நகுலா சிவநாதனின் ‘நதிக்கரை நினைவுகள் ” நூல் வெளியீடு!
திருமதி நகுலா சிவநாதனின் நதிக்கரை நினைவுகள் எனும் நூல் தமிழகத்தில் திருச்சி நடைபெற்ற நிலாமுற்ற விழாவிலும் சென்னை யிலும் கடந்த மாதம் வெளியீடு செய்யப் பட்டுள்ளது. நிலாமுற்ற விழாவில் வழக்குரைஞர் திரு பா. ரஹ்மான் அவர்கள் வெளியிட்டு வைத்தார். பிரபல தொழில் அதிபர் குமரன் அம்பிகா முதற் பிரதியைப் (நூல்) பெற்றுக்கொண்டார்.
சென்னையில் நடைபெற்ற விழாவில் தொழிலதிபர் நமசிவாயம் வெளியிட திருப்பம் இதழ் ஆசிரியர் சதார் மன்சூர் அவர்கள் பெற்றுக்கொண்டார். நகுலா சிவநாதனின் 12 வது நூலாக நதிக்கரை நினைவுகள் தமிழகத்தில் வெளியீடு கண்டது இவ்விழாவை குறும்பட இயக்குனர் சக்கரவர்த்தி அவர்கள் ஏற்பாடு செய்தமையும் குறிப்பி டத்தக்கது.
713 total views, 1 views today