6.5 மில்லியன் மக்கள்! யேர்மனிக்கு பியர்குடிக்க படை எடுத்தனர்!
யேர்மனியில் நடைபெறும் கொண்டாட்டங்களில் உலகப் பியர் கொண்டாட்டம் மிகவும் பிரபலமானதாகும்;. பியர்(beer) குடிபானம் உற்பத்தியிலும் ரசித்து ருசித்துக் குடிப்பதற்கு ரகமான பியர் என்றால் அது யேர்மனியில்தான் கிடைக்கும் என உலகப் பெருங்குடி மக்கள் கருதுகிறார்கள். பியர் குடிப்பதற்கென்றே உலகநாடுகளிலிருந்து யேர்மனிக்குப் படை எடுத்துவரும் பெரும்குடிமக்கள் ஏராளம்பேராவர். இந்தப்பியர்திருவிழா யேர்மனியில் 1880ம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டு வருடாவருடம் நடைபெற்று வருகின்றது. வழமையாக நடைபெறும் முன்சன் மாநகரில் 22.09.2018 தொடங்கி 7.10.2018ல் முடிவடைந்தது. 2 வாரங்களாக நடைபெற்ற இந்தப்; பியர்த்திருவிழாவில் சுமார் 6.5 மில்லியன் உலகமக்கள் கலந்துகொண்டனர்.
இது நடைபெற்ற இடம் ஒரு கிராமம் போல் காட்சியளித்தது. சுமார் 8.000 பேர் ஒரே நேரத்தில் இருந்து குடித்து மகிழும்வண்ணம் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் 8 மில்லியன் லீட்டர் பியர்வகைகளைக் குடித்துத்தள்ளியிருக்கிறார்கள் இந்தப் பெருங்குடி மக்கள். ஒரு லீட்டர் பியர் 11 12 யூரோவரை விலைபோயுள்ளதென்றால் மிகவும் விரும்பி உண்ணும் பன்றி இறைச்சிவகை எத்தனை தொன் என கணக்குப் பாருங்கள். இந்தக்குறிப்பிட்ட இரு வாரமும் முன்சன் நகரமே
விழாக்கோலம் பூண்டிருந்தது. விடுதிகள், ரெஸ்ரோரண்ட் எல்லாம் பல நாட்டு மக்களால் நிரம்பி வழிந்ததாம். பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து அனைத்து விடையங்களையும் முன்சன் மாநகரசபையினர் மேற்கொண்டிருந்தனர். இந்த பியர்த் திருவிழாவில் நம்மவர்களும் ஒரு சிலர் சென்றுவந்தாகத் தெரியவந்துள்ளது.
3.5 மில்லியன் யேர்மனியர் புகைத்து தள்ளுகிறார்கள்!
நு.ணுபையசநவவநn அதாவது மின்சாரச் சிகரட் என்றும் கூறலாம். இது சாதாரண சிகரட்டைவிட ஆபத்துக் குறைவானது எனக் கருதப்படுகின்றது. 1963ம் ஆண்டில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதுதான் இதை அதிகம்பேர் பாவிக்கிறார்கள்.
யேர்மனிய சனத்தொகை சுமார் 82 மில்லியன்பேரில் 3.5 மில்லியன் பேர் இதைப் பாவிக்கிறார்கள். இதனால் சுமார் 600 மில்லியன் யூரோவிற்கு வருடாந்த வியாபாரம் நடைபெறுகிறது எனத் தெரியவருகின்றது.
யேர்மனிய மக்களில் 77 வீதம் ஆண்களும் 23 வீதம் பெண்களும் இந்தச் சிகரெட்டைப் பாவிக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எது எப்படியாயினும் இந்தப் புகைத்தலால் மனிதகுலத்துக்கு அழிவுதான். ஆகவே புகைத்தல் பழக்கமுடையவர்கள் படிப்படியாகக் குறைத்து இல்லாமல் செய்தால் இன்னும் பல ஆண்டுகள் உயிர் வாழலாம் என்பது உண்மையான விடையமாகும்.
— வ.சிவராஜா
561 total views, 1 views today
1 thought on “6.5 மில்லியன் மக்கள்! யேர்மனிக்கு பியர்குடிக்க படை எடுத்தனர்!”