மனைவி வீட்டில் இல்லாத போது ……….

தாரத்தைத் தாய் வீடு அனுப்பிவிட்டு ஆண்கள் தமது வீட்டில் செய்யும் சின்னவீட்டுச் சில்மிசங்கள் பற்றியும் எமது தாயக கதைகள் பல பேசும். கட்டியவள் அருகே இருக்க காதலிக்குக் கண்ணடிக்கும் செய்கை பற்றியும் அது பேசும். ஆனால் இங்கே ஒரு தாரத்தை வைத்து சமாளிக்க முடியவில்லை. இதற்குள் இன்னொன்றை கட்டி மாய்க்க முடியுமா! என்று புலம்பெயர்ந்து வாழும் சில ஆண்கள் நினைப்பது இன்றைய கலாத்தின் சாரமாகிவிட்டது. அப்படி இருந்தும் எத்தனை வருஷம் தான் ஒரு முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது என்னும் சாட்டில் வேறுமுகம் தேடி தாரத்தையும் தன் பெயர் சொல்லப் பிறந்த வாரிசுகளையும் விட்டுப் போய் கடைசியில் அரசனை நம்பி புருஷனைக் கைவிடும் பெண்கள் நிலைபோல் போனவர்களது கதைகளும் புலம்பெயர்ந்த நம்மவர் கதைகளில் அடங்கும்..

ஆனால் இங்கு எழுதப் போவதோ, எப்போது மனைவி பேரப்பிள்ளைகளைப் பராமரிக்க பிள்ளைகள் வீட்டிற்குப் போவாள் என்றும், மனைவி எப்போது நண்பிகளுடன் சுற்றுலா போவாள் என்றும் காத்திருந்து அப்பாடா என்னுடைய கிடப்பில் கிடக்கும் வேலைகளை எல்லாம் அவள் வருவதற்குள் முடித்துவிட வேண்டும் என்று ஆயத்தமாகும் கணவன்மார் நிலை பற்றியே பேசப் போகின்றேன். பிள்ளையார் பிடிக்க பூதம் வந்ததுபோல் எதுவோ நினைக்க எதுவோ நடப்பததான் நிலையாகிவிடுகிறது.

மூக்குக் கண்ணாடியை மூக்கின் மேல் வைத்து விட்டு ~~இஞ்சப்பா கண்ணாடிய எங்கேயோ வச்சிட்டன் கண்டீரே|| என்று கேட்கும் ஆண்களுக்கு ~~மண்டு மண்டு இங்கே பாருங்கள் மூக்கின் மேல் இருப்பது என்ன? என்று சுட்டிக்காட்டும் நிலை பற்றியும், வீட்டிற்கு வந்து துயஉமநவ கழட்டும்போதே குளிரிலே கைகால்களெல்லாம் விறைக்கிறது கொஞ்சம் கோப்பி போட்டுத் தாருமப்பா என்று சொல்லும் கணவன்மார்களும், இஞ்ச பாருமப்பா வட்டுக் கத்தரிக்காய் தமிழ்க்; கடையில் வாங்கினேன். நல்லாப் பொரிச்சுக் குழம்பு வையுமேன். நன்றாக இருக்கும் என்னும் சுவைப்பிரியர்களும், இதிலே மடித்து வைத்த ளாசைவ ஐக் காணோம் கண்டனீரே? என்று கேட்கும் கணவன்மார்களும் தன்னுடைய மனைவி வீட்டில் இல்லை. வர நாளாகும் என்னும்போது என்ன என்ன சிக்கல்களை அனுபவிக்கின்றார்கள் என்று சிறிது, அலசுவோம்.

