இப்ப எங்களுக்கு இலங்கையில் என்னடா பிரச்சினை, மச்சான்?
“இப்ப எங்களுக்கு என்னடா பிரச்சினை, மச்சான்?” விக்னேஸ்வரனின் புதிய அரசியல் கட்சி பற்றிய செய்தியை வாசித்து விட்டு, நேற்றிரவு தொலைபேசியில் தொடர்பெடுத்த அருமை நண்பனொருவன் கேட்டான் .
எங்கட அரசியல் பிரச்சினை பற்றி எப்ப கதைக்கத் தொடங்கினாலும் அந்த நல்ல நண்பன் தவறாமல் கேட்கும் கேள்வி “இப்ப எங்களுக்கு என்னடா பிரச்சினை, மச்சான்?”
“விசர்க் கதை கதையாதேடா.. அப்ப என்னத்துக்கு எங்கட பெடியள் சண்டை பிடிக்க போய் உசிரை விட்டவங்கள்? என்று கேள்வியை கேள்வியால் மடக்க முயலுவேன்.
“சரி.. அதான் சண்டை முடிஞ்சுதேடா.. சண்டையிலும் தோத்து தானே போனோம்.. இப்ப எங்களுக்கு என்னடா பிரச்சினை?” நண்பனும் விட மாட்டான்.
“அகிம்சையா போராடி தோற்றபடியா தான் ஆயுதம் எடுத்தனாங்கள்.. வெள்ளைக்காரன் நாட்டை விட்டு போன நாளிலிருந்தே நாங்க எங்கட உரிமைக்காக போராடிக் கொண்டு தானிருக்கிறம்” வரலாற்றுப் பாடம் படிப்பிக்கத் தொடங்குவேன்.
“சரி, அதெல்லாம் இருக்கட்டும், அது முடிந்து போன கதை, இப்ப எங்களுக்கு என்னடா பிரச்சினை, மச்சான்” சுற்றி சுற்றி வந்தும் சுப்பரின் கொல்லைக்குள் தான் அவன் நிற்பான்.
“சண்டை முடிஞ்சு பத்து வருஷமாகுது, எங்களுக்கு அரசியல் தீர்வும் வரேல்ல, ஆமி நிலத்தையும் விடேல்ல, தயடைல் இருக்கிறாக்களையும் விடேல்ல, காணாமல் போன சனத்துக்கும் என்ன நடந்தது என்று தெரியாது, யுத்த குற்றத்திற்கும் விசாரணையும் இல்லை நீதியும் இல்லை..” என்று பிரச்சனைகளை பட்டியலிட தொடங்குவேன்.
“பொறு பொறு பொறடா.. நீயும் அரசியல்வாதி மாதிரி கதையாதே” நண்பன் இடையில் நிற்பாட்டினாலும் எனக்கு பட்டியலிட வேறு பிரச்சினைகளும் இருக்காது. “உதெல்லாத்துக்கும் யாரு தீர்வை தரோணும்.. அதைச் சொல்லு” நண்பன் பத்மவியூகம் அமைப்பான்.
“பேக் கதை கதையாதே… வேற யாரு.. இந்தியா தான்” நானும் நக்கலாக பதிலளித்து பத்மவியூகத்தை சுற்றிச் சுழன்று வருவேன்.
“உன்ர கோதாரி விழுந்த நக்கலை நிப்பாட்டு” நண்பன் கொஞ்சம் கடுப்பாவான். “உதெல்லாத்துக்கும் சிங்கள அரசாங்கத்திடம் தானேடா தீர்வை எதிர்பார்க்கிறம்? நாங்க தனிய கேட்டா தரமாட்டங்கள் என்று இந்தியா, அமெரிக்கா, ஐநா என்று எல்லோரையும் சேர்த்துக் கொண்டு போய் நின்று அவங்களை கேட்கிறம்” நண்பன் குட்டிப் பிரசங்கம் வைப்பான்.
“அவங்க தானே எங்கட இயக்கத்தை அழிச்சவங்கள்.. எங்கட பிரச்சினையை தீர்க்க அவங்களுக்கு அப்ப ஒரு Moral responsibility இருக்கல்லோ” நியாயத்தை டழபiஉயடஆக விளக்குவேன்.
“டேய் லூசா, அவங்களுக்கு Moral responsibility , மxx, மண்ணாங்கட்டி எல்லாம் இருந்திருந்தா, எங்கட போராட்டத்தை அழிக்க துணை போயிருக்க மாட்டங்கள்” நண்பன் pழiவெல் அடிப்பான்.
“அப்ப என்ன செய்ய சொல்லுறாய், நாங்களும் அன்பா கேட்டம்..தரேல்ல, ஒப்பந்தம் போட்டம்.. கிழித்து போட்டாங்கள், அமைச்சர் பதவி எடுத்தும் பார்த்தம்.. சரி வரேல்ல, சத்தியாக்கிரகம் இருந்தம்.. கணக்கெடுக்கேல்ல, இந்தியா வந்திச்சு.. கலைச்சு போட்டாங்கள், கட்டுநாயக்கா ஆனையிறவு என்று உயஅp உயஅpஆ அடிச்சம்.. சீனாவையும் இந்தியாவையும் கொண்டு வந்து இயக்கத்தை ஆணிவேரோடு அறுத்தாங்கள்.. இப்ப ஜெனிவாவில் போய் நிற்கிறம்..” நீட்டி முழங்குவேன்.
“சரி.. நீ பழையபடி பழங்கதை கதை, உன்னை திருத்தேலாது” நண்பன் சலித்துக் கொள்வான். “வேலையில்லாமல் சனம் கஷ்டப்படுது, போராடின பெடி பெட்டையளை கவனிக்க ஆருமில்லை, ழுடு சோதனையில் வடமாகாணம் தான் last, கம்பஸ்க்கு இடம் கிடைக்கேல்ல என்று arms எடுத்த எங்களுக்கு இன்றைக்கு கம்பஸ{க்கு போற பெடி பெட்டையளின் அளவு குறைஞ்சு போச்சு, தண்ணி பிரச்சினை ஒரு பக்கம்..இப்படி இதைப் பற்றி பேசாதே.. ஆனையிறவு அடிச்சம் கிளிநொச்சி பிடிச்சம் கதை சொல்லிக் கொண்டிரு” என்று நண்பன் விளாசுவான்.
“எங்களுக்கு அரசியல் உரிமை வந்தா உதை எல்லாம் ஒரு வரியத்தில fix பண்ணுவம்” நண்பனுக்கு சூடு வைப்பேன். “diaspora இறக்குறம், வடக்கு கிழக்கை அடுத்த சிங்கப்பூராக்குறம்.. இருந்து பார்” கண்களில் கனவு மிதக்க மிதக்க கதைப்பபேன்.
நேற்றிரவு தொலைபேசியில் வந்த நண்பன் மறுபடியும் முதலிலிருந்தே தொடங்கினான், “இப்ப எங்களுக்கு என்னடா பிரச்சினை, மச்சான்?”.
“டேய், விளையாடாதே, அடுத்த கிழமை விஜய் படம் வேற வருதாம்.. நீ வேற கடுப்பேத்தாதே” மீண்டும் விஜய் படம் வரப்போவதாக அறிந்த கணத்திலிருந்து தொற்றிய பீதி கலந்த விசரில் பதிலளித்தேன்.
“ஓமடா.. அதை விடு.. அந்தக் காலத்தில நாற்பது இயக்கங்கள் இருந்திச்சு.. எல்லா இயக்கமும் தனிநாடு கேட்கப் போய் கடைசியாக ஒன்றும் நடக்கேல்ல” நண்பன் பழங்கதை பேசினான். “இப்ப என்னென்றா ஆளுக்கொரு கட்சி தொடங்கீனம்.. ஆரோடு சண்டைக்கு போக போயீனம்?” கடைசியில் நண்பன் நிகழ்காலத்தில் காலடி எடுத்து வைத்தான்.
“எனக்கு தெரியேல்லயடா.. நீயே சொல்லு செல்லம்” கடுப்பேத்தினவை கடுப்பாக்க முயன்றேன்.
