தொலைபேசியில் பேசியபடி வாகனம் ஓடிபவரைக் குறி வைத்த 20 ஆயிரம் யேர்மன் போலீசார்

கடந்த 20.09.2018 வியாழக்கிழமை வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்புக்கருதி யேர்மனி நாடு முழுவதுமான சோதனைகள் பாதுகாப்பு விளக்கங்கள் என நடத்தப்பெற்றன. இச்சேவையில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
குறிப்பாக வாகனங்களை ஓட்டியபடி தெலைபேசியில் பேசிபடி செல்லும் சாரதிகளினால் ஏற்படும் விபத்தைத் தடுக்க இந்தச் சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாடு முழுவதுமாக ஆயிரத்திற்கு மேற்பட்ட சாரதிகள் பொலீசாரால் பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரனையும், அவர்களின் நடத்தையால் ஏற்படும் விபத்துகள் பற்றிய விளக்கமும் அத்துடன் பேசியதற்கான தண்டமும் அறிவிடப்பட்டது. இவ்வாறு வாகனங்களில் ஓடியபடியே பேசுபவர்களில் பெண்களும், வியாபரம் செய்பவர்களும், ஆண்,பெண் நண்பர்கள் காதலர்கள் என பலரும்; அடங்குவர்.

தாய்மார் பிள்ளைகளுடனும், பாசல் சேவீஸ் வேலை செய்பவர்கள் அவர்களது வாடிக்கையாளர்களுடனும். பேசுவது தெரிவந்துள்ளது. அது மட்டுமல்ல 100க்கு 80 வீதமானவர்கள் தொலை பேசியை வலது பக்க இருக்கையில் வைத்துக்கொண்டே வாகனம் ஓடுகின்றனர். சிலர் வலதுகையில் வைத்துக்கொண்டே கியர்மாற்றுதல் கோப்பி குடித்தல் பேகர் உண்ணுதல், போன்றவற்றையும் செய்கின்றனர். இன்னும் சிலர் கைத்தெலைபேசியில் வீட்டுக் கணக்கு வழக்குகளையும் பாக்கின்றனர். இவையாவும் நேரடியாக பொலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டவையே.

அவர்கள் வாகனம் ஓடும் போது கடைசியாக எப்போது என்ன நேரம் எவ்வளவு நேரம் பேசினார்கள் என்பதனை பொலிசார் தாங்கள் தெருவில் அமைத்துவைத்திருந்த monitor இல் போனை இணைத்து சரியாகச் சொல்கிறார்கள். இதில் Bluetooth இல் இணைத்து பேசியிருந்தால் அவை அதனைக்காட்டும். அது குற்றமில்லை.

இவற்றைவிட ஆச்சரியமானது வியாபாரம் (Business) செய்பவர்கள் தங்களது வலது பக்க இருக்கையில் பல கணக்கு கோப்புக்கைள (File) சரிபாரத்தபடியே வாகனங்களை ஓட்டுகின்றதும் தெரிய வந்துள்ளது. பலர் தங்கள் நேரம் அவசரம் போன்றவற்றைக் காரணம் காட்டினார்கள். அவர்களுக்கு எல்லாம் யோர்மனியில் இத்தகைய சாரதிகளால் ஏற்படும் விபத்தை விளக்கப் படங்கள் மூலம் விபரித்து உதவினர்.

ஒருவர் தொலைபேசியில் கதைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது என்பது 0.8 மில்லி அல்ககோல் குடித்துவிட்டு போதையில் ஓட்டுவதற்கு சமமானது. என்பதனையும் சோதனைகளின் போது குறிப்பிட்டு உள்ளனர்.
வானகத்தில் ஓடிட்யபடியே (Text Message) ரெக்ஸ் மசேச்பண்பவர்கள் தொகையும் அதிகமாகக் காணப்பட்டதை அன்றைய சோதனைகள் எடுத்துகாட்டின. சாரதிகள் மட்டுமன்றி பாதசாரிகளையும் இந்த சோதனை விட்டுவைக்கவில்லை.

பாதசாரதிகள் அவர்கள் தெருக்கடக்கும் போதும், நாயுடன் நடை பயிலும்போதும், தெலைபேசியில் கதைத்தபடியும் ரெகஸ்; பண்ணியபடியும் செல்வதும் இச்சோதனை நேரத்தில் பொலீசாரால் அவதானிக்கப்பட்டு அவர்களுக்கு அறிவுபூர்வமான விளக்கங்கள் கொடுக்பட்டன. புதிய தொழில் நுட்பங்கள் பெருக பெருக விபத்துக்கள் அதிகரித்தவண்ணமே உள்ளன. இவற்றில் புதிய தொழில் நுட்பங்களைத் தடைசெய்வதை விட அதனை முiறாகப் பாவித்தல் எப்படி என்பதனைக் கற்றுத்தேர்தலே முறை யானதாகும். அதனை யேர்மனியில் அன்று பொலீசார் மேற்கொண்டனர்.

— சிவப்ரியன்

727 total views, 1 views today

1 thought on “தொலைபேசியில் பேசியபடி வாகனம் ஓடிபவரைக் குறி வைத்த 20 ஆயிரம் யேர்மன் போலீசார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *