செல்வம் ஒரு செல்வாக்கா?

குளிர்சாதனப்பெட்டியில் போதுமான அளவு உணவு இருப்பது செல்வமா? வாடகைப்பணத்தை நினைத்து வருந்தாமை செல்வமா?
அல்லது மூன்று கார் (சிற்றூந்து) வீட்டில் நிற்பது செல்வமா?

இன்று தொழிலாளர் குடும்பத்தில் இருந்து வரும் பல இளைஞர்கள் பொருளாதார வளர்ச்சியை அடைந்து, நடுத்தர- அல்லது, மேற்தர வர்க்கத்தை எட்டுகின்றனர். இதனால் இவர்கள் இன்பத்தின் இமையத்தை அடைந்தவர்களா? ஏன் செல்வந்தர்கள் மீது சமுதாயத்திற்கு ஒரு எதிர்ப்பு நீடிக்கிறது, இவர்கள் எப்படி பரம்பரை பரம்பரையாகவே செல்வந்தர் களாகவே இருக்கின்றனர்?

இப்படியான கேள்விகளுக்கு பதிலளிக்க நாம் சமுதாயவியல் வழியிலே செல்வோம். மொத்தமாக பணமும், முதலாழித்துவமும்தான் (Capitalism) பேரின்பப்பெருவாழ்வைக் கொடுக்கிறதா?

பணம் வாய்ந்தோர், பணம் வாய்ந்தவர்களாகவும், ஏழைகள் என்றும் ஏழைகளாகவே நீடிக்கும் காரணம்: குழந்தைப்பருவத்தில் இருந்தே, பணத்தை எப்படி நிதியாதாரம் செய்வது என்பதை செல்வந்தரின் குழந்தைகள் நாளும் கண்ணுற்றே வளர்கிறார்கள். இவ்வழியே பொருளாதார வல்லமையை பெற்றுக்கொள்கிறார்கள். இப்படியே தொட்டிலிலிருந்து இவ் அனுகூலத்தை காணதவர்கள், பொருளாதார அறிவை முற்றிலும் புதுமையாக பெற்றுக்கொள்ளும் வழியில் செல்வத்தை இழக்கும் வாய்ப்புக்கள் அதிகம். இதனால் பணத்தை அதிக இலாபமாக முதலீடு செய்யலாம் என்பதை அறியாமல், செல்வத்தைப் பெற்ற வேகத்திலேயே அதை இழக்கின்றனர். குறைந்த செல்வத்துடன் நீண்ட காலம் வாழ்ந்தவர்கள், பணம் வந்தவுடன், நிறைவேற்ற விரும்பும் ஆசைகளுக்காக கண்மூடித்தனமாக பணத்தை செலவழித்து விடுகிறார்கள்.

ஊNN தனது இணையத்தளத்தில் வெளியிட்ட செய்தியில், அதிஸ்டலாபச்சீட்டில் வென்றவர்களைச் சந்தித்து அவர்கள் பணப்பரிசை என்ன செய்தார்கள் என வினாவும்போது, பணத்தின் பெரும்பங்கை இவர்கள் தவறான முறையில் முதலீடுகள் செய்து நஷ்டப்பட்டிருப்பதை தெரிவித்தார்கள். அதைவிடவும் நண்பர், உறவினர்களிடம் கடன் கொடுத்து உறவுகளை இழந்திருந்தனர். அச்செய்தியின் விமர்சனங்களில் வாசகர்கள் நஷ்டமடைந்தவர்களைப் பற்றி சிந்திக்காமல், அதிஷ்டலாபச்சீட்டில் தாங்கள் வென்றால், தாம் என்ன செய்வார்கள் எனும் அற்ப ஆசைகளை வெளிப்படுத்தினர். குளியற்தொட்டியில் பணத்தை நிரப்பி, அதற்குள் இருந்து பணத்தில் குளிக்கவேண்டும் என்பதைப்போன்ற கருத்துகளை வெளிப்படுத்தினர்.

இதைப்பார்த்த அறிஞர் Michael Norton தொழிலார் வர்க்கத்தின் அறியாமையைச் எடுத்துக்காட்டுகிறார். (TedEx,2011) திடிரென, கிடைத்த பணத்தை எப்படி திறனாக கையாள்வது என்று அவதிப்பட்டு, விரைந்து முடிவெடுத்து முதலுக்கே மோசமாய் முடிகிறது.

இதைவிடவும், செல்வந்தர்களுக்குக் கிடைக்கும் வணிக இணைப்புக்கள், கல்விவாய்ப்புகள் போன்றவை சராசரி தொழிளாலர் குடும்பங்களுக்கு கிடைப்பதில்லை. தொழிலார்வர்கத்தில் இருந்து மேல் நோக்கும் மக்கள்,

காலங்காலமாக பணம்வாய்ந்தவர்களிடம் இருந்து கட்டுப்பாடுகளையும், அவமதிப்புக்களையும் சந்திக்கின்றனர். செல்வந்தர்கள் பலர், ஏழைகமக்கள் வசதிகளைப் பெற்று, அதை அனுபவிக்கத்தொடங்க: „கண்டபடி செல்வத்தைக் அழிக்கக்கூடாது, முதாலிளித்துவத்தை என்றும் திறனாய்வுடனேயே நேரிடவேண்டும்“ என அனுமதி இன்றிக் தலையிடுவார்கள். இது இரு சமுதாயங்களுக்கிடையே உள்ள சர்ச்சைகளை திடம் செய்கின்றது.

புலம்பெயர்ந்து வாழும் நம் இளைஞர்கள், வெள்ளை இளைஞர்களுடன் ஒப்பிடும்போது நிரந்தரவருவாய் பெறும் காலம் காலதாமதமாகவே கிடைக்கிறது. புலம்பெயர்ந்து வந்த இவர்களது பெற்றோர் எடுத்துகொண்ட கடன்களை தீர்த்தபின்னரே, இவர்கள் தமக்கான செல்வத்தை தேட முடிகிறது.

நிறைவானவாழ்விற்கு பணம் அவசியமல்ல!“ என்று முடிவெடுப்பவர் பணம்வாய்ந்தவராக மட்டுமே இருக்க முடியும் என்னும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் சமுதாய அநீதி (Social Injustice), இன்றுவரை, தரம், இனம், நிறம், பால், வயது, மதம் போன்ற அடிப்படைகளில் எடுத்துச்செல்லப்படுகிறது.

உதாரணம்: ஒரு புலம்பெயர்ந்த நம் நிறத்தவர், வெள்ளையரின் மேலாதிக்கம் கொண்ட நாடுகளில் பல சிக்கல்களுக்கு மத்தியிலேயே முன்னேறமுயல்கிறார். பொருளாதாரரீதியில் முன்னேறியதும், வெள்ளையருக்குச்சமமாக இருந்திடலாம், என்ற நம்பிக்கை இவர்களுக்கு. ஆனால் எத்தகைய செல்வந்தனாக இருந்தாலும், சமுதாய அநீதி இருக்கத்தான் செய்கிறது.

செல்வந்தர்களாக இருந்தாலும், நிறம், பால், மதம் போன்றவையால் ஏற்படும் பாகுபாடுகளை நிச்சயம் எதிர்நோக்கவேண்டியுள்ளது.

நாம் எவ்வளவு செல்வந்தர்களாக இருந்தாலும், ஷாப்பிங் போகும்போது அங்கே வெள்ளையர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுவது உண்மை. மொழி தெரியாதிருந்தால் செவிப்புலனிழந்தவர்களிடம் பேசுவதுபோல உரத்தும், சைகையாலும் பேசுவது இனப்பாகுபாட்டின் காரணமே. இப்படி இனப்பாகுப்பாடு இல்லாவிடின், சமுதாய அநீதி வேறுமுறையில் இடம்பெறுகிறது.

புலம்பெயர்ந்தோர் ஆகிய நாம், பணத்தை முதலீடு செய்யும் வழிகளை மீளாய்வு செய்து, வரும் தலைமுறைகளுக்கு அத்திவாரத்தை திடம் செய்வோமா? வரும் பணத்தை வர விடுவோமா?

— ராம்.பரமானந்தன்

665 total views, 1 views today

1 thought on “செல்வம் ஒரு செல்வாக்கா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *