மெல்ல மெல்ல மெலிகிறார்

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார் கமல் ஹாஸன். இந்தியன் படத்தை போன்றே இந்த படமும் நிச்சயம் பெரிய அளவில் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்காக ஒரு விஷயத்தை செய்யுமாறு ஷங்கர் கமலிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

கமல் கமல் ஹாஸன் தனது அலுவலக படியில் இருந்து தவறி விழுந்ததில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த சிகிச்சைக்கு பிறகு கமல் ஹாஸன் வெயிட் போட்டுவிட்டார். இந்நிலையில் Indian 2 படத்திற்காக வெயிட்டை குறைக்க வேண்டும் என்று ஷங்கர் கமலிடம் தெரிவித்துள்ளார். ஷங்கர் கூறியதை அடுத்து அமெரிக்காவில் இருந்து டிரெய்னரை வரவழைத்து உடல் எடையை குறைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் கமல் ஹாஸன். Indian 2 படத்தில் கமலை மெல்லியவராக காட்ட விரும்புகிறார் ஷங்கர். படத்தில் கமலை முன்பு போன்று மெல்லியவராகப் பார்க்கலாம். கமல் தினமும் உடற்பயிற்சியும், யோகாவும் செய்யும் பழக்கம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கும் என்று ஷங்கர் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அதற்குள் கமல் ஹாஸன் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். கமல் ஓராண்டு காலம் படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம். இந்தியன் 2 படத்தை 2020ம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். ஒளிப்பதிவு பொறுப்பை ரவி வர்மன் ஏற்றுக் கொண்டுள்ளார். கமல் ஹாஸன் அரசியலுக்கு வந்த பிறகு Indian 2 படத்தில் நடிப்பதால் இதில் ஏகப்பட்ட அரசியல் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.படத்தில் நயந்தரா நடிக்கின்றார்?

707 total views, 2 views today

1 thought on “மெல்ல மெல்ல மெலிகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *