கலைக்கும் சேவைக்கு வயது ஒரு தடையல்ல

கலாபூசணம் திரு.நடராஜா சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு முதலமைச்சர் விருது

வடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வடக்கு மாகாண கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக உழைத்த வர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கி கௌரவித்து வருகின்றது.
கோப்பாயைச் சேர்ந்த திரு.நடராஜா சிவசுப்பிரமணியம் அவர் களுக்கு கைவினைக் கலைத்துறைக்கு சிறப்பாகச் சேவை யாற்றியமையைக்கு கௌரவித்து, முதலமைச்சர் விருது 2018 வழங்கப்பட்டது.

இவற்றோடு,கலாபூசணம் விருது, ஜனாதிபதிவிருது, செம்புலக் குரிசில் விருது, என பலவிருதுகள் பரிசுகள் இவர் பெற்றுள்ளார்.திருமுருகன்பாமாலை, திருமுருகன் பவளமமலர் திருமா மலர்கள், இந்து திருமணமும் அதன் சிறப்புக்களும், தற்போது ஏறுபடி என்னும் நூல் வெளியீடுட்டுள்ளார்.
தேங்காய் சிரட்டையிலும் பனம்பழத்தின் ஊமலிலும்; அருமையான இயற்கை அழகியல் கைப்பணிப் பொருட்கள் இவரால் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டும் உள்ளது. சுவாமி அலங்காரம், அலங்காரப்பொருள் தயாரிப்பு, சிரட்டை யில் வாத்திய கருவி, அறநெறி வகுப்புக்கள், சமூகசேவை, முதியோர் சங்கம், கோவில் பணி, தேவாரம் பாராணயம், என பலவற்றுள் தம் நேரத்தை செலவு செய்யும் சேவையாளர். இவர் நீர்வை கந்தசாமி கோவில் 2018 வரை உப தலைவர் பதவியில் இருந்து பல பயனுள்ள சேவைகள் புரிந்தவர். கலைக்கும் சேவைக்கும் வயது ஒரு தடையல்லயென தாயகத்தில் வாழ்ந்து காட்டும் இச்சேவையாளனை வெற்றிமணி வாழ்த்தி மகிழ்கின்றது.

613 total views, 1 views today

1 thought on “கலைக்கும் சேவைக்கு வயது ஒரு தடையல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *