தன்னைத் தானே அழிப்பது கோபம்
கோபம் என்பது தன்னைத் தானே அழித்து விடும். அதனாலே ஓளவைப்பாட்டி அன்றே கூறினார் ஆறுவது சினம், கோபத்தைத் தணியச் செய்யவேண்டும் என்று. தணியச் செய்யாவிடின் பல பிரச்சினைகளுக்குள் உள்ளாகி விடுவோம்.
நாம் அனைவரும் அறிந்த விடயம் ஒன்று, கோபத்தில் எடுக்கும் முடிவும் செய்யும் செயலும் மிகவும் பிழையானைவையாக இருக்கும். நாம் ஆகையால் ஒருநாளும் சினம் கொள்ளக் கூடாது. ஏன் நாம் தவறான செயல்களைச் செய்யவேண்டும்.
தன்னைத் தானே அழிப்பது மட்டுமில்லாமல் சுற்றி இருப்பவர்களையும் அழிப்பது சினம்.
பொய்யாமொழியான திருக்குறளில் வெகுளாமை என்ற அதிகாரத்தில் சினங்காத்தல் பற்றி திருவள்ளுவர் என்ன அழகாக கூறியிருக்கிறார்.
“செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.”
இக் குறளின் பொருள்: பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?
ஆம், நண்பர்களே நாம் எங்களுக்குக் கோபம் வராமல் காப்பது நற்பண்களில் மிகச்சிறந்ததாகும்.
“மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்.”
இக் குறளின் பொருள்:யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே
தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.
யார்மீதும் சினம் கொள்ளாதீர்கள். ஆனால் கண்டியுங்கள்.”நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற.”
இக் குறளின் பொருள்: முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?
சினம் கொள்பவர்களின் முகத்தில் மகிழ்ச்சி இருக்காது.ஏன் நாம் சினம் கொள்ளவேண்டும்?மகத்தின் அழகோடு இருப்போமே.
“தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்.”
இக் குறளின் பொருள்:ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.
இக்குறள்களைப் படித்தாலே போதுமே. சினம் கொள்ளல் என்ற எண்ணமே தோன்றாது நமக்கு.சினம் என்பது சில சமயங்களில் தற்கொலைகளுக்கும் கொலைகளுக்கும் தூண்டுகிறது. ஒரு கணம் சிந்திக்காமல் எடுக்கும் முடிவுகள் விபரீதமாக முடிகின்றன.
முக்கியமாக நாவை அடக்கிக் கொள்ள வேண்டும். வார்த்தைகளைக் கூறிய பின் கவலைப் படக்கூடாது.தயவு செய்து சினத்தை அடக்கிக் கொள்ளவேண்டும். சினத்தைக் காக்கவேண்டும்.
–றஜினா தருமராஜா
1,252 total views, 1 views today
1 thought on “தன்னைத் தானே அழிப்பது கோபம்”