சாதிக்கத்தானே புலம்பெயர்ந்தோம்!
சுபா உமாதேவன் சர்வதேசத் திட்டங்கள் சுவிஸ் என்னும் குழந்தைகள் உதவி நிறுவனத்தின் புதிய நிர்வாகப் பணிப்பாளராகப் பதவியுயர்வு பெற்றுள்ளார் என்பது ஊடகங்கள் மூலம் அறிந்ததே! இன்று பல சுவிஸ் ஊடகங்கள் சுபா பற்றிப் பேசுகிறது. இலங்கையிலிருந்து இரண்டுவயதில் பெற்றோருடன் சுவிஸ் வந்த சுபா, கல்வியில் சிறந்தார்,பெற்றோரை வணங்கினார், சமூகத்தை,மனிதத்தை நேசித்தார். தனக்கு வாழ்வு தந்த தேசத்தை மதித்தார்.உலக மானுடத்தை நேசித்தார்.
பல்கலைக்கழகங்களில் இளமாணி,முதுமாணிப் பட்டங்களைப் பெற்று சுவிஸ்தேசம் போற்றும் பெண்ணாக இன்று உயர்ந்துள்ளார்.தமிழ் மக்கள் நடாத்துகின்ற அதிக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.
தமிழில்,ஆங்கிலத்தில்,பிரெஞ்சில்,ஜேர்மனில் என்று அனைத்து மொழி களையும் சரளமாக மேடைகளில் பேசி சபையைத் தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பார்.இவர்பேசும் தமிழில் மொழி இனிமை இருக்கும்.இவரின் இந்த உயர்ச்சிக்குத் தாய்மொழி அறிவும் ஒரு அடிப்படை என்பேன்.
சுபா ஜெனிவாவில் தொகுத்து வழங்கிய எழுத்தாளர் கல்வியாளர் அருந்த வராசா அவர்களுடைய இரண்டு நூல் வெளியீட்டு விழாக்களும் எனது தலைமையில் நடைபெற்ற போதும், ஐடீஊ தமிழின் சுவிஸ் விழாவின் போதும் சுபாவின் மொழி ஆளுமை பார்த்து நான் வியந்ததுண்டு.
தற்போதைய எனது அதிக வாசிப்பு என்பது ஜேர்மானிய மொழியில்தான், வழமைபோல் “லுசேர்ணர் றுண்ட்ஷாவ்”என்னும் இலவசப் பத்திரிகையை வாசித்துக்கொண்டிருக்கும் போது,எனக்கு ஆச்சரியம் தரத் தக்க வகையில் எமது பிரதேச செய்தித் தாளிலும்,சுபாவின் போட்டோவுடன் கூடிய கட்டுரையை வாசித்தேன்,எமது பிள்ளை ஒன்று 72 நாடுகளில் உதவிப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு உயரிய நிறுவனத்தின் பணிப்பாளராகப் பேசுவது,புலம்பெயர் வாழ்வு தந்த வரம் என்று மகிழத் தோன்றுகிறது. புலம்பெயர் சமூகம் தொடங்கிவிட்டது,அகதிச் சமூகமல்ல, அதிதிச் சமூகமாக வரலாற்றை மாற்றி எழுதத் தொடங்கி விட்டார்கள்.
மொழிச் சிரமம் கொண்ட முதல் சந்ததியின் குழந்தைகள் பன்மொழிப் பாண்டித்தியத்துடன் சுவிஸின் சகல திணைக்களங்களிலும் அதிகாரிகளாக வலம் வரத் தொடங்கிவிட்டார்கள். தமக்கு வாழ்வு தந்த தேசத்திற்கும்,மக்களுக்கும் நன்றியுடனும்,தேசத்தின் சட்டங்களுக்குத் தலை வணங்கியும் எமது சந்ததி வீழமாட்டோம் என்று வீறு நடை போடுவதைப் பார்க்கும் போது எனது நெஞ்சம் நிறைந்து பூரிக்கிறது. ஆனந்தக் கண்ணீர் கொட்டுகிறது.
“ளுவநடட னசை எழச …….னர ளிசiஉhவளவ ….ரனெ யடடந höசநn ணர”
“நினைத்துப் பாருங்கள் …. இன்று நீ பேசுகிறாய், எல்லோரும் கேட்கிறார்கள்.”
சுபா இந்த உயரத்தை நிமிர்ந்து நின்று தொட்டுள்ளார்.தன்னம்பிக்கையைத் தாங்கி நின்று தழுவியுள்ளார்.எமது சமூகம் தொடவேண்டிய உயரங்களின் உண்மையான தொடக்கப் புள்ளியாக சுவிஸிலிருந்து சுபா தோன்றியுள்ளார். வாருங்கள் எமது நேச உறவுகளே சுபாவின் காலடித்தடம் பதித்து உலகின் சிகரங்களைத் தழுவுங்கள்.
உலகில் குழந்தைகள் மிகுந்த சிரமங்களையும்,வலிகளையும் அனுபவித் துக்கொண்டிருக்கிறார்கள், குறிப்பாகப் பெண்குழந்தைகளின் பாடுகளோ மிகவும் சோகத்துக்குரியது, உலகளாவிய ரீதியில் இவர்களின் குறை அகற்ற சுபா உமாதேவன் வழிநடத்தும். Pடயn ஐவெநசயெவழையெட ளுஉhறநணை எனும் அமைப்பும், சுவிஸ் பழழபடந நிறுவனமும் இணைந்து நடாத்திய ஒக்டோபர் 11,பெண் குழந்தைகள் சர்வதேச தினத்தின் உச்சிமாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது.
இரண்டு வயதில் புலம்பெயர்ந்த சுபா உமாதேவன் ஒரு உயர்ந்த சுவிஸ் சர்வதேச நிறுவனத்தின் தலைமைப்பீடத்தை நிறைப்பதானது எம்மினம் சாதிக்கத் தொடங்கிவிட்டது எனும் நம்பிக்கையைத்தருகிறது.
“புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் முதல் தலைமுறை என்ன செய்தார்கள்? என்ற வினாவுக்கு,அவர்கள் தங்களின் சந்ததிக்கு சர்வதேசக்கல்வியை வழங்கிச் சென்றார்கள்” என்கிற உண்மையான சமூக நேசர்களின் இலட்சியத்தச்,சத்தியத்தை நிறைவேற்றி நிற்கும் சுபா போன்ற ஒவ்வொரு பிள்ளையும் எமது நம்பிக்கையின் சொத்தாகும்.
-கல்லாறு சதீஸ்
826 total views, 1 views today