திருக்குறளும் திருமந்திரமும்

கிறீஸ்த்துவுக்குப் பின் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் திருவள்ளுவரின் திருக்குறளும், கிறீஸ்த்துவுக்குப் பின் நான்காம், ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் திருமூலநாயனாரின் திருமந்திரமும் பல விடையங்களில் கருத்தொற்றுமை மட்டுமல்லாமல் சொற் பிரயோகங்களிலும் ஒன்றுபட்டுக் காணப்படுகின்றன.

திருக்குறளில் அறத்துப்பாலில் பாயிரத்தில் இரண்டாம் அதிகாரத்தில் வான்சிறப்பு பற்றி வரும் பத்துக் குறள்களும் (குறள் எண் 11 இலிருந்து 20 வரை) திருமந்திரத்தில் முதலாம் தந்திரத்தில் பதின்நான்காம் அதிகாரத்தில் வான்சிறப்பு பற்றி வரும் இரண்டு பாடல்களும் (பாடல் எண் 248, 249 ) வான்சிறப்புப் பற்றிக் கூறுகின்றன.

திருக்குறளில் அறத்துப்பாலில் பாயிரத்தில் நான்காம் அதிகாரத்தில் அறம் பற்றி வரும் பத்துக் குறள்களும் (குறள் எண் 31 இலிருந்து 40 வரை) திருமந்திரத்தில் முதலாம் தந்திரத்தில் பதின்நான்காம் அதிகாரத்தில் அறம் பற்றி வரும் இருபது பாடல்களும் (பாடல் எண் 250 இலிருந்து 269 வரையும்) அறம் பற்றிக் கூறுகின்றன.
திருக்குறளில் அறத்துப்பாலில் இல்லறவியலில் எட்டாம் அதிகாரத்தில் அன்புடைமை பற்றி வரும் பத்துக் குறள்களும் (குறள் எண் 71 இலிருந்து 80 வரை) திருமந்திரத்தில் முதலாம் தந்திரத்தில் பதினெட்டாம் அதிகாரத்தில் அன்புடைமை பற்றி வரும் பத்துப் பாடல்களும் (பாடல் எண் 270 இலிருந்து 277 வரையும், 279, 280 பாடல்களும்) அன்புடமை பற்றிக் கூறுகின்றன.

திருக்குறளில் அறத்துப்பாலில் இல்லறவியலில் பன்னிரண்டாம் அதிகாரத்தில் நடுவுநிலைமை பற்றி வரும் பத்துக் குறள்களும் (குறள் எண் 111 இலிருந்து 120 வரை) திருமந்திரத்தில் முதலாம் தந்திரத்தில் இருபத்திமூன்றாம் அதிகாரத்தில் நடுவுநிலைமை பற்றி வரும் நான்கு பாடல்களும் (பாடல் எண் 320 இலிருந்து 323 வரை) நடுவுநிலையைப் பற்றிக் கூறுகின்றன.
திருக்குறளில் அறத்துப்பாலில் இல்லறவியலில் பதினைந்தாம் அதிகாரத்தில் பிறன்மனை நயவாமை பற்றி வரும் பத்துக் குறள்களும் (குறள் எண் 141 இலிருந்து 150 வரை) திருமந்திரத்தில் முதலாம் தந்திரத்தில் இருபத்திமூன்றாம் அதிகாரத்தில் பிறன்மனை நயவாமை பற்றி வரும் எட்டுப் பாடல்களும் (பாடல் எண் 201 இலிருந்து 208 வரை) பிறன்மனை நயவாமை பற்றிக் கூறுகின்றன.

திருக்குறளில் அறத்துப்பாலில் துறவறவியலில் இருபத்தி ஆறாம் அதிகாரத்தில் புலால் மறுத்தல் பற்றி வரும் பத்துக் குறள்களும் (குறள் எண் 251 இலிருந்து 260 வரை) திருமந்திரத்தில் முதலாம் தந்திரத்தில் ஏழாம் அதிகாரத்தில் புலால் மறுத்தல் பற்றி வரும் பாடல் எண் 199 இல் புலால் மறுத்தல் பற்றிக் கூறுகின்றன.
திருக்குறளில் அறத்துப்பாலில் துறவறவியலில் இருபத்தி ஏழாம் அதிகாரத்தில் தவம் பற்றி வரும் பத்துக் குறள்களும் (குறள் எண் 261 இலிருந்து 270 வரை) திருமந்திரத்தில் ஆறாம் தந்திரத்தில் ஐந்தாம் அதிகாரத்தில் தவம் பற்றி வரும் இருபத்திஒரு பாடல்களும் (பாடல் எண் 1624 இலிருந்து 1644வரை) கொல்லாமை பற்றிக் கூறுகின்றன.
திருக்குறளில் அறத்துப்பாலில் துறவறவியலில் முப்பத்தி மூன்றாம் அதிகாரத்தில் கொல்லாமை பற்றி வரும் பத்துக் குறள்களும் (குறள் எண் 321 இலிருந்து 330 வரை) திருமந்திரத்தில் முதலாம் தந்திரத்தில் ஆறாம் அதிகாரத்தில் கொல்லாமை பற்றி வரும் இரண்டு பாடல்களும் (பாடல் எண் 197, 198) கொல்லாமை பற்றிக் கூ றுகின்றன.
திருக்குறளில் அறத்துப்பாலில் துறவறவியலில் முப்பத்திநான்காம் அதிகாரத்தில் செல்வம் நிலையாமை பற்றி வரும் மூன்று குறள்களும் (குறள் எண் 331 இலிருந்து 333 வரை) திருமந்திரத்தில் முதலாம் தந்திரத்தில் மூன்றாம் அதிகாரத்தில் செல்வம் நிலையாமை பற்றி வரும் ஆறு பாடல்களும் (பாடல் எண் 168 இலிருந்து 173 வரை) செல்வம் நிலையாமை பற்றிக் கூறுகின்றன.
திருக்குறளில் அறத்துப்பாலில் துறவறவியலில் முப்பத்திநான்காம் அதிகாரத்தில் யாக்கை நிலையாமை பற்றி வரும் ஏழு குறள்களும் (குறள் எண் 334 இலிருந்து 340 வரை) திருமந்திரத்தில் முதலாம் தந்திரத்தில் இரண்டாம் அதிகாரத்தில் யாக்கை நிலையாமை பற்றி வரும் இருபத்தைந்து பாடல்களும் (பாடல் எண் 143 இலிருந்து 167 வரை) யாக்கை நிலையாமை பற்றிக் கூறுகின்றன.
திருக்குறளில் அறத்துப்பாலில் துறவறவியலில் முப்பத்திஐந்தாம் அதிகாரத்தில் துறவு பற்றி வரும் பத்துக் குறள்களும் (குறள் எண் 341 இலிருந்து 350 வரை) திருமந்திரத்தில் ஆறாம் தந்திரத்தில் நாலாம் அதிகாரத்தில் துறவு பற்றி வரும் இரண்டு பாடல்களும் (பாடல் எண் 1614, 1623) துறவு பற்றிக் கூறுகின்றன.
திருக்குறளில் அறத்துப்பாலில் துறவறவியலில் முப்பத்திஏழாம் அதிகாரத்தில் அவா அறுத்தல் பற்றி வரும் பத்துக் குறள்களும் (குறள் எண் 361 இலிருந்து 370 வரை) திருமந்திரத்தில் எட்டாம் தந்திரத்தில் நாற்பதாம் அதிகாரத்தில் அவா அறுத்தல் பற்றி வரும் பத்துப் பாடல்களும் (பாடல் எண் 2613 இலிருந்து 2622 வரை) அவா அறுத்தல் பற்றிக் கூறுகின்றன.

திருக்குறளில் அறத்துப்பாலில் ஊழியலில் முப்பத்தி எட்டாம் அதிகாரத்தில் ஊழியல் பற்றி வரும் பத்துக் குறள்களும் (குறள் எண் 371 இலிருந்து 380 வரை) திருமந்திரத்தில் ஒன்பதாம் தந்திரத்தில் பதின்மூன்றாம் அதிகாரத்தில் ஊழியல் பற்றி வரும் ஆறு பாடல்களும் (பாடல் எண் 2847 இலிருந்து 2852 வரை) ஊழியல் பற்றிக் கூறுகின்றன.
திருக்குறளில் பொருட்பாலில் அரசியலில் முப்பத்தொன்பதாவது அதிகாரத்தில் அரசாட்சி முறை பற்றி வரும் பத்துக் குறள்களும் (குறள் எண் 381 இலிருந்து 390 வரை) திருமந்திரத்தில் முதலாம் தந்திரத்தில் பதின்மூன்றாவது அதிகாரத்தில் அரசாட்சி முறை பற்றி வரும் பத்துப் பாடல்களும் (பாடல் எண் 238 இலிருந்து 247 வரை) அரசாட்சி முறை பற்றிக் கூறுகின்றன.
திருக்குறளில் பொருட்பாலில் அரசியலில் நாற்பதாவது அதிகாரத்தில் கல்வி பற்றி வரும் பத்துக் குறள்களும் (குறள் எண் 391 இலிருந்து 400 வரை) திருமந்திரத்தில் முதலாம் தந்திரத்தில் இருபதாவது அதிகாரத்தில் கல்வி பற்றி வரும் ஒன்பது பாடல்களும் (பாடல் எண் 290 இலிருந்து 298 வரை) கல்வி பற்றிக் கூறுகின்றன.
குறளில் பொருட்பாலில் நட்பியலில் தொண்ணூற்றுஇரண்டாவது அதிகாரத்தில் விலைமாது பற்றி வரும் பத்துக் குறள்களும் (குறள் எண் 911 இலிருந்து 920 வரை) திருமந்திரத்தில் முதலாம் தந்திரத்தில் ஒன்பதாவது அதிகாரத்தில் விலைமாது பற்றி வரும் ஐந்து பாடல்களும் (பாடல் எண் 204 இலிருந்து 288 வரை) விலைமாது பற்றிக் கூறுகின்றன.
திருக்குறளில் பொருட்பாலில் நட்பியலில் தொண்ணூற்றுமூன்றாவது அதிகாரத்தில் கள்ளுண்ணாமை பற்றி வரும் பத்துக் குறள்களும் (குறள் எண் 921 இலிருந்து 930 வரை) திருமந்திரத்தில் முதலாம் தந்திரத்தில் இருபத்திநாலாவது அதிகாரத்தில் கள்ளுண்ணாமை பற்றி வரும் ஒன்பது பாடல்களும் (பாடல் எண் 324 இலிருந்து 332 வரை) கள்ளுண்ணாமை பற்றிக் கூறுகின்றன.
குறளில் பொருட்பாலில் குடியியலில் நூற்றி ஐந்தாவது அதிகாரத்தில் நல்குரவு பற்றி வரும் பத்துக் குறள்களும் (குறள் எண் 1041 இலிருந்து 1050 வரை) திருமந்திரத்தில் முதலாம் தந்திரத்தில் பத்தாவது அதிகாரத்தில் நல்குரவு பற்றி வரும் ஐந்து பாடல்களும் (பாடல் எண் 209 இலிருந்து 213 வரை) நல்குரவு பற்றிக் கூறுகின்றன.

— (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

910 total views, 1 views today

1 thought on “திருக்குறளும் திருமந்திரமும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *