யேர்மனி இனி என்றும் பெண்கள் கைகளில்? கறம் காறன்பௌவர்

யேர்மனியின் மிகவும் பழமைவாய்ந்ததும், பிரதான அரசியல் கட்சியும், தற்போதய ஆளும் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU)Christlich Demokratische Union புதிய தலைவராக கறம் காறன்பௌவர் என்பவர் தெரிவாகியுள்ளார். கம்பேர்க் என்ற பெருநகரில் கடந்த 6-12-18 அன்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் 999 பேர் வாக்களிப்பில் 517 வாக்குகளைப் பெற்ற இவர் கட்சியின் புதிய தலைவராகத் தெரிசெய்யப்பட்டார். கடந்த 18 வருடங்களாக கட்சியின் தலைவராக இருந்த தற்போதய கான்ஸிலர் அங்கலா மேர்க்கல் தலைமைப் பதவியிலிருந்து நன்றிப் பெருக்குடன் விடைபெற்றார்.

ஐரோப்பிய நாடுகளில் அரசியல், பொருளாதார, சமூகநல விடையங்களில் முன்னணியில் இருக்கும்நாடு யேர்மனிதான். அவை மட்டுமல்லாமல் சனத்தொகையில் பெரியநாடு. விஞ்ஞானம் கணனி தொழில்நுட்பம், ஏற்றுமதி வர்த்தகம், வெளிநாட்டு அகதிகளை உள்வாக்குதல் போன்றவற்றிலும் முன்னணி வகிக்கின்றது இந்த நாடு. அரசியல் ஐனநாயகப் பாரம்பரியங்களில் ஒரு சாதக நிலையைக் கடைப்பிடிப்பதும் மக்கள் நலத்தி;ட்டங்களில் அதிக அக்கறை கொண்டதுமான இந்த நாட்டிற்குள் வெளிநாடுகளின் அகதிகள் படை எடுப்பால் நாடே பல நெருக்கடிகளை அண்மைக்காலமாகச் சந்தித்து வருகின்றது.

இதன் தாக்கமாக கடந்த 18 வருடங்களாக ஆட்சித்தலைவராகவும் (கான்ஸிலராக) (CDU)Christlich Demokratische Union கிறிஸ்தவ ஜனநாயகக்கட்சியின் தலைவராகவும் ஐரோப்பாவின் தலைசிறந்த அரசியல்வாதியகவும் விளங்கிய அங்கலா மேர்க்கல் (Angela Merkels) அவர்கள் கடந்த 29.10.2018 அன்று தனைது கட்சித்தலைவர் பதவியை இராஜினாமாச் செய்திருந்தார். அத்தோடு 2021ம் ஆண்டுவரை தான் கான்ஸிலர் பதவி முடிவடைய தான் ஓய்வுபெறப் போவதாகவும் அங்கலா மேர்கல் தெரிவித்திருந்தார்..

கடந்த 6-12-18 அன்று நடைபெற்ற கட்சித்தலைவர் பதவிக்கு மூன்றுபேர் போட்டியிட்டனர்.

999 மத்திய குழு உறுப்பினர்கள் வாக்களித்தனர் போட்டியிட்ட மூன்றுபெரில் 517 வாக்குகளைப் பெற்ற இந்த அம்மையார் கட்சியின் புதிய தலைவராக வெற்றிபெற்றுள்ளார். இந்த அம்மையாரைப் பற்றிய சில குறிப்புக்களைப் பார்ப்போம்..
-9.8-1962ம் ஆண்டு சார்லாண்ட் மாநிலம் (Saarland) வோக்லிங்கனில் (Völklingen) பிறந்தார். 3 பிள்ளைகளின் தாயார்.
-சார்லாண்ட் ரியர் என்ற இடத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளாதாரம் சட்டத்துறைப் பட்டப்படிப்பை முடித்தார். சட்டத்தரணியாகக் கடமையாற்றிப் பின்னர் அரசியல் வாதியாகவும் காலடி வைத்தார்.
-1981ம் ஆண்டு CDU கட்சியில் இணைந்துகொண்டார். 1985 தொடக்கம் 1988 வரை CDU கட்சியின் இளையோர் அணித்தலைவராகவும் பதவி வகித்தார்.

-2011 தொடக்கம் 2018வரை சார்லாண்ட் மாநிலத்தின் CDU கட்சியின் தலைவராகவும் மாநில முதலமைச்சராகவும் கடமையாற்றி 2018 பெப்ரவரி மாதம் CDU கட்சியின் மத்திய பொதுக்காரியதரிசியாக அதாவது கான்சிலர் மேர்கல் தலைவராகவும் இவர் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து 2018 டிசம்பர் மாதம் 6ம் திகதி கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார் கறம் காறன்பௌவர்.
CDU கட்சியின் சிறு குறிப்பையும் இத்தோடு பார்ப்பது பொருத்தமாகும்.

1-சர்வாதிகாரி கிட்லரின் ஆட்சி முடிவுக்குவர நாடு அழிவுண்டு கிடந்தது. மக்கள் மீளெழுச்சிபெற்று வீடுகொண்டு எழுந்தனர். கடும் உழைப்பால் தமது நாட்டைக் கட்டியெழுப்பினர். சமாதான சகவாழ்வை நோக்கிக் காலடி எடுத்து வைத்தனர். ஜனநாயக நீரோட்டத்தில் அதிதீத நம்பிக்கை கொண்ட மக்கள் 26.6.1945ம் ஆண்டுதான் இந்தக் கட்சியை ஆரம்பித்தனர். இந்தக் கட்சியின் முதல் தலைவராக யேர்மனியின் முதலாவது கான்சிலராகத் தெரிவு செய்யப்பட்ட கொன்றாட் அடனோவர் (Konrad Adenaue) அவர்கள் பதவி வகித்தார்.

2-பின்னர் பதவி வகித்த CDU கட்சியின் தலைவர்களின் விபரங்களைப் பார்ப்போம்..
3.2.1949 – 1963 – Konrad Adenauer
3.2.1963 – 1966 – Jakob Kaiser, – Kurt Gerog Kiesinger
3.2.1966 – 1982 – Ludwig Erhard
3.2.1982 – 2000 – Helmut Kohl
3.2.2000 – 2018 – Angela Merkels
6.2.2018 தொடக்கம்  – Kramp Karrenbaur

3-CDU கட்சியின் தற்போதய மத்திய, மாநில, ஐரோப்பிய பாராளுமன்றங்களின் அங்கத்துவத்தை நோக்கினால்…
-யேர்மனிய மத்திய பாராளுமன்றில் – 709 பேரில் 200 பேர் Christlich Demokratische Union கட்சினர்
-யேர்மனிய மாநில பாராளுமன்றங்களில் 1821 பேரில் 527 பேர் Christlich Demokratische Union கட்சினர்.
-ஐரோப்பா பாராளுமன்றத்தில் 96 பேரில் 29பேர் Christlich Demokratische Union கட்சியினர்.
4-யேர்மனிய தற்போதய சனத்தோகை சுமார் 82 மில்லியன்களாகும். 18 வயதிற்கு மேல்தான் இந்த நாட்டில் வாக்குரிமை உண்டு. இப்படியாக வாக்களிக்கத் தகுதியுடையோரில் இந்தக் கட்சியின் அங்கத்தவர்களாக இணைந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 31.12.2017 ஆண்டுக் கணிப்பின்படி 4.25.910 ஆகும்.

710 total views, 1 views today

1 thought on “யேர்மனி இனி என்றும் பெண்கள் கைகளில்? கறம் காறன்பௌவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *