பூமியின் சுழற்சி வேகம் குறைந்துகொண்டே போகின்றதா?
ஒரு நாள் என்றால் என்ன? நமது புவி தன்னைத் தானே ஒரு முறை சுற்றி வருவதை நாம் ஒரு நாள் என்று கூறுகின்றோம். ஆனால் இந்த ஒரு நாள் எப்போதுமே ஒரு நாளாகத் தானா இருந்தது? என்ன புரியவில்லையா? அது என்னவென்றால், நமது பூமி எப்போதுமே அதே வேகத்தில் தானா தன்னைத் தானே சுற்றிக்கொண்டு இருந்தது?
நமது பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்றி வருவதை ஒரு நாள் என்று அழைக்கின்றோம். உண்மை சொல்லப் போனால் இப்படி ஒரு முறை தன்னைத் தானே சுற்றி வர நமது பூமிக்கு சுமார் 23 மணித்தியாலங்கள் 56 நிமிடங்கள் 4 வினாடிகள் மட்டும் தான் தேவைப் படுகின்றது. ஆனால், உங்களுக்கு ஒன்று தெரியுமா? பகல் பொழுதுகள் கொஞ்சம் கொஞ்சமாக நீண்டு கொண்டே போகின்றன. உலகம் தோன்றிய பொழுது ஒரு நாள் எவ்வளவு மணி நேரம் கொண்டது என்பதை உங்களால் யூகிக்க முடியுமா? இரவும் பகலும் சேர்ந்து வெறும் 6 மணி நேரம் மட்டுமே தான் நீடித்தது! 400 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இதே ஒரு நாள் 21 மணி நேரம் நீடித்தது. அப்படி என்றால் அந்நேரம், ஒரு வருடம், அதாவது நமது பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர, 410 நாட்கள் நீடித்தது. காலம் போகப் போக, சுமார் 100 மில்லியன் வருஷங்களுக்கு முன்னர் வாழ்ந்த டைனசோர்களுக்கு ஒவ்வொரு நாளும் 23 மணி நேரங்கள் நீடித்தது.
பல மில்லியன் மில்லியன் வருஷங்களுக்கு முன்பு நமது பூமி வேகமாக தன்னைத் தானே சுற்றிக்கொண்டு இருந்தது. அதோடு ஒப்பிடும் பொழுது தற்போது நமது பூமியின் சுழற்சி வேகம் குறைந்துவிட்டது. ஆனால், பல நம்பத்தகுந்த ஆதாரங்களின் படி பூமியின் இந்தச் சுழற்சி வேகம் போகப் போக இன்னும் குறைந்து கொண்டே போகுமாம். ஆனால், கவலைப் படாதீர்கள், நமது பூமி சுழல்வதை ஒரு போதும் முற்றிலும் நிறுத்திவிடாது. அதற்குக் காரணம், பூமியின் சுழற்சி நின்றுவிடுவதற்கு முன்பு, நமது சூரியன் ஒரு சிவப்பு அரக்கனாகி நமது உலகை அழித்துவிடும். இதைப் பற்றி கூட நான் முன்பு ஒரு சிருகட்டுரையில் எழுதியிருந்தேன், அதைக் கண்டிப்பாகப் படித்துப் பாருங்கள். எனவே, கவலைப் படாமல் இன்றைய நாளை மிகவும் சந்தோஷமாகக் கழியுங்கள்!
சரி நண்பர்களே இனி நீங்கள் கூறுங்கள். நமது பூமி பற்றி உங்களுக்குத் தெரிந்த வேறு சுவாரசியமான விஷயங்கள் என்ன? இதற்குப் பதிலை மட்டுமில்லை, எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக எனது முகநூல் பக்கத்தில் (றறற.கயஉநடிழழம.உழஅஃளஉinசைழளா) அறியத்தாருங்கள்!
— Dr. Niroshan Thillainathan —
765 total views, 2 views today