பெண் இல்லாத வீடு, வாளியில்லாத கிணறு என்று பல்கேரியன் பழமொழி சொல்லுகிறது. அவள் இருந்தால் இந்த வேலைகள் செய்து முடிக்க முடியாது. இப்போதுதான் ஓய்வு என்று நினைக்கின்ற கணவன்மார்கள், அவள் இருக்கும் போது முடித்திருக்கலாம் என்று முடிவில் எண்ணுவதே உண்மை. தாயிலே கெட்டவள் இல்லை, சாவிலே நல்லது இல்லை என்று தாம் தாயாகும் போது நினைக்கும் பிள்ளைகள் தமது தாயைத் தாம் வாழுகின்ற நாட்டுக்குத் துணைக்கு அழைப்பதும் தமது பிள்ளைகளை வளர்த்தெடுக்கத் தாயின் துணையைத் தேடுவதும் இப்போது புலம்பெயர் கலாசாரமாகிறது.

புலம்பெயர்வாழ்க்கையில் ஆரம்பத்தில் தனியே வாழ்ந்த ஆண்கள் திருமணத்தின் பின் கணவன் மனைவி என்று இருவராக வாழுகின்றார்கள். காலப்போக்கில் பிள்ளைகளைப் பெற்று பலராக வாழுகின்றார்கள். பின் படிக்க வைத்து வளர்த்தெடுக்க ஓயாது உழைத்து பிள்ளைகளுக்குத் திருமண வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்து மீண்டும் இருவராகின்றார்கள். அதன் பின் பேரப்பிள்ளைகளைப் பராமரிக்க மனைவி பிள்ளைகள் வீட்டிற்குச் சென்ற பின் ஆண்கள்; தொடங்கிய இடத்திற்கே வருகின்றார்கள்.

புலம்பெயர்ந்து வந்தபோது வாழ்ந்த பிரமச்சரிய வாழ்வு மீண்டும் தொடங்குகின்றது. சமைக்கத் தெரியாத ஆண்கள் லழரவரடிந உதவியுடன் சமையல் கற்கின்றார்கள். இஸ்திரி போடாத ஆடையை என்றுமே அணியாத ஆண்கள் கசங்கிய ஆடையை துயஉமநவ இனுள் மறைத்து அணிந்து செல்கின்;றார்கள். அடுப்பிலே கறியை வைத்துவிட்டு தமது கடமையைச் செய்யப்போய் கருகிய உணவைப் பார்த்து, என்னசெய்வது என்று பொறுமையுடன் மீண்டும் சமைக்கும் பெண் குணம் சிறிதும் இன்றி, சட்டியைத் தூக்கி எறிந்துவிட்டு Pணைணநசயை நோக்கி நடையைக் கட்டுகின்றார்கள். பிரியாணி உணவெல்லாம் மறந்து பாணும் மாஜரினும் வாய்க்குப் பழகிப் போகிறது. ஸ்பெயின் நாட்டின் பழமொழி ஒன்று சொல்கிறது. ஒரு மனிதனுடைய நல்ல அதிர்ஷ்டமும் துரதிஷ்டமும் அவனுடைய மனைவியே.

சிறிது நாட்கள் பேரப்பிள்ளைகளை கவனிக்கச் செல்கின்ற மனைவி கணவனிடம் சொல்லுவாள், ~~பூமரங்களுக்கு மறக்காமல் தண்ணீர் வார்த்துவிடுங்கள்|| என்று. ஆனால், அந்த மகானுக்கோ அந்த உயிர் இறப்பது பற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல், தொலைக்காட்சியில் பிரான்ஸ் இல் குண்டு வைத்துவிட்டார்கள், மிருகக்காட்சிச் சாலையில் குரங்கு இறந்துவிட்டது என்பதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பார். மரங்காய்ந்து சருகு விழத் தொடங்க, அடப்பாவி இவள் வரப்போறாளே என்ன செய்வது என்று நீரூற்றும் அளவு தெரியாது, தொட்டித் தண்ணியை தொகையாhய் ஊற்றி, லமினாட் நிலமெல்லாம் வடிந்து, அது தன்னுடைய பிடிமானத்தை விட்டுக் கிளம்பத் தொடங்கி, அதற்கு கவனம் எடுத்துத் தன்னுடைய ஒரு நிமிட வேலையை ஒரு வார வேலையாக்கி விடுவார்.

கண்ணுக்குக் குளிராக வீட்டை அழகு படுத்தி, அதற்குள் அலங்காரமாக இருப்பவளே பெண். ஆனால், இந்த அறிவு ஜீவிகளாகத் தம்மைக் கருதும் ஆண்கள், சுற்றிவரக் குப்பைகள் சுற்றியே இருந்தாலும் ஒழுங்குமாறிப் பொருட்கள் தடம் மாறிக் கிடந்தாலும், தன்னுடைய வேலை மட்டுமே முக்கியம் என்று இருந்துவிட்டு நாளைக்குப் பகல் 14.00 மணிக்கு மனைவி திரும்பி வரப்போகும் விமானம் தரை இறங்குகிறது என்றால், இந்த உத்தம புருஷன் கால்கள் தரையில் நிற்காது. சுழடிழசவழ வை மனசுக்குள் பூட்டிவிடுவார். மனைவி வரும் ஆனந்தம் அல்ல. அது ஆத்துக்காரி தரப்போகும் ஆலாபனத்திற்குப் பயந்த மனிசன் வீடு துப்பரவு, ஒழுங்குபடுத்தலில் காட்டும் கவனமேயாகும்.

உலகத்துக்குப் புத்தி சொன்ன திருவள்ளுவரே மனைவி இல்லாவிட்டால் தன்னுடைய நிலை என்ன என்று மனைவிக்காகப் பாடிய வரிகளில்

~~அடிசிற் கினியாளை அன்புடை யாளைப்
படிசொற் பழிநாணு வாளை – அடிவருடிப்
பின்துஞ்சி முன்னுணரும் பேதையை யான் பிரிந்தால்
என்துஞ்சுங் கண்கள் எனக்கு||

என்று பாடியிருக்கின்றார். மனைவி ஒரு வீணை அல்ல. வாசித்து முடித்த பிறகு அதைச் சுவரில் உங்கள் விருப்பப்படி சாய்த்து வைத்து விட முடியாது என்று ரஷ்யா பழமொழி சொல்வது போலவும் தன் மனைவியைக் கௌரவிக்காதவன் தன்னையே கேவலப்படுத்திக் கொள்ளுகின்றான் என்று ஸ்பெயின் நாடு சொல்வது போலவும் நாட்டின் உயர்வுக்கு வீட்டைக்காக்கும் பெண்களின் நிர்வாகமும் முக்கியமானது. ஒரு வீடும், வீட்டு அங்கத்துவர்களும் சரியான முறையில் வழி நடத்தப்பட்டால் ஒரு நாடு சிறப்பான முறையில் இருக்கும்.

~~அபூர்வமான அழகு, அளப்பரிய பண்பு, அபரிமிதமான கருணை, ஆவேசம், அசட்டுத்தனம், அபாரமான ஞாபகசக்தி, அடங்காத ஆசை, அல்பசந்தோசம், அறிவாற்றல் போன்ற பல விஷயங்களின் அதிசயமான கலவை பெண்|| என்று அரிஸ்டோட்டில் சொல்லுகின்றார். என்ன இது ஆண்களின் திண்டாட்டம் சொல்ல வந்து பெண்களைப் புகழ்ந்து கொட்டிவிட்டேன் என்று நினைக்காதீர்கள். ஆணும் பெண்ணும் இணைந்த இராச்சியமே குடும்பம். என்னுடைய இப்பதிவானது ஒரு கை இழந்தால் மறு கை தவிக்கும் தவிப்பின் நிலைமை.

–கௌசி

1,103 total views, 1 views today

1 thought on “மனைவி வீட்டில் இல்லாத போது ……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *