றை எமது மூளை தொகுத்து ஒரு சிறு நாடகமாக எமக்குக் கனவு மூலமாக அளிக்கின்றது. இரவிலே அதி பயங்கரமான திரைப்படம் ஒன்றினை உங்கள் பிள்ளைகள் பாரத்தார்கள் என்று வையுங்கள். அன்று இரவு உங்கள் தூக்கம் நிம்மதியாக இருக்கும் என்பதற்கு உத்தர வாதமே இல்லை. நடு இரவில் பிள்ளைகள் உங்களைத் தட்டி எழுப்பி உங்களுடன் உறங்கப் போகிறேன் பயங்கர கனவுகள் வருகின்றன என்று கெஞ்சுவார்கள. ஏன் பெரியவர்கள் கூட இத்தகைய கனவுகளைக் காண்பது உண்டு. ஆனால் அனுபவங்கள் அன்றன்றே கனவில் வரவேண்டும் என்ற அர்த்தம் இல்லை. அனுபவங்கள் எமது ஆழ்மனதிலே வருடக் கணக்கிலே புதையுண்டு இருக்கலாம். இந்தப் புதையலை கிண்டி எடுத்து தெர்குத்து நீக்க வேண்டியதை நீக்கி தேர்ந்த நுனவைழச ஆக மூளை ஒரு நாடகத்தை அமைத்து பல வருடங்களின் பின்னே உங்களைப் பார்க்க வைக்கலாம். சில வருடங்களுக்கு முன்னர் இங்கே ஒரு வழக்கு நடைபெற்றது.

28 வயதுப் பெண்மணி ஒருவர் தனது சிறிய தந்தையார் தன்னைப் பால்முறை வன்செயலுக்கு ஆளாக்கினார் எனக் குற்றம் சாட்டினார். அப்போது தனக்கு 7 வயது எனவும் கூறினார். தனது அறியாப் பருவத்தில் நடந்த இந்த நிகழ்ச்சி தனது உறக்கத்தை இப்பொழுது கனவுகள் மூலமாகக் கெடுப்பதாகக் கூறினார்.
எத்தகைய கனவுகள் என்பதை நீங்கள் அறிந்தால் ஆச்சரியப் படுவீர்கள். அப்பெண்ணுக்கு அதிக கனவுகளிலே தனது பற்கள் வீழ்வதாக இருக்குமாம். நம்மவர்கள் பல் விழுவதாகக் கனவு கண்டால் இறப்பு நடைபெறும் என்பார்கள். பல்விழுவதாகக் கண்ட கனவுக்கும் பாலியல் வன்முறைக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா. கனவுகள் தத்ரூபமாக நடந்த நிகழ்வுகளைக் காண்பிக்க வேண்டும் என்பதில்லை. அவை சங்கேதங்களாகவோ குறியீடு களாகவோ

(symbolic) அமையலாம். இப்பெண்ணை அக் கொடியவன் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கு கின்ற பொழுது அதற்கு ஏழு வயது. அப்பொழுது தான் அதன் பாற்பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் தோன்றுகின்றன. எனவே கனவு நிஜநிகழ்ச்சியைப் புலப்படுத்தாது சங்கேதமாக நடந்த காலத்தைப் பிரதிபலித்துள்ளது.