“ஹா ஹா ஹா” கடுப்பாவான் என்று பார்த்தால், கலகலவென சிரித்தான். “விக்கியரும் கடைசியில் மகிந்த மாமாவிடம் தான் தாம்பூலத் தட்டோடு போய் நிற்கோணும்..தீர்வு காண அவங்களோடு தான் பேசணும்.. அம்பாந்தோட்டையில் போய் நின்டு நல்லூரில் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் மாவைக்கும் காட்டின மாதிரி சண்டித்தனம் காட்டேலாது.. பம்மிக் கொண்டு தான் கதைக்கோணும்” நண்பனின் நக்கலில் யதார்த்தம் பொதிந்திருந்தது.
“நமக்கு பூகோள அரசியல் விளங்கேல்லயாக்கம் மச்சி” நமட்டுக் கதையை விட தொடங்கினேன். “அடுத்த வல்லரசு சீனாவா அமேரிக்காவா என்ற போட்டியில், ஈழத்தமிழர்கள் ஒரு தீர்மானிக்கும் சக்தியாம், உது விளங்காமல் பேக் கதை பறையுறாய்” நாங்களும் ஏலும் என்று நண்பனுக்கு காட்டினேன். (தமிழ் சினிமா )
“வாஆஆஆஆஆவ்.. அப்பச் சரி அப்பச் சரி அப்பச் சரி” நண்பன் அதிர்ந்தே போனான். “அரசியலை விடுவம், நயன்தாரான்ட அடுத்த படம் எப்ப வருதாம்” நண்பனுக்கு அரசியல் வெறுத்து போயிருந்தது என்று நினைத்தேன்.
“ஐரா என்று பேர் வச்சிருக்கிறாங்கள்.. நயன்தாரா முதன் முதலாக Double acting ஆம்.. “ கடமைக்காக சொல்லிக் கொண்டு போனேன்.
“ஓ.. Double acting.. ஹம்.. அப்ப எங்கட விக்கியரைப் போல என்று சொல்லு” நண்பன் மீண்டும் அரசியல் முருங்கை மரம் ஏறினான்.
“அப்பு.. ராசா.. செல்லம்.. உந்த விளையாட்டுக்கு நான் வரேல்ல” தப்ப முயன்றேன். “தலைவரின் அடுத்த படம் நவம்பரில் வருதாம்.. Can’t wait” ரஜினி படத்திற்கு தாவினேன்.
“எதுடா.. கார்த்திக் சுப்புராஜின் படமோ” நண்பன் அதீத அக்கறை காட்டினான்.
“இல்லைடா.. 2.0…ஷங்கர்ட படம்” என்றேன். (தமிழ் சினிமா )
“ஓ.. அதுவும் விக்கியருக்கு நல்லா பொருந்துது.. we are all going to see 2.0” என்றுவிட்டு ரஜினிகாந்த் மாதிரி சிரித்தான். “அவரும் ஆன்மீக அரசியல், இவரும் ஆன்மீக அரசியல்.. நல்ல பொருத்தம் மச்சி” என்று தமிழ்நாட்டையும் தமிழீழத்தையும் ஒற்றைப் புள்ளியில் இணைத்தான்.
“ஆண்டவரே.. என்னை காப்பாற்றும்” நண்பரிடம் இருந்து என்னை காப்பாற்ற சர்வதேச தலையீட்டை வேண்டினேன். (தமிழ் சினிமா )
“உன்னை கர்த்தர் காப்பாற்றலாம்.. ஆனா எங்கட தமிழ் சனத்தை கடவுளால் கூட காப்பற்ற முடியுமோ தெரியாதுடா” என்ற நண்பன், மீண்டும் பழைய கொப்புக்கு தாவினான், “அது சரிடா..இப்ப எங்களுக்கு என்னடா பிரச்சினை, மச்சான்?” (தமிழ் சினிமா )
“கர்த்தரே முருகா.. ஆமென் அரோகரா” தொலைபேசியை துண்டித்தேன்.
–Jude Prakash
842 total views, 1 views today
1 thought on “இப்ப எங்களுக்கு இலங்கையில் என்னடா பிரச்சினை, மச்சான்?”