கடலில் மீனொன்று அழுதால் கரைக்கு செய்தி வருமா? – #MeToo
எங்கு பார்த்தாலும் இன்று #MeToo என்னும் தலைப்பே செய்தி ஊடகங்களில் நிறைந்து உள்ளது. „நானும்“ என்று அர்த்தம் பெறும் இது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆழான பெண்கள் குரலெழுப்பும் பிரச்சாரத்தை குறிப்பிடுகிறது. அன்றாடம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்துகொண்டு இருக்கின்றனர், வேலையிடத்திலிருந்து, பாடசாலை வீடுவரைக்கும் தொல்லை விடுவதில்லை. பல காலமாக தமக்கு நடந்த அக்கிரமங்களை சுற்றாடலில் மூடிமறைப்பது மட்டுமல்லாமல், பாதிக்கபட்ட இவர்களும் தமக்கு அசிங்கம், சுயவெறுப்பு, மானம் என்பவையை எண்ணி தாமே மூடிமறைத்திருக்கின்றனர்.
இந்த இயக்கம் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் முன்வருகின்றனர். இன்று சினிமாவைச்சார்ந்தோரும், அரசியல்வாதிகளும் முனைய, சராசரி பெண்களும் குரலெழுப்பத் துணிகின்றனர். சமூகவலைகளும் இதற்கு இடம் கொடுக்கின்றன. ஆண் பெண் சம்பள வேறுபாட்டின் கருத்துக்களத்தை நான் அமைத்தபோது: „ராம், நான் சித்திரவதைகளும் அன்றாட அநீதிகளும் தாங்கமுடியாது வேலைக்குப் பாவாடை சட்டை அணிவதை நிறுத்திவிட்டேன். விசில்கள், முணுமுணுப்புக்கள் வாயால் கூறமுடியாதவை!“. இது ஜேர்மனியின் மிக முக்கிய வங்கியொன்றில் உயர் அதிகாரிகளாக பணிபுரியும் பெண்கள் சொன்னது.
„ஒரு பெண், தன் ஆடைமூலம் பாலியல் முறையில் எவருக்கும் எந்தவித அனுமதிகளும் கொடுப்பதில்லை, ஆனால் சமுதாயம் அதை விளங்குவதில்லை. அலுவலகத்திற்கு நான் கிழங்குச்சாக்கையா அணிந்து வரவேண்டும்?“ என்கிறர்கள். வருவாய் பற்றிப் பேச்சுவார்த்தை செய்யப் போன மாநாடு, பாதுகாப்பான தொழிலிடத்திற்கான பேச்சுவார்த்தை ஆனது.
வேடிக்கைபோலத் தெரியும் இது, மிகப்பெரிய சிக்கலொன்றின் குறுகிய பங்கு. பாலியல் சித்திரவதை என்பது கற்பழிப்பு மட்டுமல்ல. பேச்சு, விசில், தொடுதல், ஏன் தவறான அழைப்பிதழ்களாகவும் இருக்கலாம் என்பதை முதற்கண் ஏற்றுகொள்வோம்.
பிரபலங்களினால் இன்று இந்த அநீதிகள் வெளிவருகின்றன. கவிஞர் வைரமுத்தின வரிகளிலேயே சொல்ல: „கடலில் மீனொன்னு அழுதா கரைக்கு சேதி வந்து சேருமா?“ ஆணாதிக்க உலகில் சிறுபான்மைகளின் குரல்களுக்கு இடமில்லை. சமுதாயம் ஆண் என்றும் ஆண்தான், பெண்கள் அதற்கேற்ப நடத்தல் வேண்டும் என்று தவறுகளை அற்பாமாக்கின்றனர். இன்று விஜய் போன்னற முன்னணிக் கதாநாயகர்கள்; திரைப்படங்களில் கதாநாயகியை மோட்டார்வண்டியில் சென்று வீடியோ எடுப்பதும், ஆன் வீரத்தனம் கொண்ட படங்களை Marketing செய்ய, பெண் நடிகைகளை உபயோகிப்பதும் பாலியல் பலாத்காரங்களை ஊக்கின்றது.
திரைப்படங்களில்„துரத்தித் துரத்திக்காதலிப்பது“ கூட, பெண்ணிற்கு சுயமுடிவுகள் எடுக்கமுடியாமல் ஆணே அவளுக்கு எது தேவை என காட்டவேண்டும் எனும் எண்ணத்தையும், பெண்கள் மேல் ஆண்களுக்கு உரிமை உண்டு எனும் எண்ணங்களை அங்கீகரிக்கிறது. இது „Toxic Masculinity“ அதாவது விசத்தனாமான ஆண்மையை சமுதாயத்தில் வளர்க்கின்றது.
ஒரு பக்கம், குற்றம்சாட்டப்பட்ட ஆண்கள் தனது ஊடக அறிக்கையில் மிகத்தீவிரமாக குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அச்சுறுத்தல் செய்ய, இன்னொரு பக்கம் ஆண்கள் பெண்களை அணுக பயம் கொள்கின்றனர். ஒரு பெண் தனது „கண்ணியத்தை“ இழந்து „பொய்க்குற்றச்சாட்டு“ செய்வாளா? பிரபலங்கள் சுயநலம்கருதி
Me Too movement ஐ
துஸ்பிரையோகம் செய்கிரார்களா?
இங்கு எது சரி எது தவறு?
வளர்ந்துவரும் ஆண் சமுதாயத்தை எப்படி வழிப்படுத்துவது? முதற்கண் ஏற்றுகொள்ள வேண்டியது: ஆண் அனுகூலம் இருப்பது யதார்த்தம். ஒரு தீவிர பெண்ணுரிமை யாளியின் மகனான நானே பாடசாலையில் இருந்து உணவகம் வரை, ஒரு பெண் முன்னே ஆணான எனக்கு அமைப்புரீதியாக பலவகை அனுகூலங்கள் இருக்க, அவற்றை உபயோகித்திருகின்றேன்.
ஆனால் இங்கு எனது ஆண்குரலை பெண்ணுக்காக நான் எழுப்புகையில் அவளது ஒலி அழுத்தம் அடைகிறது. இப்படி ஆணாதிகாரத்தை நாம் Trump போன்ற சுயநலவாதிகள் உலகை ஆழ்கையில் திறமையாக உபயோகிக்கவேண்டிய அவசியத்தில் உள்ளோம்.
பெண்ணின் மானம் அம்மா, அக்கா அல்லது தங்கையென்றால் மட்டுமே காக்கபடவேண்டியதல்ல என, உணவுடன் சிறுவர்களுக்கு ஊட்டவேண்டியது கட்டாயம். எப்போதும் எந்த அணுகுமுறைக்கும் சம்மதம் வேண்டும் என்பதே நியதி. வழிமுறை தவறும் பெண்களுக்கு மட்டுமே அக்கிரமங்கள் நடக்கும் என்பது தவறான கருத்து என்று நிரூவிக்கப்படுகின்றது.
அக்கிரமங்களை பற்றி குரல் எழுப்புவது தவறல்ல என்று தெரியவைக்கும் வழியில் சுவர்னா ராஜலிங்கம் தனது 28.000 ஐளெவயபசயஅ நண்பர்களுக்கு, தமிழ் வீடுகளில் நடக்கும் பாலியல் பலாத்காரத்தை அநாமதேய உண்மைக் கதைகளால் தெரியவைத்தார்.
தொடர்ந்து பல கிழமைகளாக உலகளாவிய
ரீதியில் புலம்பெயர் தமிழர்கள் இவரிடம் தங்களுக்கு
நடந்த அக்கிரமங்களை எடுத்துக்கூற : Thelifeofsocialbutterfly என்ற இவரது Instagram பக்கம் கண்மூடித்தனமாக இருந்த எம் சமுதாயத்தை தட்டி எழுப்பியது. புலம்பெயர்ந்த தமிழ் சிறுவர்களின் முக்கிய பிரச்சனைகளில் குடும்பமானத்துடன் தமக்கு நடந்தவையை பெற்றோரிடம் சொல்ல மொழியிலாமையும் உள்ளது என்பவையெல்லாம் தெரியவந்தன.
அன்பு அதாவது Anbu.co.uk (abuse never becomes us) எனும் அமைப்பு சிறுவயதில் பாலியல் பலாத்காரத்தை நேரிட்ட தமிழ் மக்களுக்கு ஐக்கிய ராட்சியத்திலும் கனடாவிலும் உதவி செய்கிறது. Me Too இயக்கத்தில் பிரபலங்கள் இறங்குவதன் நோக்கங்கள் பலவிதமாக இருக்க, சராசரி மனிதர்களிடையே பாலியல் பலாத்காரம் நடப்பதை சொல்ல எமக்குள் இருக்கும் தயக்கம் களைகிறது. ஏனெனில், 90 வீதமான பாதிக்கப்ட் டோர்களுக்கு தம்மை பலாத்காரம் செய்தவரை முன்கூட்டியே தெரியும். இப்படியே கடலில் அழும் பல மீன்களின் சத்தம் கரை சேர்ந்து ஆண்கள் மட்டுமலாமல் பெண்குற்றவாளிகளும் அறியப்படுகின்றனர். படம்: ஜெகதீஸ்வரன். சுவர்ணா:படம்: @thelifeofasocialmedia butterfly .
–ராம் பரமானந்தன்
826 total views, 1 views today
2 thoughts on “கடலில் மீனொன்று அழுதால் கரைக்கு செய்தி வருமா? – #MeToo”