கனவுகள் வாழ்க்கைக்கு இ;றியமையாதவையா என்ற வினா எழுகிறது. இது அவரவர்கள் மனப் பான்மையிலேயும் அவர்கள் வாழ்கின்ற கலாச் சாரத்திலேயுமே தங்கி உள்ளது. ஆனால் சில பிரபலங் களைக் கனவுகள் வழிநடத்திய உண்மை பதிவுகளில் உள்ளன. ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்காவின் குடியரசுத்தலைவராக இருந்த போது படுகொலை செய்யப் பட்டார.;
அவர் படுகொலை செய்யப்படுவதற்குச் சிறிது காலத்திற்கு முன்னர் அவர் ஒரு கனவு கண்டாராம்.” வெள்ளைமாளிகையிலும் அதற்கு வெளிப் புறத்திலும் மக்கள் பெரும் தொகையாக நின்று பெருமளவில் தமது துயரத்தைக் காட்டியபடி இருந்தார்களாம். அங்கே ஒருவரின் உடல், (அதனைக் குடியரசுத் தலைவர் என்றே லிங்கன் இனம் கண்டார்,) காணப்பட்டதாம்.” லிங்கன் கனவு கண்ட சில நாட்களில் அவர் கொலை செய்யப் பட்டார். 1983ம் ஆண்டிலே தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த நமது அரசியல் தலைவர் ஒருவரை நான் சந்தித்து உரையாடிக் கொணடிருந்த போது அவர் காலம் சென்ற தமிழ்த் தலைவர் இ.மு.வி நாகநாதன் தன்னை அங்கே வருமாறு அழைப்பதாககத் தான் அடிக்கடி கனவு கண்டதாகக் கூறினார். சிறிது காலத்தில் அவர் கொலை செய்யப் பட்டார். நான் காங்கேசந் துiறியில் வாழ்ந்த காலத்தில் எனது இல்லத்தில் கிணற்றடியில் இருந்து மலகூடம் செல்வதற்காகப் பாதை அமைத்து அதன் இரு புறங்களிலும் கமுக மரங்கள் நட்டிருந்தேன். ஒரு இரவு அந்தக் கமுகமரத்தில் ஒன்று வட்டுடன் முறிந்து வீழ்வதாகக் கனவு கண்டேன். இதை எனது தாயாரிடம் சொன்னேன். குடும்பத்தில் ஒரு துயரச் சம்பவம் நடைபெறலாம் என்றார். வாரத்தில் எனது மைத்துனர் இறந்தார். Robert Louis Stevenson என்பவர் சென்ற நூற்றாண்டின் பிரபலமான எழுத்தாளர்.

அவருடைய மிகப் பிரபலமான கதைகளில் ஒன்று ” Jeckell and Mr Hyde” இந்தக் கதைக்கான கரு அவருக்குக் கனவிலே தான் தேன்றியதாம். 1960களில் மிகப் பிரபலமாயிருந்த இசைக் குழுவினரில் ஒருவரான Paul Mccartneyக்கு yesterday என்ற பாடலுக்கு இசை கனவிலே தான் உதித்ததாம். இப்படிப் பல உதார ணங்கள் சொல்லலாம். ஏன் உங்களுக்குக்கூட இத்த கைய பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆகவே கனவுகள் வாழக்கைக்கு இன்றியமையாதவையா என்பதற்குப் பதில் கூறு முடியாது. அவரவர்கள் மனப் பாங்கினைப் பொறுத்தது. கனவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பவரும் உளர் அதனை உதாசீனப் படுத்தி உடனடியாக மறந்து விடுபவரும் உளர்.

ஆழ்மனத்திலே உள்ள வாழ்க்கை அனுபவங்கள் வெகுகாலத்தின் பின்னர் கனவுகளாக வருவதாகக் கூறியிருந்தேன். அதே போன்று சில சமயங்களிலே கனவுகள் கூட ஆழ்மனத்திலே புதையுண்டு விடுவதும் உண்டு. இரவினிலே கண்ட கனவு , கனவு முடிந்து கண் முழித்ததும் நினைவுக்கு வரும் ஆனால் மீண்டும் உறங்கிக் காலையில் எழுந்ததும் அரைகுறை ஞாபகமே வருவதும் உண்டு. ஆனால் பின்னர் ஒரு பொழுது அது நினைவுக்கு வரலாம்.

இரண்டு கண்களும் பார்வை அற்றவர்கள் கனவு காணமுடியுமா என எண்ணலாம். கனவு என்பது கண்கள் மூலம் காண்பது இல்லையே. அது ஒரு அகத் தோற்றம் எனவே கண்பார்வை இல்லாமலே பார்க்கக் கூடியது ஒன்று உண்டென்றால் அது கனவு மாத்திரமே.

விலங்குகளால் கனவு காணமுடியுமா என்பது இன்னொரு சந்தேகம் உள்ள. எல்லா விலங்கு களாலுமே கனவு காண முடியுமாம். வீட்டிலே படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் நாயினை அவதானித்தீர்களானால் அதன் கால்கள் சில சமயங்களில் அசைவதைக் காண முடியும். அப்போ அது கனவு காண்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். கனவு மெய்ப்பட வேண்டும் காரியமாவது விரைவில் வேண்டும் ( பாரதி)

— ஆக்கம். அமரர் பொ.கனகசபாபதி( முன்னாள் அதிபர்.மகாஜனா கல்லூரி தெல்லிப்பளை)

1,202 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *