பங்கு சந்தையும் தனிப்பட்ட ஒய்வுதியமும்
இங்கிலாந்தில் இருக்கும் மிகப்பெரிய 100 கம்பனிகளை உள்ளடக்கிய Index என்பதனை FTSE 100 என்று கூறுவார்கள். இதில் தற்பொழுது HSBC வங்கி முதலாவது இடத்தினையும், B.P இரண்டாவது இடத்தையும் SHELL மூன்றாவது இடத்திலும் MARKET CAPITAL என்ற அடிப்படையில் வகுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த மூன்று கம்பனிகளும் 18வீதமான FTSE 100 மதிப்பீடுகளையும், முதல் 10 கம்பனிகள் 40 வீதமான மொத்த மதிப்பீடுகளையும் அடைந்துள்ளன.
ஓவ்வொரு பிரiஐயும் தமது தனிப்பட்ட ஓய்வுதிய திட்டத்தை அதாவது Personal, Private Pension ஆரம்பிக்கும் பொழுது அவர்களது முதலீட்டின் பெரும்பான்மையான தொகை இந்த FTSE 100 கம்பனிகளில் முதலிடப்படுகின்றன. எனவே FTSE 100ல் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படும் பொழுது அது நிச்சயமாக தனிப்பட்ட ஓய்வுதிய திட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இங்கு இருக்கும் 20வருட FTSE வரைபடத்தை பார்த்தால் May 2018ம் ஆண்டு இது அதிக பட்ச புள்ளியான 7900 மதிப்பை எட்டி இருக்கிறது. இது தான் FTSE 100 வரலாற்றிலேயே அதிகபட்ச மதிப்புகள் ஆகும்.
கடந்த சில நாட்களாக அமெரிக்க நாட்டில் ஏற்பட்ட பங்குச் சந்தை வீழ்ச்சியினால் அது FTSE 100இலும் வீழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. may ல் 7900 என இருந்த மதிப்பு இன்று 7000 ஆக அதாவது 11வீதம் வீழ்ச்சியுடன் காணப்படுகின்றது.
இந்த வரைபடத்தை மிக அவதானமாகப் பார்த்தால் 2000ம் ஆண்டில் 6900 ஆகவும் பின்னர் 2000 தொடக்கம் 2003ம் ஆண்டு காலப்பகுதியில் வீழ்ச்சிகைக் கண்டு, பின்பு 2007ம் ஆண்டு 6800 ஆகவும், பின்பு 2015ல் 7000 என இருந்த FTSE 100 முதல் தடவையாக October 2016ம் ஆண்டு 7000 என்ற மதிப்பை மீறி மேலே சென்றது.
எனவே எமது கணிப்பின் படி 1900 என்ற மதிப்பிற்கு கீழே செல்லாத பட்சத்தில் FTSE 100ன் மதிப்பு இன்னமும் மேலே செல்ல வாய்புகள் இருக்கின்றன. (வரைப்படத்தின் நீல நிறத்தால் கீறப்பட்ட கோடு 6900 என்ற மதிப்பை காட்டுகிறது).
பங்குச் சந்தையில் BULL MARKET, BEAR MARKET என்று அவதானிகள் கூறுவதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். BEAR MARKETஎன்றால் அதிகப்படியான மதிப்பு எண்ணில் இருந்து 20வீதத்திற்கு கீழே விலைகள் வீழ்ச்சி அடைவதனை கூறலாம். FTSE 100 ஐ உதரணமாக எடுத்தால் அதன் அதிகபட்சமான 7900 விலையில் இருந்து 20வீதம் குறைவாக அதாவது 6300க்குக் கீலே சென்றால் இதினை BEAR MARKET எனக் கூறுவோம். வரைபடத்தில இதனை பச்சை நிறமான கோட்டினால் தெரியப்படுத்தி உள்ளோம்.
தனிப்பட்ட ஓய்வுதியத்தை எந்த ஒரு நபரும் தனது 55ஆவது வயதில் இருந்து முதல் 25வீதம் வரை எந்த வித வரியும் செலுத்தாமல் எடுத்துக் கொள்;ள முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
FTSE 100 INDEX க்கும் தனிப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கும் இடையில் உள்ள நேரடி தொடர்பினால் FTSE யில் அடுத்த சில மாதங்களில் குறைவடையலாம் என நினைப்பவர்கள் முதல் 25வீதமான தொகையை WITHDRAW பண்ணிக்கொள்வதை ஒரு தந்திரமாக கருதலாம்.
767 total views, 1 views today