மூன்று மரங்கள்

காட்சி 1 ( மூன்று மரங்கள் ஒரு காட்டில் அருகருகே நிற்கின்றன )
மரம் 1 :
நான் இந்தக் காட்டுல வெயில் மழை எல்லாம் தாங்கி வளர்றேன். எனக்கு ஒரே ஒரு ஆசை தான். நான் இந்த உலகத்துலயே மிகப்பெரிய அரசனோட கட்டிலா மாறணும். எல்லாரும் என்னைப் பாத்து ஆச்சரியப்படணும். அது தான் என்னோட ஆசை. அதுக்கு தான் நான் கடவுள் கிட்டே செபம் செய்திட்டு இருக்கேன்.
மரம் 2 :
என்னோட ஆசை என்ன தெரியுமா ? ஒரு பெரிய கப்பலா மாறணும். தண்ணியில, அலைகளுக்கு இடையே சீறிப் பாயற கப்பலா மாறணும்.
அதுல உலகத்துலயே பெரிய அரசர் எல்லாம் பயணிக்கணும். அதான் என்னோட ஆசை. அதுக்காகத் தான் நான் பிரார்த்தனை செஞ்சுட்டே இருக்கேன்.
மரம் 3
என்னோட ஆசை என்ன தெரியுமா ? நான் வளர்ந்து வளர்ந்து வானம் வரை வளரணும். பூமிக்கும் வானத்துக்கும் இடையே ஒரு பாலம் மாதிரி வளரணும்.
என்னை பாக்கும்போ எல்லாம் கடவுளை எல்லாரும் நினைக்கணும். அது தான் என்னோட செபம்.
( ஒருவர் வந்து மரங்களை வெட்டி வீழ்த்துகிறார் )
மரம் 1 : ஹாய்… சூப்பர் .. நான் இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு பெரிய கட்டிலா மாறப் போறேன். அரசனை சுமக்கப் போறேன்..ஹைய்யா.. ஜாலி.
மரம் 2 : நான் பெரிய கப்பலா மாறப் போறேன். கடல்ல கலக்கலா போகப் போறேன்.. ஹைய்யா.. ஜாலி.
மரம் 3 : நான் வானம் வரை போணும்ன்னு நினைச்சேனே.. எப்படி என்னை வெட்டிட்டாங்க… ஐயோ… அந்த வாய்ப்பு எனக்கு இல்லையா ?
( அடுத்த காட்சி ) முதல் மரத்தை ஒருவர் ஒரு முன்னணையாகச் செய்கிறார்.
மரம் 1 : ஐயோ.. பெரிய கட்டிலா மாறணும்ன்னு நெனச்ச என்ன மாட்டுக்கு புண்ணாக்கு போடற பொட்டியா செஞ்சுட்டாங்களே. நான் வாழ்ந்ததே வேஸ்டா போச்சே. என் செபமெல்லாம் வீணாப்போச்சே… நான் என்ன செய்வேன்
( இரண்டாவது மரத்தை ஒருவர் ஒரு படகாகச் செய்கிறார். )
மரம் 2 :
என்னது ? நான் வெறும் மீன் பிடிக்கிற படகா ? மன்னன் வருவாருன்னு பாத்தா மீனு தான் வருமா ? மீன் எச்சில் பட்டு நாறி நாறித் தான் நான் இருப்பேனா. கப்பலா மாறணும்ன்னும், அரசனை ஏத்தணும்முன் நெனச்சேன்.. என்னை கவுத்துட்டாரே கடவுள்.. நான் என்ன செய்வேன்.
( மூன்றாவது மரம் அப்படியே கிடக்கிறது )
மரம் 3 : வானம் வரை வளரணும்ன்னு ஆசப்பட்டேன். என்னை பாக்கும்போ எல்லாம் கடவுளை மக்கள் நினைக்கணும்ன்னு ஆசைப்பட்டேன்.
ஆனா என்னை துண்டு துண்டா வெட்டி ஓரமா காயப்போட்டிருக்காங்களே… என் செபமெல்லாம் வேஸ்டா போச்சே..
(முதல் தொட்டிலில் இயேசு கிடத்தப்படுகிறார். ஞானிகள் வந்து தெண்டனிட்டு வணங்கு கின்றனர் )
மரம் 1 : ஓ.. வாவ்.. இப்போது தான் எனக்கு புரிகிறது. இவரை விடப் பெரிய அரசர் இங்கே வரப்போவதே இல்லை. அந்த அரசரையே சுமக்கும் பாக்கியம் எனக்குக் கிடைச்சிருக்கே.. ஹைய்யா.. ஜாலி.. நல்ல வேளை நான் அரண்மனைல கட்டிலா மாறல. இப்போதான் கடவுளோட அன்பு புரியுது. என் செபத்தை கேட்டுட்டாரு கடவுள். நன்றி கடவுளே.
( இரண்டாவது மரமான படகில் பயணம் செய்கின்றனர் இயேசுவும் சீடர்களும். கடலில் படகு அலைகிறது. இயேசு எழுந்து காற்றையும் கடலையும் அமைதியாக்குகிறார் )
மரம் 2 : ஓ..மை..காட்… நான் எவ்வளவு பெரிய பாக்கியம் செஞ்சவன். இயேசுவையே சுமக்கிறேன். அவர் தான் மிகப்பெரிய அரசர்ன்னு எனக்கு இப்போ புரிஞ்சு போச்சு. நல்ல வேளை நான் பெரிய கப்பலா மாறல. கடவுளே உம்மோட திட்டமே திட்ட்டம்.. சூப்பர்.
( மூன்றாவது மரம் சிலுவையாகிறது. இயேசுவை அறைகிறார்கள் )
மரம் 3 : ஐயோ.. வானம் வரை போக ஆசைப்பட்டேன். வெட்டிச் சாய்ச்சாங்க. சரி நல்ல பயனுள்ள பொருளா மாத்துவாங்கன்னு பாத்தா, சும்மா ரெண்டு மரத்துண்டா மாத்திப் போட்டாங்க. பரவாயில்ல சும்மா கிடப்போம்ன்னு பாத்தா கொலைகாரப் பாவிங்களோட சிலுவையா என்னை மாத்திட்டாங்களே… ஒரு மனுஷனை வேற என் மேல தொங்கவிட்டு.. ஐயோ… கடவுளே… வாட் ஈஸ் திஸ் ?
( பின் குரல் : மூன்றாவது நாள் )
மரம் 3 : என்னது உலகமே சந்தோசமா இருக்கு. என்னப்பா விஷயம் ? என்னது ? இயேசு உயிர்த்துட்டாரா ? என் மேல அறையப்பட்ட மனுஷன் தானே அவரு ? வாட் ? அவரு கடவுளா ? வாவ்.. நான் கடவுளை சுமந்தேனா ? இனிமே என்னை பாக்கும் போ எல்லாம் மக்கள் கடவுளை நினைப்பாங்களா ?
கடவுளே.. உங்க அன்பே அன்பு. உங்க திட்டமே திட்டம்.. நன்றி கடவுளே.
( முடிவுரை )
இயேசுவோட வாழ்க்கையை தான் நாம பார்த்தோம். ஒரு எளிமையான மாட்டுத் தொழுவத்தில் இயேசு பிறந்தார். தாழ்மையின் சின்னமாக பிறந்தார். நாமும் பணிவானவர்களா இருக்கணும் என்பது தான் இயேசுவோட ஆசை
இயேசு மனிதனாக வந்த கடவுள். இப்படி பல புதுமைகளை செய்திருக்கார். இறந்தவர்களை உயிர்ப்பித்திருக்கிறார், கடல் அலைகளை அடக்கியிருக் கிறார். ஐந்து அப்பத்தை ஐயாயிரம் பேருக்கு கொடுத்திருக்கிறார். இப்படி நிறைய. கடைசியில் அவர் சிலுவையில், கள்ளனாக அறையப்பட்டு இறந்தார். உலகத்தோட பாவத்தை தீர்க்க தான் கடவுள் பூமிக்கு மனிதனா வந்தார். அவர் கடவுளோட மகன் அதனால் தான் ஒட்டு மொத்த உலகத்தோட பாவத்தையும் அவரால தீர்க்க முடிஞ்சுச்சு.
மூணு மரங்களும் மூணு வேண்டுதல்கள் செஞ்சுது. கடைசில கடவுள் அதை நிறைவேற்றினார். ஆனா அவங்க அதை உடனே புரிஞ்சுக்கல. நாமளும் கடவுள் கிட்டே நம்முடைய வேண்டுதல்களை கேட்கும்போ அவர் வேற எதையோ தர மாதிரி இருக்கலாம். ஆனா அது தான் கடைசில நமக்குத் தேவையானதாகவும், கடவுளுக்குப் பிரியமானதாகவும் இருக்கும்
உதாரணமாக இப்போது வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்ய பயன்படுத்தப்படும் ரோபோக்கள் நாளை நமக்கு எதிரான ஆயுதமாக மாறிவிட்டால் என்ன செய்வது ? என்பது ஒரு சின்ன கேள்வி !
ரோபோக்கள் என்றால் பெரிய பெரிய கண்ணாடி மாளிகையில் இருப்பவை எனும் சிந்தனை மாறிவிட்டது. அமேசான் நிறுவனம் வெஸ்டா எனும் ரோபோவை உருவாக்கிக் கொண்டிருப்பதாக செய்திகள் கசிகின்றன. இவை நமது வீட்டு ரோபோக்கள். ஏற்கனவே அலெக்ஸா எனும் கருவியின் மூலம் வியப்பை ஏற்படுத்திய அமேசான் வெஸ்டாவுடன் வரவிருக்கிறது. இனிமேல் வீட்டு வேலைகள் செய்ய ஆட்கள் தேவைப்படாது வெஸ்டாவே செய்யும். குழந்தைகளைப் பராமரிக்கும். வீட்டைப் பாதுகாக்கும். கூட மாட ஒத்தாசை செய்யும். கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லும். இன்னும் என்னென்ன செய்யும் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
கடந்த வாரம் கூகிள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிமுகப்படுத்திய கூகிள் அசிஸ்டெண்ட் ஆர்டிபிஷியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த நிலை. ஒரு மென்பொருள் மனிதரைப் போல சூழலுக்குத் தக்கபடி பேசி ‘அப்பாயின்யிண்ட்மெண்ட்’ புக் செய்வதை அவர் செயல்படுத்திக் காட்டினார்.
மொத்தத்தில் மனிதர்கள் உறவுகளோடு வாழ்ந்த காலம் போய், தொழில்நுட்பத்தோடு வாழும் காலம் வந்திருக்கிறது. நாளை தொழில்நுட்பம் மனிதர்களை அடக்கியாளும் காலம் வரலாம் எனும் அச்சம் எங்கும் நிலவுகிறது. இதை பெரும்பாலான அறிவியலார்கள் ஆதரிப்பது தான் ரோபோக்கள் மீதான திகிலை அதிகரிக்கிறது. இயற்கை மனிதனை வளமாக்கியது, செயற்கை என்ன செய்யும் ? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .
-சேவியர்.
867 total views, 2 views today
1 thought on “மூன்று மரங்கள்”