2.O ஒரு விமர்சனம்
2.O திரைப்படத்தை தியேட்டரில் போய் பார்க்கவேண்டும் என டிக்கெட் வாங்கி வைத்துக் கொண்டு அழைத்த நண்பனை இப்போது பாராட்டுவதாஇ திட்டுவதா என தெரியவில்லை. தொழில்நுட்பத்தில் வால்பிடித்து 2.0 வை பிரசவித்திருக்கும் இயக்குனர் ஷங்கரை பிரமாண்ட இயக்குனர் என திரையுலகம் கொண்டாடுகிறது. கொண்டாடட்டும் அதில் எனக்கெந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் காக்க வைத்தவனுக்கு காக்கா பிரியாணி கொடுத்த 2.O கதையைத் தான் ஜீரணிக்க முடியவில்லை.
செல்போன்களால் பறவைகள் அழிகின்றன எனும் கவலை கொண்ட மென்மனது காரனை ஒரு கொடியவனாகவும்இ மொபைல் நெட்வர்க் எல்லாம் ஒன்றிரண்டு தான் இருக்க வேண்டும்இ மோனோபோலி கொண்டு வரவேணும் எனும் கார்ப்பரேட் கண்ணீரை ஹீரோவாகவும் சித்தரிக்கும் போதே நெருடல் உள்ளுக்குள் புரண்டு படுக்கிறது.
அக்ஷய் குமாரின் அந்த அரைமணி நேர பிளாஷ்பேக் மட்டும் இல்லையென்றால் ஒரு விமர்சனம் எழுத மெனக்கெட வேண்டிய தேவை இருந்திருக்காது. உணர்வு பூர்வமான அந்த பிளாஷ்பேக் தான் படத்தை இழுத்துப் பிடிக்கிறது. ஆனால் அது கொஞ்ச நேரம் தான் அப்புறம் பழைய குருடி கதவை திறடி கணக்காக கிராபிக்ஸின் கரங்களில் போய் விழுந்து விடுகிறது.
செல்போன்கள் காணாமல் போகும் முதல் காட்சியிலேயே செல்போனில் சிட்டுக்குருவியின் படம் வருகிறது. கதையின் மையத்தை சட்டென ஊகிக்க அது ஒன்று போதுமானதாய் இருக்கிறது. காணாமல் போகும் செல்போன்கள் ராஜாளியாய் வருவதுஇ சாலையாய் வருவதுஇ மரங்களாய் வருவதுஇ மனிதர்களாய் வருவது என விஷுவல் எஃபக்ட்ஸை எதுக்கெல்லாமோ பயன்படுத்திப் பார்த்திருக்கிறார்கள்.
சுஜாதா எனும் கதை சொல்லியின் கால்வாசியைக் கூட ஆயிரம் ஜெயமோகன்களால் நிரப்பி விடமுடியாது என்பதை இந்தப் படம் இன்னொரு முறை உரக்கச் சொல்லியிருக்கிறது. எந்திரனில் நல்ல ரோபோஇ கெட்ட ரோபோ என தொழில்நுட்ப கதைக்களன் இருந்தது. இதிலோ அது ஆவிக்கும்இ பாவிக்கும் இடையேயான போராட்டமாய் மாறி தலையைச் சொறிய வைக்கிறது.
எந்திரனின் போரா மிரட்டியிருந்தார்இ இதிலோ ஆரா என கதை விட்டதில்இ கதை கிழவனின் கைத்தடி போல நடுங்க ஆரம்பித்து விட்டது. செல்போன்களால் பறவைகள் சாவது நிரூபிக்கப்படவில்லையென்றால்இ ஆராவும் நிரூபிக்கப்படவில்லை என்பது தான் உண்மை. ஆனால் ஹீரோ ரோபோட்டிக் சாமியாராகிவிட்டதால் ஸ்வாமிஜிகளுக்கு ஆரா ஐம்பதடி உயரம் வரை இருக்கும் என ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸை விட்டு விட்டு ஆன்மீக இண்டெலிஜென்ஸ்க்கு தாவுகிறார்.
