முகத்தில் சிரிப்பில்லை என்று குறை சொல்ல வேண்டாம் அது விற்றமின் டி குறைபாடாகவும் இருக்கலாம்.
விற்றமின் (னு) டி யின் முக்கியத்துவம்
தாய்நாட்டை விட்டு வந்த எமக்கு. இழப்பு அங்குள் சொந்தங்களும் பழங்களும் உணவுகளும் மட்டுமல்ல அங்கு உதிக்கும் காலைச் சூரியனுமே. நாம் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌவுக்கியமே என கண்ணதாசன் சும்மாவா சொன்னார். நமது தோல் நிறத்திற்கு சூரிய ஒளி மிக மிக அவசியம். நாம் நம் இடத்தைவிட்டு வெளிநாடு வந்ததுவிட்டோம். அதனால் எம்மவரில் 85 சதவீதமானோர் விற்றமின் டி குறைபாடுக்கு உள்ளாகி உள்ளனர்.
சூரியன் ஒளி எமது தோலில் படாதமையால் மட்டும் அல்ல இந்த விற்றமின் டி குறைபாடு ஏற்படுகின்றது. எவ்வித உயிரினச் சார்பான உணவும் ( Vegan) மற்றும் பால்வகை ஒவ்வாமையுடையவர்களுக்கும் இக்குறைபாடுவரும். எமது தோல் சூரிய ஒளியை உள்வாங்கி விற்றமின் டி ஜ உருவாக்குகின்றது. அதே சமயம் சில உணவுவகைகளில் இது இயற்கையாகவும் இருக்கிறது. சில மீன்; வகைள், மீன் லிவர் ஓயில், முட்டை மஞ்சள் கரு. மற்றும் தானிய வகைகளில் உண்டு.
இந்த விற்றமின் டி குறைபாட்டால் எலும்பு கலங்களின் அடர்த்திக்குறைவு ( Bone Density) எலும்பு புரை, (Osteoporosis) எலும்பு முறிவு ஆகியன ஏற்படலாம். இது மட்டுமன்றி இருதய நோய்கள் சர்க்கரைவியாதி உயர் இரத்த அழுத்தம், தசைநார்ப்பிடிப்பு, மற்றும் உடலில் இயல்பாக உள்ள எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்படலாம்.
விற்றமின் டி அதிகமான அளவு குறைந்தவர்களுக்கு இன்னும் பல நோய்கள்
வரவாய்ப்புக்கள் உண்டு. குறிப்பாக சிறுவர்களுக்கும் (Rickets Disease) எலும்புகள் பலவீனமாக்கும் நோய்களும் ஏற்படலாம். அவர்களின் வளர்ச்சி அதனால் குன்றும்.
ஆரம்பத்தில் Vitamin D குறைபாடுகளால் சிலருக்கு உடற்சோர்வும், நோவும் தோன்றலாம். இதனை ஒரு நோய் என்று கொள்ளாமல் இது வயதினால் அல்லது வேலைச்சுமையினால் வந்தது என இலகுவாக உதாசீனம் செய்துவிடுவார்கள்.
சிலருக்கு முன் நெற்றி வியர்த்தலும் ஒரு அறிகுறியாகும்.
மற்றும் வெளிநாட்டில் உள்ள நம்மவர்களது முகத்தில் சிரிப்பைக் காணாதமைக்கும் பிறரைமட்டும் குறை சொல்லாதீர்கள், இந்தச் சூரியனும் ஒரு பொறுப்பாகும். அதாவது சூரிய ஒளியை பாரப்பதால் எமது உடலில் செரோனின்; சுரக்கும். (Serotonin) இது எமது மனநிலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். இது பாதிப்பானால் சிரிப்பு இழந்து மன உழைச்சலுக்கு ( Depression) ஆளாவோம்.
முக்கிய குறிப்பு இவற்றில் உள்ள அறிகுறிகள் எதுவும் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நீங்கள் ஆசிய நாட்டவராக இருந்தால் நிச்சயமாக உங்கள் வைத்தியரை அணுகி Vitamin D பரிசோதனையை மேற்கொள்ளவும்.
— சிவஜெனனி
821 total views, 1 views today