திருமந்திரம் கூறும் ஆவனப்படுத்தல்
இற்றைக்கு 1600 வருடங்களுக்கு முன்பே (கி.பி. 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டு) திருமூலர் திருமந்திரத்தில்(திருமந்திரம்) தனது செயல்பாட்டை தானே ஆவணப்படுத்தியுள்ளதன் மூலம் ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவத்தை எமக்குக் கூறியுள்ளார். எமது மூதாதையர் தாங்கள் வாழ்ந்த காலத்தில் நடந்தவற்றை ஆவணப்படுத்தத் தவறியதாலும், சைவசமய, சாஸ்திர, வானியல், மருத்துவம், இன்னும் பல விடையங்கள் பற்றி முனிவர்கள், சித்தர்கள், நாயன்மார்கள், புலவர்கள் உட்பட பல அறிஞர்களால் எழுதிவைக்கப்பட்ட ஏடுகளை பின்பு வந்தோர் பாதுகாக்கத் தவறியதாலும், அன்னியர்களின் படை எடுப்புகளாலும், இயற்கை அனர்த்தங்களாலும், தென்கிழக்கு ஆசியாவில் பெரிய நூலகமான கிட்டத் தட்ட 97,000 அரிய நூல்களையும், பழமையான ஓலைச்சுவடிகளையும் கொண்ட யாழ் நூலகம் இலங்கை அரசால் 01-06-1981 இல் முற்றாக எரிக்கப்பட்டதாலும், தமிழ்ச் சமுதாயம் குறிப்பாக சைவசமயத்தவர் பெரும் இழப்பிற்கு ஆளாகியுள்ளோம். இதன் விளைவு வரலாறுகள் திரிபு படுத்தப்பட்டும், யாரோ செய்ததை வேறு ஒருவர் செய்ததாகக் கூறுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இதனால் எது சரி எது தவறு என அறியமுடியாத நிலையும் இன்றைய சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ளது. பல ஆராய்ச்சியாளர்கள் வருடக்கணக்காக சரியான தகவல்களை அறிவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். சிலர் தங்கள் அனுமானங்களை கூறியுள்ளது சரியானதுதானா என்னும் கேள்வி இருக்கத்தான் செய்கின்றது.
திருமந்திரத்தை திருமூலராகிய தான்தான் அருளியதாக அவர் பதிவு செய்த திருமந்திரப் பாடல் எண் 3046
“மூலன்உரை செய்த மூவாயிரம் தமிழ்
மூலன்உரை செய்த முந்நூறு மந்திரம்
மூலன்உரை செய்த முப்பது உபதேசம்
மூலன்உரை செய்த மூன்றும் ஒன்றாமே”
திருமூலர் அருளிய மூவாயிரம் பாடல்களும், திருமூலரே சொல்லிய முந்நூறு மந்திரங்களும், திருமூலர் வழங்கிய முப்பது உபதேச மொழிகளும் திருமூலர் தமிழுக்குத் தந்த ஒத்த கருத்துடைய, ஒரே பொருளுடைய தமிழ் மறை எனப் போற்றத்தக்க பெருமை உடையவையாகும்.
திருமூலர் தான் உலகிற்கு வந்த நோக்கத்தைக் கூறிய பாடல் எண் 92
“நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்
நந்தி அருளால் மெய்ஞ்ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளால் நான் இருந்தேனே”
என் தலைவன் நந்தி. அவன் அருளாலே நான் சாத்தனூர் மாட்டிடையன் மூலன் உடலில் புகுந்தேன். பின் நந்தி அருள் துணையாலேயே சிவாகம மந்திரம் செப்பலானேன். நந்தி எம் பெருமான் அருள் வழி காட்டுதலின்படியே நான் மெய்ஞ்ஞான சித்தி பெற்றேன். இப்படியாக நான் பெற்றது உற்றது எல்லாமும் நந்தி அருளாலேயே அல்லாமல், இதில் என் செயல் ஒன்றுமில்லை. ( திருமூலர் திருமந்திரத்தில் (திருமந்திரம்)சிவபெருமானை நந்தி என்றே குறிப்பிடுகின்றார்) திருமூலர் திருக்கயிலாய பரம்பரையில் வந்தவர் என கூறிய பாடல் எண் 91
“விளக்கிப் பரமாகும் மெஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன் சொற்போந்து
வளப்பின் கயிலை வழியில் வந்தேனே”
ஆகம வேதப் பொருளை விளக்கி அருளியவன் பராபரன். மெஞ்ஞானச்சோதி வடிவானவன். அளவிடமுடியாத பெருமை உடையவன். அவனே இன்ப வடிவான நந்தியெம் பெருமான். மனித மனங்களை நடுங்கச் செய்யும் ஆணவ மலங்களைப் போக்கி அருள ஆனந்த நடமிடுபவன். இவன் அருளானையை ஏற்று, வளமிக்க திருக்கயிலாய மலைஞானகுரு, நந்தி பரம்மரையில் வந்தவன் நான்.
திருமூலர் தனது குரு பரம்பரை பற்றிக் கூறும் பாடல் எண் 67
“நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோடு எண்மரும் ஆமே”
நந்தி எம்பெருமான் திருவருள் கருணையால், மறைப் பொருள் கேட்டுணர்ந்த மாமுனிகள் எட்டுப் பேர்களாவார். அவர்கள் சனகர், சனந்தனர், சனாதனர், சன்ற்குமாரர் என்ற நால்வர். சிவயோக மாமுனிவர், பதஞ்சலி (தில்லைத் தாண்டவம் கண்டு மகிழ்ந்த பாம்புக் காலுடைய தவயோகி), வியாக்கிரபாதர் (புலிக் காலுடைய முனிவர்), என்னையும் சேர்த்துக் குருமார் எட்டுப் பேர்.
திருமூலர் தனது சீடர்கள் யார், யார் என கூறிய பாடல் எண் 102
“கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர்
நலந்தரு மாளிகைத் தேவர் நாதாந்தர்
புலம்கொள் பரமானந்தர் போக தேவர்
நிலம்திகழ் மூலர் நிராமயத் தோரே”
திருவருளும் குருவருளும் கலந்த மெய்த் தவயோகிகள் காலாங்கர், அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர், போகநாதர், திருமூலர் என்னும் எழுவராவர். இவர்கள் அனைவரும் இறவா உடல் பெற்ற தவஞானிகள்.
திருமூலர் தான் பல ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறிய பாடல் எண் 80
“இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணைஅடிக் கீழே”
தியானத்தில் இந்த உடலோடு பல கோடி ஆண்டுகள் வாழ்ந்தேன். பகல் இரவு பேதம் தெரியாது தவயோகத்தில் நான் என்னை மறந்து இருந்தேன். வானுலகத் தேவர்கள் எல்லாம் வழிபட்டு வணங்கும் திருவடியை வணங்கித் துதித்தபடி இருந்தேன். என் தலைவன் நந்தியெம் பெருமான் திருவடியே துணை என்று அதன் கீழே அதனைப் பற்றியபடி பற்று ஒழிந்து இருந்தேன். (திருமந்திரம்)
6,853 total views, 3 views today
Do not get clingy and desperate by calling him / her repetitively!
People may listen any celebrity supply some weight to the thing they are saying.
A massage session will really relax each of us. https://918kiss.host/downloads
Do not get clingy and desperate by calling him / her repetitively!
People may listen any celebrity supply some weight to the thing they are saying.
A massage session will really relax each of us. https://918kiss.host/downloads
Good way of explaining, and pleasant paragraph to obtain information concerning
my presentation subject, which i am going to deliver in university. https://justketodiet.net/
Good way of explaining, and pleasant paragraph to obtain information concerning my presentation subject, which i am going to deliver in university. https://justketodiet.net/
Hello, its nice piece of writing concerning media print,
we all be familiar with media is a fantastic source of facts.
My brother recommended I may like this blog. He was entirely right.
This post actually made my day. You cann’t believe simply how a lot
time I had spent for this info! Thanks!