ஆவியை பிடித்து ஒரு பெட்டியில் அடைக்க வேண்டும் என்று ஆரம்பித்தால்இ இதென்ன “மம்மி” பட ஸ்டைலா என்பீர்கள். 3.0 திரையில் வரும்போதோ அடடே நம்ம ஆண்ட் மேன் என்பீர்கள். ரஜினியின் உடம்பில் அக்ஷய் புகுந்து மாறி மாறி பேசும்போது ஆஹா..அன்னியன் வந்துட்டாண்டா என்பீர்கள். கடைசி சண்டைக் காட்சியில்இ ஆஹா நம்ம டிரான்ஸ்பார்மர் என்பீர்கள். பிளாஷ்பேக் கூட அப்படியே இழப்பீடு நிதி தேடி அலையும் மனோரமா ஸ்டைல் என்பீர்கள். எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து குலுக்கி செய்த மிக்ஸ் போல எங்கும் ஒட்டாமல் இருக்கிறது 2.0.
எந்திரன் படத்தில் வந்த பல காட்சிகளின் நீட்சியாக இந்தப் படத்திலும் காட்சிகள் வருவது இயக்குனரின் கற்பனை வறட்சிக்கு ஒரு சான்று. படத்தின் மிகப்பெரிய பலவீனமேஇ வில்லன் அழியக் கூடாது என பார்ப்பவர்கள் மனதில் எழுகின்ற கரிசனை தான். அதனால் தான் ‘வஷீ…மே…’ என்ற எந்திரனின் வசீகரம்இ பறவை போல கத்தி வடிவேலு போல நாக்கை நீட்டும் 2.0 ஹீரோவிடம் வரவில்லை.
நிறைய காட்சிகளில் தெரிகின்றது நாடகத்தனம். எத்தனை யோசித்தாலும் மனதில் எழ மறுக்கின்றன வசனங்கள். எந்த காட்சி புதுமையாய் இருந்தது என யோசித்து யோசித்து தோற்றுப் போகிறது சிந்தனை. வலிந்து திணிக்கப்பட்ட வசனங்கள் சலிப்பையும் சிரிப்பையும் உருவாக்குகின்றன.
‘பறவைக்கு தண்ணி வைங்க’ என கடைசியில் ஹீரோ வசனம் பேசுகிறார். “பறவைகள் சாகாம காப்பாற்றுங்க கள்” என பேசியவர் வில்லனாகிறார். என முரண்களின் மூட்டையாய் இருக்கிறது படம். இத்தனை வருடங்கள் ஹாலிவுட்டில் மெனக்கெட்டவர்கள் கதை திரைக்கதை வசனத்தில் ஒரு ஜெண்டில் மேன்இ ஒரு இந்தியன் என யோசித்திருந்தால் ரசிகர்கள் பிழைத்திருப்பார்கள்.
நல்ல வேளையாக பாடல்கள் வந்து இம்சைப்படுத்தவில்லை. சுஜாதாவைப் போலவே ஈடுசெய்ய முடியாத இழப்பாய் நா.முத்துகுமார் மின்னுகிறார்.
படம் முடியும் தருவாயில் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த நண்பனை தட்டி எழுப்பினேன். டிக்கெட் வாங்கி தந்து உள்ளே உட்கார வைத்தவன் அவன் தான். வெளியே வரும்போது கேட்டான்இ “நான் தூங்கின டைம்ல என்னடா நடந்துச்சு ?”. “எந்திரன் படத்தோட கடைசி காட்சிகள் இங்கேயும் நடந்துச்சு” மூடிட்டு வா என்றேன்
3.0 வருமா ? என்று தூக்கக் கலக்கத்தில் கேட்டான் அவன். என்னப் பாத்து ஏண்டா அந்த கேள்வியைக் கேட்டே ? என கேட்கத் தோன்றியது. அதைக் கேட்காமல்இ ஷங்கர் 3.0 எடுத்தால் அடுத்த 4 வருஷத்துக்கு நமக்கு ஷங்கர் தொல்லை இருக்காது. எடுக்காவிட்டால் எப்பவுமே நமக்கு எந்திரன் தொல்லை இருக்காது என்றேன்.
சுருக்கத்தில் : 2.O வெச்சு செஞ்சுட்டாய்ங்க
–Xavier
826 total views, 2 views today
1 thought on “2.O ஒரு விமர்சனம்”